
………………………………………..
ஒற்றை சீட்டில் கூட சுயமாக நிற்க தைரியம் இல்லாத –
திமுகவின் கூட்டணியாக,
சுயமரியாதையை விட்டுக்கொடுத்து –
திமுகவின் தயவால்,
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்த, வேல்முருகன் தனித்தமிழ்நாடு பிரிவினை
கேட்போம் என்று மிரட்டுகிறார்.
கீழே, அவர் பேசியதிலிருந்து –
………………..
வேல்முருகன் பரபர!
ஆண்டிமடம் காவல்நிலைய கொள்ளை
சிதம்பரம் காவல்நிலையத்தில் பத்மினி கற்பழிப்பு…
அந்த காவலர்கள் என்ன ஆனார்கள்?
என் சகோதரன் செல்வன் காவல்நிலையத்தில்
அடித்து கொல்லப்பட்டான்..பழிக்கு பழியாக
குள்ளஞ்சாவடியில் தில்லை கோவிந்தன் குண்டுவீசி கொல்லப்பட்ட வரலாறு..
எங்களுக்கு ஆயுதப் பற்றாக்குறை இருந்த போது
ஆண்டிமடம் காவல்நிலையத்தில் இருந்த அத்தனை துப்பாக்கிகளும் எங்கள் தோட்டத்துக்கு வந்தது வரலாறு. இதெல்லாம் வேல்முருகனின் பழைய வரலாறு.
டிஜிபியிடம் கேளுங்க..
- தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி மீது
எந்த போலீசாவது கை வைத்தால்…
எச்சரிக்கை செய்கிறோம்..
போய் கேளு..
என் மாவட்டத்துல எஸ்பியா இருந்தவர்தான் இன்று சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு.. அவர் கிட்ட போய்
மாவட்ட செயலாளராக இருந்த வேல்முருகன் யாரு எப்படியாபட்ட ஆளுன்னு..
அல்லது போலீஸ் கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணனிடம் கேட்டுப் பார்.. ஏன் எங்கள் மாவட்டத்தின் எஸ்பியாக
இருந்து இன்று உளவுத்துறை தலைவராக இருக்கிற
டேவிட்சன் ஆசீர்வாதத்திடம் கேட்டுப் பாருங்க..
ஒரு ரூபாய் லஞ்சம் வாங்காதவன் நான்..
ஜனநாயகப் பாதையில் இப்போது…
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன், முந்திரிகாட்டு
சிங்கம் தமிழரசன் கொள்கைகளையும் வீரப்பனின்
வீரத்தையும் நெஞ்சிலேந்தி அரசியல் செய்கிறவர்கள்
நாங்கள்.. கோழை அரசியல்வாதிகள் அல்ல நாங்கள்.
ஆயுதம் ஏந்தி, தமிழ்நாடு தனிநாடு வேண்டும் என்ற வேட்கையில் இருந்த எங்களை தனித் தமிழீழத்துக்கு
மனித வெடிகுண்டுகளாக, தமிழீழத்துக்கு துணை
நிற்போம் என்பதற்காக களமாடியவர்கள் நாங்கள்..
இன்று ஜனநாயகப் பாதைக்கு வந்து, அரசியல் பாதைக்கு
வந்து, அரசியல் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகிறோம்.
அப்படியான எங்களிடம் அங்க கொடி ஏற்றாதே..
இங்க கொடி ஏற்றாதே என்கிறது போலீஸ்.
மீண்டும் தமிழ்நாடு விடுதலைப் படையா?
அப்படி என்றால் சேலம் போலீசார், தமிழ்நாடு
விடுதலைப் படையை வேல்முருகன் மீண்டும்
ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்கிறதா?
என்ன சொல்றீங்க?
இல்லை தமிழ்நாடு காவல்துறை சொல்லுதா?
அல்லது ஆர்.எஸ்.எஸ், அண்ணாமலை சங்கி
காவல்துறை சொல்லுதா?
வேல்முருகன் ஜனநாயக ரீதியாக எதுக்கு கட்சி நடத்துறான்..போட்டுத் தாக்கு என்று சொல்ல
வருகிறீர்களா? மலைவாழ் மக்களை நேசித்த
வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட, சிலை அமைக்க
தமிழ்நாடு முதல்வர் அனுமதி கொடுக்கனும்.
முந்திரிக்காடும் சரித்திரமும் –
எங்களுக்கு ஒன்னும் இப்படி எல்லாம் கூட்டம் போட்டு பேசித்தான் ஆக வேண்டும் என்பது அல்ல..
