……………………………….

75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில்
எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது
பா.ஜ.க-வுக்குள் அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதாகச் செய்திகள் பரபரக்கின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் ‘நம்பர் 1’ இடத்தில் இருக்கும் மோடியும், ‘நம்பர் 2’ இடத்தில் இருக்கும் அமித் ஷாவும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தங்களின் போட்டியாளரான யோகியை ஓரங்கட்டுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
மோடியா… யோகியா?
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி ஓட ஆரம்பித்துவிட்டன. சமீபகாலமாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ‘வருங்காலப் பிரதமர்’ என்று கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘2024-லும் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான்’ என்று அடித்துச் சொல்லிவிட்டார் அமித் ஷா.
அதனால், ‘டெல்லியை நோக்கிய யோகியின் அரசியல் பயணம் 2025-ல் தொடங்கும்’ என்று யோகி ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதென்ன 2025…?
“75 வயதை அடைந்தவர்கள் கட்சிப் பதவிகளிலும் அரசுப் பதவிகளிலும் இருக்க முடியாது என்பது பா.ஜ.க-வில் எழுதப்படாத விதியாக இருந்துவருகிறது. ஒருவேளை 2024-ல் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
தற்போது 72 வயதாகும் மோடி 2025-ம் ஆண்டு, செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் பதவி யிலிருந்து இறங்கவேண்டி வரும். எனவே, டெல்லியை நோக்கிய யோகியின் பயணம் 2025-க்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும்” என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
ஓரங்கட்டும் முயற்சி!
பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கான தனது பயணத்தை எப்போதோ தொடங்கிவிட்டார் யோகி. கடந்த ஆண்டு,
யோகியின் டெல்லி வருகையையொட்டி, ‘நம்பர் 1’ என்ற வாசகத்துடன் யோகி, மோடி புகைப்படங்கள் இடம்பெற்ற டிஜிட்டல் விளம்பரப் பலகைகளும், சுவரொட்டிகளும் டெல்லியில் பரவலாகக் காட்சியளித்தன. ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அத்தனை விளம்பரப் பலகைகளும் சுவரொட்டிகளும் டெல்லி முழுவதும் வைக்கப்பட்டிருந்தது,
சுதந்திர இந்தியாவில் அதுதான் முதன்முறை என்று சொல்லுமளவுக்கு கவனம் ஈர்த்தன அந்த விளம்பரங்கள். இதையெல்லாம் பார்த்த பிறகே, கட்சிக்குள் அவரை ஓரங்கட்டும் முயற்சிகள் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து டெல்லி பா.ஜ.க வட்டாரத்தில் பேசினோம்.
“பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்கிற ஆசை யோகிக்கு இருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, யோகியை மோடியின் போட்டியாளராகவே நாம் கருதுவோம். ஆனால், அமித் ஷாவும், யோகியைப் போட்டியாளராகக் கருதுகிறார். அவர்களிடையேயான பனிப்போர் நீண்டகாலமாகவே தொடர்கிறது.
ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்குவது பா.ஜ.க-வின் நீண்டகால அரசியல் செயல்திட்டம். அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், அமித் ஷா. அப்படிப்பட்ட அமித் ஷாவை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான தொடக்கவிழாவுக்கு அழைக்காமல் தவிர்த்தார் யோகி. அமித் ஷாவும் சும்மா இல்லை. உ.பி-யில் யோகிக்கு ‘செக்’ வைக்க பல வேலைகளைச் சத்தமில்லாமல் செய்துவருகிறார். உ.பி துணை முதல்வரான கேசவ் பிரசாத் மௌரியா உள்ளிட்ட தன் ஆதரவாளர்கள் பலரை யோகி அமைச்சரவையில் நுழைத்திருக்கிறார் அமித் ஷா.
