ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

………………………………

ஒருவர், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளக்கூடிய
விஷயங்களை வெளியில் பேசுவதற்கு நிறைய
தன்னம்பிக்கை வேண்டி இருக்கும். அதுவும் புகழின்
உச்சத்தில் இருப்பவர்கள், பேசும்போது நிறைய யோசிப்பார்கள்…

ஆனால், ரஜினியின் பலமே இது தான்.
தன்னைப் பற்றிய எந்த விஷயமானாலும்,
இமேஜைப்பற்றி கவலையே படாமல், வெளிப்படையாகப் பேசுகிறார்….அது அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கிறது.

பொன்னியின் செல்வன் விழாவில் பேசும்போது,
தான் சம்பந்தப்பட்ட – நாம் இதுவரை கேள்விப்பட்டிராத –
சில புதிய, சுவாரஸ்யமான விஷயங்களை பேசி இருக்கிறார்….

கீழே –

ரஜினிகாந்த் இயக்குனர் மணிரத்னத்தை பற்றி
பேசும்பொழுது மிகப்பெரிய நடிகர் என்கிற நிலையில்
இருந்து இறங்கி வந்து தான் மணிரத்தினத்திடம் பட்ட அவஸ்தைகளை நகைச்சுவையாக பல இடங்களில் நகைச்சுவையாக பேசி குறிப்பிட்டிருக்கிறார்.

” தளபதி படத்தில் நடிப்பதற்காக மும்பையில்
இருந்து மைசூருக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னாங்க நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன்.

நேராக மேக்கப் ரூமுக்கு செல்ல முயன்ற போது உதவி இயக்குநர் வந்து “மேக்கப் எல்லாம் இல்லை சார்” என்றார்.

“சார் இப்படியே வர சொன்னாரு” என்று அவர் சொல்ல.

“என்னப்பா சொல்ற – நான் யாரு தளபதிப்பா,
அதுவும் கூட நடிக்கிறது யாரு மம்முட்டி,
சும்மா ஆப்பிள் மாதிரி கலரா இருப்பாரு
அவர் கூட நான் மேக்கப் போடாமல் நின்னா என்ன ஆகுறது? பௌர்ணமி பக்கத்தில் அமாவாசை இருக்கிற மாதிரி இருக்காது…..!!! ???

கொஞ்சம் பவுண்டேஷன் கிரிமாவது கொடுங்கப்பா.. “
என்று வாங்கி பூசிக்கொண்டு சென்றேன்.

அப்போ இன்னொரு உதவி இயக்குனர் ” சார் காஸ்ட்யூம் “
என்று தொளதொளன்னு இருக்கிற டிரஸ்ச கொண்டு
வந்து கொடுத்து போட்டுக்க சொன்னார். அதைப்பார்த்து
நான் ” என்னப்பா இது இவ்வளவு லூசா தொள தொளன்னு இருக்கே – நான் யாரு தளபதிப்பா “-ன்னு
மீண்டும் சொன்னேன்.

” இல்ல சார் டைரக்டர் சார் தான் இதை போடச்
சொன்னார்னு ” சொல்ல அந்த டிரஸ்ச போட்டுகிட்டு
சரி ஷூ எங்கேன்னு கேட்க ” ஷூ இல்ல சார்னு
ஒரு ஹவாய் சப்பல் கொடுத்து இதத்தான் போட்டுகிட்டு வரச்சொன்னார்” னு சொன்னார்.

அடப்போப்பான்னு என்னிடம் இருந்த வாக்கிங் ஷூவை போட்டுகிட்டு செட்டுக்கு போனேன். என்னைப்பார்த்த மணிரத்னம் சார்,

-“ரஜினி சார் சின்ன கரெக்‌ஷன்” என சொல்லி விட்டு
அவரும் உதவி இயக்குநர்களும் தனியா போய் பேசிகிட்டிருந்தாங்க. கேமராமேன் அவருடைய டீமோடு
தனியா பேசிகிட்டு இருந்தார். ஒரு ஓரமா சுஹாசினி
மேடம் நிக்கிறாங்க,

நான் என்னடா நடிக்க வந்து நின்றுவிட்டோம் இவர்கள்
தனியா போயி ஏதோ பேசிட்டு இருக்காங்க அப்படின்னு
நான் யோசிச்சிட்டு இருந்தேன். அப்ப பக்கத்துல
ஷோபனா இருந்தாங்க…

சோபனா எப்பவுமே கேலி கிண்டலோடு
பேசக்கூடியவங்க. என்ன சார் தனியா போய் பேசிட்டு இருக்காங்கன்னு யோசிக்கிறீர்களா? நீங்க இந்த
படத்துக்கு செட் ஆக மாட்டீங்க உங்கள
தூக்கிட்டு கமல்ஹாசனை போடலாமான்னு
யோசிச்சிக்கிட்டு இருக்காங்க ” -ன்னு சொன்னாங்க.

எனக்கு குழப்பமாயிடுச்சு, நானும் பல காட்சிகள் நம்ம
கிட்ட இருக்கிற வித்தையெல்லாம் காட்டி நடிச்சு
காட்டினேன். 10 டேக் 12 டேக் போகுது, மணிரத்னம் நோ, நோன்னு சொல்கிறார். சார் அந்த ஃபீல் வர்லன்னு
சொல்றார். என்னய்யா உங்க ஃபீலு நான் ரொம்ப
டென்ஷன் ஆயிட்டேன்…

உடனே கமலுக்கு போன் போட்டேன் ” என்னப்பா இது
இவர்கூட படம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கே” -ன்னு சொன்னேன். ஒன்னுமே புரியல அப்படின்னு கேட்டேன்.