வேல்முருகனுக்கும் வேல்முருகன் தம்பிகளுக்கும்
பிரபாகரன் வழியில், தமிழரசன் வழியில்,
வீரப்பன் வழியிலும் களமாடத் தெரியும்.
என்னுடன் 50 பேர் எதற்கும் தயாராக
வரமாட்டீங்களா என்ன?
கட்சி தொடங்கும்போதே, வன்னிக் காடும்,
சந்தனக் காடும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது;
நான் சாவதற்குள் என் முந்திரிக் காடும் இடம் பெற
வேண்டும் என்று சொன்னேன். ஆகையால் எங்களை மரியாதையுடன் நடத்துங்கள்.
……………………………………
-https://tamil.oneindia.com/news/salem/panruti-t-velmurugan-mla-warns-to-re-launch-tamilnadu-liberation-army/articlecontent-pf760430-475398.html
……………………………………
- கூட்டணி கட்சியாக இருப்பதால், தமிழக அரசும்,
சட்டமும் கண்டுகொள்ளாது என்கிற துணிச்சலில்
வேல்முருகன் பேசுகிறார் போலும்…..
வழக்கறிஞரான அவருக்கு,
மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
என்றாலும் கூட, இந்த பேச்சு ஒன்றிற்காகவே,
மத்திய அரசின் என்.ஐ.ஏ. –
( National Investigation Agency – NIA has concurrent jurisdiction which empowers the Central Agency to probe terror attacks in any part of the country, covering offences,
INCLUDING CHALLENGE TO THE
COUNTRY’s SOVEREIGNITY AND
INTEGRITY ….…)
நினத்தால், உடனடியாக அவரைக் கைது செய்து,
சிறையில் அடைக்க முடியும் என்பது தெரியாமல்
போனது எப்படியோ….?
- தான் இருக்கும் கூட்டணியின் அரசு,
சாதாரண மக்களை பாதிக்கும் வகையில்,
மின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி இருப்பதையும்,
மந்திரிகள் லஞ்ச ஊழல்களில் மூழ்கி இருப்பதையும்
கண்டித்து பேச துப்பில்லாதவர், தைரியமில்லாதவர் –
கட்சிக்கொடியை கட்ட, விடவில்லை என்றால்
தனி நாடு கேட்டு பிரிவினை இயக்கம் துவங்குவாராம் …
யாருக்கு பூச்சாண்டி காட்டுகிறார் இவர்… ?
தயவு தாட்சண்ணியம் ஏதுமின்றி – காவல்துறை
இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
………………………………………..
தமிழக அரசு மீதான உச்சநீதிமன்ற விமர்சனம், செந்தில் பாலாஜி மீதான வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், மின்சாரக் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ஜாக்டோஜியோ வுக்கு அல்வா கொடுத்தது, பால் தயிர் கட்டண உயர்வு என்று பெரிய லிஸ்ட் இருக்கிறது. அதிலிருந்து பத்திரிகைகள், பொதுமக்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக, 2ஜி 1.75 லட்சம் கோடி புகழ் ராசாவின் இந்துமத எதிர்ப்புப் பேச்சு, வேல்முருகன் போன்ற பலரின் பிரிவினைவாதப் பேச்சுகள் என்பவற்றை திமுக தூவுவதாகவே நான் அவதானிக்கிறேன். இல்லாவிட்டால் டெபாசிட் பெற முடியாத, கவுன்சிலர் கூட ஆகமுடியாத வேல்முருகன் போன்றவர்கள் இப்படித் துள்ளுவதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? (பின்னால் பொதுக்கூட்ட போஸ்டரில், ஒன்றிய அரசினால் வஞ்சிக்கப்படும் தமிழகம் என்று எழுதியிருக்கிறதே.. அதிலிருந்தே தெரியவில்லையா இவரது நோக்கம்?)
//கண்டித்து பேச துப்பில்லாதவர், தைரியமில்லாதவர் // – ஆனானப்பட்ட கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற கட்சிகளே கொத்தடிமைகளாக ஆன பிறகு, முதுகெலும்பு இல்லாமல் ஆன பிறகு, இவரை மாதிரி துண்டு துக்கடாக்கள் பேசி என்ன ஆகப்போகிறது?
இன்றைய நகைச்சுவை
//நமது வரலாற்றை அறிய ஹிந்தியை கற்க வேண்டும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா//
முதலில் ஹிந்தி மொழியின் வரலாறை உள்துறை அமைச்சர் தெரிந்துகொள்ளவேண்டாமா?
தேவையற்ற பேச்சுக்கள்.