இதுதவிர, உ.பி பா.ஜ.க-வின் அதிகாரமிக்க பதவியான மாநில பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவியில் தன் ஆதரவாளரான சுனில் பன்சாலை நியமித்தார் அமித் ஷா. யோகியை வெளிப்படையாக எதிர்க்கும் சுனில் பன்சாலை, பா.ஜ.க அமைச்சர் களும் எம்.எல்.ஏ-க்களும் சந்திப்பதை யோகியால் தடுக்க முடியவில்லை. யோகியை மேடையில் வைத்துக்கொண்டே, ‘உ.பி-யில் 2017 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதற்குக் காரணம் சுனில் பன்சால்தான்’ என்று பேசி, பரபரப்பை ஏற்படுத்தினார் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா.
இப்படியாக, யோகிக்கும் மோடி, அமித் ஷா உள்ளிட்ட டெல்லி தலைமைக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டிருக்கிறது” என்கின்றனர் டெல்லி பா.ஜ.க-வினர்.
இந்தச் சூழலில்தான், உச்சபட்ச அதிகாரம்கொண்ட கட்சி மேல்மட்டக்குழுவான ‘பார்லிமென்ட்டரி போர்டு’ ஆகஸ்ட் 17-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அந்தக் குழு வில், மோடி – அமித் ஷா ஆகியோரின் ஆதரவாளர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள்.
தங்களின் போட்டியாளர்கள் என்று கருதும் எவருக்கும் அவர்கள் இந்தக் குழுவில் வாய்ப்பு கொடுக்கவில்லை. வழக்கமாக, கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் தொடங்கி மாநில முதல்வர்கள் வரை இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள்.
அந்த வகையில், கர்நாடகாவிலிருந்து எடியூரப்பா, மகாராஷ்டிராவிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலர் அதில் இடம்பெற்ற நிலையில், மோடிக்கும் அமித் ஷாவுக்கும் அடுத்தபடியாக அதிக செல்வாக்கு பெற்றவர் என்று கருதப்படும் யோகிக்கு அந்தக் குழுவில் இடமில்லை.
கட்சிக்குள் மட்டுமே இருந்துவந்த இந்தப் பனிப்போர், சமீபத்தில் பொதுவெளியிலும் வெளிப்பட்டது –
தேர்தல் இலவசங்களுக்கு எதிராக மோடி பேசியதற்குப் பிறகு, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தார் யோகி. உடனே, ‘மோடிக்கு எதிராக யோகி’ என்று சமூக வலைதளங்கள் பரபரத்தன. மோடியுடன் மோதுவதற்கு யோகியும் முடிவெடுத்துவிட்டதாகவே இதைப் பார்க்க முடிகிறது.
“பா.ஜ.க-வில் உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ் கையில்தான் இருக்கிறது. அவர்கள் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால்,
அத்வானியாக இருந்தால் என்ன…
அமித் ஷாவாக இருந்தால் என்ன… ?
தேர்தல் நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அது” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!
——(ஜூவி இதழில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை…)
பின் குறிப்பு – போட்டியில் 3-வதாக இன்னொரு நபர்
இருக்கிறார் என்பதை விகடன் எப்படி மறந்தது…..?
.
………………………………………..
எடியூரப்பா, இந்த 75 வயதைத் தாண்டிய பின்னரும் முதலமைச்சராக இருந்தார். மோடி அவர்கள் 2024 வெற்றிக்குப் பிறகு, அவராகவே இடையில் விலகி, கடைசி வருடத்தில் யோகியை பிரதமராக அமர்த்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது, யோகிக்கும் ஒரு அமித்ஷா அமைவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லாமல் அதிகாரமிக்க பிரதமர் பதவியை அடைவது, தக்கவைத்துக்கொள்வது எளிதன்று.
வேறு 3 வது, பொருத்தமான நபர், பிரதமர் பதவிக்கு இல்லை.
புதியவன்,
உங்கள் பார்வையை மற்ற பக்கங்களுக்கும்
கொஞ்சம் திருப்புங்களேன்…..!!!
மோடிஜி விலகினால் – அந்த இடத்திற்கு
அமீத்ஜீ வரலாமே …?
அவருக்கு அதற்கான தகுதி இல்லையென்று
நினைக்கிறீர்களா என்ன ….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதுக்கு பதில் எழுதுவது கடினம். அவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமற்றவர் என்றே நான் நினைக்கிறேன்.
