…………………………….

……………………………….
காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்
வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்
அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமான
பொன்னியின் செல்வன் தான்…..
10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கி
வார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –
“பொன்னியின் செல்வன்” …
இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,
என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்
என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்….
ஆனால், ஏற்கெனவே வேறு யாரோ ஒருவர்
அந்தப் பெயரை கவர்ந்து விட்டார். எனவே எனக்கு
கிடைக்கவில்லை….
பிறகு – கொஞ்சம் யோசித்து – அதற்கு மாற்றாக, அதே பொருளில் வரும் “காவிரிமைந்தன்” -ஐ
தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
நீண்ட நாள் கனவு….
மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படம் ….
மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன்.
உலக அளவில் பழந்தமிழர் பெருமையை
எடுத்துச் செல்லும் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற
உளமார வாழ்த்துவோம்….
……………
.
…………………………………………
அண்ணா.அது என மகன் கார்த்தி தான்.1988ல் அவன் மெயில் ஐ.டி யே அதுதான்.அவன் கனவே பொன்னியின் செல்வன் திரை படம் எடுக்க வேண்டும் என்பதுதான்.Lord of the rings படம் போல் மிக பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்ற வெற்றியுடன் இருந்தான்.Dell ல் வேலை செய்து(senior சாப்ட்வேர்என்ஜினியர்) ஆக இருக்கும போது 23 ஆவது வயதில் என்னை விட்டு மேல் உலகம் சென்று விட்டான்.அவனுடைய blog ‘ ‘vijayanagar blogspot .com ‘ ‘.
அன்புச் சகோதரி கலாகார்த்திக்,
இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவம்/செய்தி.
நான் 2009-ல் தான் இந்த வலைத்தளத்தை துவங்கினேன்.
அப்போது தான் இதற்காக தனி மெயில் ஐ.டி.யைத்
(பொன்னியின் செல்வன்)தேடினேன்….
இப்போது தான் தெரிகிறது அதை ஏற்கெனவே
1998-லேயே உங்கள் மகன் கார்த்திக் வசப்படுத்திக்கொண்டு
விட்டாரென்று…
உங்கள் மகனும் பொன்னியின் செல்வனுடன்
அமரத்துவம் பெற்று விட்டார்…
கவலையை விடுங்கள்.. உங்கள் மகன் ஏற்கெனவே
உங்கள் குடும்பத்தில் வந்து பிறந்திருப்பார்…. அவரது
மறைவிற்குப் பிறகு உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களை,
இந்த பார்வையுடன் அலசிப்பாருங்கள். கண்டு கொள்வீர்கள்.
நான் மறுபிறவியில் தீவிரமான நம்பிக்கை உடையவன்.
அதற்கான அனுபவங்களும் எனக்கு உண்டு.
நாம் பற்றற்ற நிலைக்கு செல்லும் வரையில்,
மீண்டும் மீண்டும் இங்கே தான் வந்து
பிறந்துகொண்டிருப்போம்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அண்ணா 1998ல்.1988 என்று தவறுதலாக type ஆகி விட்டது
கொஞ்சம் யோசனையோடுதான் எழுதுகிறேன். இந்த பொன்னியின் செல்வன் கதையை எடுக்கச் சரியான ஆள் ராஜமௌலிதான். அந்தக் கதையை முழுதும் உள்வாங்கி, அதற்குத் திரைக்கதை எழுதி, பிரம்மாண்டமாக ஆக்கி எடுக்க அவரால்தான் முடியும் (பாஹுபலி போல).
மணிரத்னம், பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து எடுக்கிறார். அதிலும் நம் மனதில் பதிந்துவிட்ட பாத்திரங்கள், கதைக்களனை. நாவலை வாசித்தவர்களைத் திருப்திப்படுத்துவது மிக மிகக் கடினம். அதிலும் நாம் நம்பும் மரபுகளில் காம்ப்ரமைஸ் செய்திருந்தாலோ இல்லை மாற்றியிருந்தாலோ அது பெரிய அதிருப்தியை உண்டாக்கும். மணிரத்னம் எடுத்த ‘இருவர்’ படம் போன்று ஆகிவிடத்தான் வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. பாஹுபலி போன்றதல்ல பொன்னியின் செல்வன். வாழ்ந்த பேரரசர்களின் கதை. அவர்கள் செய்த பணிகள் இன்னும் நாம் காணக்கூடியவை. இடங்களெல்லாம் இன்னும் இருப்பவை.I hope I am understood correctly.
எனக்கு அவர்கள் (சோழ அரசர்கள்) சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் (கோவில்களுக்கும்) செல்லும்போது ஏற்படும் புல்லரிப்பு வர்ணிக்க முடியாது. பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோவில், பழையாறையில் உள்ள முற்றுப்பெறாத (கோபுரம் பாதியாக நிற்கும்) சிவன் கோவில், பெரிய கோவில், இன்னும் பலப் பல இடங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பெரியகோவிலில், இராஜ இராஜ சோழன் நுழையும் வாயிலின் அருகில் அவனது மெய்கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டினைக் கண்டு, அதனைப் படித்தபோது நான் அடைந்த பெருமிதம் எழுத்தில் வடிக்கவொண்ணாது. என்னைவிட தமிழர் மரபில் பெருமிதம் அடைபவர்கள், knowledgeable persons ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் உண்டு.
புதியவன்,
ஏனோ தெரியவில்லை…உங்களிடம் பெரும்பாலும்
எதிர்மறை கருத்துகளே உருவாகின்றன.
உங்கள் சிந்தனையே அப்படித்தானோ…?
(Most of the times – You reflect only pessimistic views..)
கல்கி எழுதிய மாதிரியே எழுத்துக்கு எழுத்து
அப்படியே பொன்னியின் செல்வன் திரைப்படமும்
இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதுமில்லை.
தவறான பிம்பத்தை உண்டாக்காமல் இருந்தாலே
போதுமானது.
மணிரத்னம் ஒரு மிகச்சிறந்த இயக்குநர்/படைப்பாளி.
அவர் தமிழ்நாட்டில் பிறந்திருப்பது நமக்கு
பெருமை.
அவர் படைப்புகள், வர்த்தக ரீதியாக,
வசூலில் தோல்வி அடைந்திருக்கலாம்.
ஆனால் தரம் குறைந்த படங்களை
அவர் உருவாக்குவதில்லை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பொன்னியின் செல்வன் கதையை முடிந்தவரை சிதைக்காமல் எடுக்க இயக்குனருக்கு மிகப்பெரிய முகவரி தேவை. அது மணிரத்னத்திடம் இருக்கிறது. கமர்ஷியலாக காம்ப்ரமைஸ் பண்ணாமல் எடுக்கவும் இயக்குனரின் பெயர் தேவை இருக்கிறது. அதுவும் மணிரத்னத்திடம் இருக்கிறது.
எனவே, நல்ல ஒரு படைப்பு வெளிவரும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்!
மணிரத்னம் படங்களில் எங்கு வசனம் தேவையோ அங்கு இருக்கும்.
அதுவும் பொன்னியின் செல்வனில் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் இருக்கும் .
கடம்பூர் மாளிகை, சூடாமணி விஹாரம் ,கோடியக்கரை கலங்கரை விளக்கம் ,
வீராணம் ஏரி , வந்தியத்தேவன் குதிரை காட்சிகள் திரையில் அதுவும் imax திரையில்
எப்படி இருக்கும் என காண ஆவலாக உள்ளேன்.