
ராகுல் காந்தியின் நடைப்பயணம் மற்றும்
அது தொடர்புடைய இதர விஷயங்கள், விளைவுகள் பற்றி
விரிவாக தனது கருத்தைச் சொல்கிறார் மணி –
மணி எப்போதுமே தனது கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும் பதிவு செய்பவர். அவர் சொல்லும் விஷயங்களில் கொஞ்சம் மிகப்படுத்தல்களும் உண்டு…
எனவே, இங்கே அவர் சொல்லும் கருத்துகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை;
ஆனாலும், அவர் சொல்லும் சில விஷயங்கள் யோசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன …
………….
.
…………………………………….
மணி ஒரு கம்யூனிஸ்ட் ஜால்ரா. பாஜக எதிர்ப்பாளர். ஆர்.எஸ்.எஸ் ஸுக்கு எதிராகப் பேசி வாழ்க்கையை ஓட்டுபவர். அவர் சொல்றார், இது ஒற்றுமைக்கான பயணம் என்று. உயர்ந்த நோக்கமாம். விலைவாசி உயர்வு என்றெல்லாம் காங்கிரஸுக்கு ஜிங்க் சக் போடுகிறார். I am sure he has some ulterior motive in his recent videos. வினோபா பாவேயின் நடைப்பயணத்தின் தொடர்ச்சியாம் ராகுலின் பயணம். வாங்கினது காசுக்குப் பேசவேண்டியதுதானே. இவர் சார்ந்திருக்கும் கட்சிகளெல்லாம் உத்தமர், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசினதில்லை போலிருக்கு. விநோபா பாவே மாதிரி யாத்திரைன்னு சொல்றவர், கேரவன்னு வரும்போது காந்தியை உதாரணமாக எடுக்கிறார். இவரது உளரலுக்கும் அளவே இல்லை.
அக்னிபாத் திட்டத்தில் என்ன குறையை இவர் கண்டுவிட்டார்? 75 சதம், 4 வருடங்களுக்குப் பிறகு அனுப்பப்படுவார்கள் என்று சொன்னதில் என்ன தப்பு? அரசு, ‘வேலையில்லத் திண்டாட்டத்தை ஒழிக்க’ இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறதா? இவர் சார்ந்த கட்சி, ஆசிரியர்களுக்கு வேலை கொடுத்து லட்சக்கணக்கில் சம்பளமும் கொடுத்து, low quality மாணவர்களை produce செய்வது போல எல்லா அரசும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?
அது இருக்கட்டும்… இவர் ஏன், தமிழகத்தில் வெளிமாநிலத்தவரே வேலைக்கு அமர்த்தப்படுவதைப் பற்றிப் பேசவில்லை? ‘மதவெறி’ என்று இவர் பேசுவதும் இந்து எதிர்ப்புச் சொல்தான்.
இந்த ஆள், ராகுல் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றிப் பேசாமல், ஏசு கடவுளா என்று தன் யாத்திரையில் விவாதித்ததைப் பற்றி மூச்சு விடவில்லையே.
வேலையத்த வீணர்களின் வெட்டிப்பேச்சைக் கேட்க நேர்ந்துவிட்டது. ஏதோ புதிதாக ஏதேனும் பேசியிருப்பார் என்று பார்த்தால், அடுத்த ‘புளி’ யாகியிருக்கிறார் மணி.
ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் காங்கிரசுக்கு வலு சேர்க்கும்