Good cop; Bad cop; Both are to be seen as a same coin (yin yang). May be they don’t exist separately.
Not that way. You might have read mafia novels and how their system works. பதவில இருப்பவங்க, நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ளணும். நிறையபேர் தூண்டில்களோடு நிற்பார்கள். அரசியலுக்காகச் சிலவற்றைச் செய்யவேண்டும், கரங்கள் கறை படியக்கூடாது. எத்தனையோ இருக்கின்றன.சில நேரங்களில் தலைவர்களைக் காக்க, மற்றவர்கள் கறையினை ஏற்றுக்கொள்ளவேண்டும். அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தாலே இவற்றை அனுமானிக்கலாம். இருந்தாலும் தலைவர் ஒருவர்தான். மற்றவர்கள், அவர் ‘தலைவராக’ இருப்பதற்கு முழுதுமாக உழைப்பவர்கள்.
பத்திரிக்கைகளின் கற்பனை வளத்திற்கு ஏது எல்லை.
கற்பனை வளம் இருந்தால் எப்படி வேண்டுமானாலும், விஷயத்தை திரிக்கலாம்.நடப்பது ஒன்றாக இருந்தாலும் ,அதற்க்கு சுவாரசியமான அரசியல் காரணத்தை வெளிப்படுத்தலாம். நம்பும் அப்பாவிகளும் இருக்க தானே செய்கிறார்கள். உதாரணமாக admk ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நேரத்தில், வானிலை ஆராய்ச்சி மையம் கடுமையான மழைக்கான RED ALERT கொடுத்தது.இதனால் உள்ளாட்சி தேர்தல் ரத்தும் செய்யப்பட்டது. ஆனால், பிஜேபி தான் admk வை காப்பாற்ற வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு நிர்பந்தம் கொடுத்தது, என்று சுவாரசியமாக நம்ப வைத்தார்கள் .
இந்த யோகி கட்டுரை,போன நாடாளுமன்ற தேர்தலிலே இதே கட்டுரை வெளிவந்ததாக நினைவு.மறுபடியும்,அதே கட்டுரை தூசி தட்டி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.படிக்க நமக்கும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது .
ஆனால் மோடியை போன்ற அதிர்ஷ்டம் யோகிக்கு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.மோடி அவர்கள், தனது எதிரிகளையே, அவர்களுக்கே தெரியாமல் , அவர்களை தனது புகழை பரப்ப பயன் படுத்திக்கொண்டார்.உதாரணமாக உங்களுக்கு நினைவு திறன் இருந்தால், மனிஷ் திவாரி என்ற காங்கிரஸ் அப்பாவி, மோடியை தினமும் கலாய்ப்பதாக நினைத்து கொண்டு, தினம் தோறும் , மோடி சொல்லும் விஷயங்களை திரித்து, சிறுபான்மையினருக்கு வெறுப்பு வரும் வகையில் கொச்சை படுத்தி, கடைசியில் குஜராத்தில் மட்டுமே அதிகம் அறியப்பட்ட மோடியை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார்.மோடியின் இந்திய அளவிற்கான புகழுக்கு, மனிஷ் திவாரியின் பங்கு அதிகம்.இன்றளவும் மோடி அவர்கள்,இதே வழியில் தனது எதிரிகளை விட்டு சிறுபான்மையினரை தூண்டும் வகையில் பேச வைத்து,அதன் மூலம் பெரும்பான்மையினரின் ஆதரவை, தான் ஏதும் பேசாமலேயே, மறைமுகமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்.ஒருவேளை யோகிக்கும் அது போல் அதிர்ஷ்டம் இருந்தால், இப்படி ஒரு அப்பாவி எதிரி கிடைத்தால், அவருக்கும் நிச்சயம் இந்திய அளவில் பெயர் கிடைக்கும்.
பார்க்கலாம்,காலம் தான் எவ்வளவு ஆச்சரியங்களை வெளிப்படுத்துகிறது என்று ..
What about RSS .Has it not been sidelinedGradually it is being made weak