
” முரட்டு அடியாள் ” அல்லது “ஆன் ” –
பெயரே வினோதமாக இல்லை….???
எப்போதுமே எனக்கு பழைய சினிமா படங்கள்,
பாடல்கள் மீது பெரும் ஈர்ப்பு உண்டு. (தமிழிலும்,
ஹிந்தியிலும் கூட )
எனக்கு 7-8 வயதாகும்போது ஹிந்தியில் பார்த்த
ஒரு படம், திலீப் குமார், நாதிரா நடித்த
“ஆன் “. அப்போதெல்லாம் டெக்னிக் கலர் படம்
எடுத்தால், ப்ரிண்ட் போட லண்டனுக்கு தான்
போக வேண்டும்… பெரும் செலவு ஆகும்.
இந்தப்படம் நன்றாகவே ஓடியது…. இதை அப்போதே,
தமிழிலும் எடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு
இப்போது தான் தெரிய வந்தது…(உபயம் – ஜெயமோகன் அவர்கள்…)
அதில் ஒரு பாடலின் வரிகள் கீழே –
இதை எழுதியவர் “கம்பதாசன்” …எவ்வளவு அழகாக
ஹிந்தி வரிகளை தமிழில் தந்திருக்கிறார் பாருங்கள்-
அதுவும் 1952-ல்…!!!
“உன்னை என் மனையாளாய் செய்யாவிடில்
ஒரு நாள் என் பெயரை மாற்றியழை –
நான் கருங்கல்லை பாகாய் உருக்கிடுவேன் காண்பாயே
ஒன்றும் கடினமில்லை! “
………………….
.
…………………………………………