எனக்கு தெரியும், என்றார் கமல்.
கமல் சொன்னார், ” மணி சார் படம் எப்படி எடுப்பார்னு
எனக்கு தெரியும், அவரு சீன் பற்றி போது அதை
ரொம்ப சீரியஸா உள்வாங்குற மாதிரி இருங்க,
அந்த காட்சியிலேயே அப்படியே ஊறிப்போன மாதிரி
இருங்க… அதுக்கு பிறகு நீங்க நடிங்க அவர் ஓகே
சொல்லுவார் என்றார்…”

அதற்கு பிறகு அதே மாதிரி அவர் காட்சி சொல்லும் போது சீரியசாக சிகரெட் பிடிச்சுகிட்டு ரொம்ப சீரியஸா
உள்வாங்குற மாதிரி உள் வாங்கிட்டு வந்து நடிப்பேன்
அதுக்கு பிறகு அவர் ஓகே சொல்லுவாரு இது கமல்
கொடுத்த டிப்ஸ்” .

“நான் என்கிட்ட இருக்கிற வித்தைகளை எல்லாம்
அதாவது இருக்குற ஸ்டாக் கோபம், அழுகை, வீரம் எல்லாத்தையும் நடிச்சு காமிச்சாலும் என்னதான்
நல்லா பண்ணாலும் ரொம்ப சாதாரணமா
இது வேணாம் சார் வேற மாதிரி பண்ணுவோம்
அப்படின்னு போயிடுவாரு”
என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

………….

ரஜினிகாந்த், பொன்னியின் செல்வன் நாவல்
தொடர்பாகவும் சில விஷயங்கள் குறித்து பேசினார்.

நான் பொதுவாக புத்தகங்களின் மொத்த பக்கத்தை கணக்கு வைத்துக்கொண்டுதான் அதனை
படிக்கத் தொடங்குவேன்.

எல்லாரும் பொன்னியின் செல்வன் கதையை படி படி
என்றார்கள. உடனே எத்தனை பக்கம் என்று கேட்டேன் ..
ஐந்து பாகங்கள் 2000 பக்கங்கள் என்றார்கள்.
அட போயானு விட்டுவிட்டேன் என்றார்.

அதன் பின்னர் தான், 80- களில் ஒரு இதழில்,
பேட்டியொன்றில், பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று கேள்வி ஒன்றை ஜெயலலிதாவிடம் கேட்டார்கள்….

இதற்கு பதிலளித்த மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா, “ரஜினிகாந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பாரு ” -என்று சொன்னார்கள்.
இதை கேட்டதும் நான், அப்படியே குஷி ஆகி விட்டேன்.

அதன் பின்னர் தான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பித்தேன். கல்கி தற்போது இருந்திருந்தால்
அவர் காலில் விழுந்திருப்பேன் .

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படம் எடுக்கிறார்
என்று தெரிந்ததும். இந்த படத்தில் எப்படியாவது ஒரு
சின்ன ரோலிலாவது நடிக்க வேண்டும் என்று, மணிரத்தினத்திடம் சென்று பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கேட்டேன்.

ஆனால், மணிரத்னம், ” உங்க ஃபேன்ஸ் கிட்ட என்ன
திட்டுவாங்க வைக்கிறீங்களா?
இந்த மாதிரி கதாபாத்திரம் எல்லாம் நான் உங்களை பண்ணவிடமாட்டேன், சாரி சார்” -னு சொல்லிவிட்டார்.

இந்த இயக்குநரால் மட்டும் தான் இப்படி சொல்ல முடியும்,
வேறு எந்த இயக்குநராக இருந்திருந்தாலும்
நான் நடிக்கிறேன் என்று சொன்னதும் எப்படியாவது
நடிக்க வைத்து இருப்பார்கள் ….

.
……………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to ரஜினி தரும் சில புதிய சுவாரஸ்யங்கள் ….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  ரஜினி, கமல் என்ற இரு துருவங்களை ஒப்பிடுகிறேன். ஒருவர் கிட்டத்தட்ட சில்வர் ஸ்பூன். திரையுலகில் எல்லாப் பொறுப்புகளிலும் உழைத்தவர். ஆனால் மக்கள் ரஜினியையே சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொண்டார்கள். அது வினோதமாக எனக்குத் தோன்றினாலும், ரஜினியின் ‘உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை’, ‘சாதாரண பொதுஜனத்தின் உண்ர்வு’ அவரை உச்சியில் கொண்டுபோய் வைத்துள்ளது. தன் சொந்த இமேஜைப் பார்க்காமல் உண்மை பேசும் ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது (பொலிட்டிகள் stand எடுத்தவர்கள் தவிர)

  இருவருக்கும் சிறிய வயது என்றால், ரஜினி ஆதித்யனாகவும், கமல் அருள் மொழியாகவும் நடித்திருக்கலாம்.

 2. Ram சொல்கிறார்:

  பொன்னியின் செல்வனில் மிகவும் சுவாரஸ்யமான
  பாத்திரம் வந்தியத் தேவன் தான்.

 3. Vicky சொல்கிறார்:

  With all due respect, the transcript is poor and spoilt the actual speech

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.