
…………………………………….
பின்னூட்டம் எழுதக்கூடிய நண்பர்களுக்காக ஒரு
விஷயத்தை முன்னதாகவே தெளிவு படுத்தி விடுகிறேன்.
ஒரு சிலர் தனக்கு பிடிக்காதவர்கள்/வேண்டாதவர்கள் –
சொல்வதை கேட்கக்கூட மாட்டார்கள்… எழுதுவதை
படிக்கக்கூட மாட்டார்கள்… “இவர் பெரிய யோக்கியரா…?”
என்று புறந்தள்ளி விடுவார்கள்….
என் கொள்கை – “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்,
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்பதே…
பெரும்பாலான விமரிசனம் தள வாசகர்களுக்கும் அந்த மனோநிலை உண்டு
என்று நம்புகிறேன்.
ப.சி. சொல்கிறார் என்பதற்காக எதையும் நாம் தள்ளிவிடவும்
மாட்டோம்…. அப்படியே ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்….!!!
கீழே ஒரு பத்திரிகைச் செய்தி –
1000 கோடிக்கு “ஹேர்கட்” யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா? ப.சிதம்பரத்துக்கு வந்ததே கோபம்! என்னாச்சு?
Updated: Saturday, August 27, 2022, 17:45 [IST]
…………..
டெல்லி : வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ‘1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?’ என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான
ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் தங்கள்
தொழிலை விரிவு செய்வதற்காகவும், புதிய
முதலீடுகளுக்காகவும் இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து கடனை முறையாக வசூலிக்காமல் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
அதே நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை
எனவும் தற்போதுள்ள சூழலில் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறி இருக்கிறது.
இந்த நிலையில் தான் தற்போது சுமார் 517 என்ற எண்ணிக்கையிலான கடன் கணக்குகளில்
5 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகள்
தள்ளுபடி செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதோடு இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ப.சிதம்பரம் ஏற்கனவே மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் விமர்சித்து வரும் நிலையில், வங்கிகள் கார்பரேட் நிறுவனங்களின்
கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து –
‘1000 கோடி ரூபாயில் ஹேர்கட் செய்வதை கேள்விப்பட்டுள்ளீர்களா?’ என்று, ட்விட்டர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில்
பதிவிட்டுள்ள அவர்,
” இதற்கு முன் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின்
கடன்களை ஒரு வித நடுக்கத்துடன் தள்ளுபடி செய்யும்.
ஏனெனில் ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அவர்களை கடுமையாக கேள்வி கேட்கும்.
ஆனால் தற்போது திவால் செயல்முறையின் மூலம்
வங்கிகள் எந்தவித தயக்கமும் இன்றி வங்கிகளின்
கடன்களை தள்ளுபடி செய்கிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடன் தள்ளுபடிக்கான தீர்மானத்தை அங்கீகரித்ததால் நிறுவனங்கள் கடனில்
இருந்து விடுவிக்கப்படுகின்றன. வங்கிகள் இதை
“ஹேர்கட்” என அழைக்கின்றன. இதேபோல
517 வழக்குகளில் 5,32,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு வழக்கிற்கு
(அதாவது ஓரு ஹேர் கட்’டிற்கு )
1000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது.”
மத்திய அரசு, இந்த கடனை யார் சாங்க்ஷன் செய்தது என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு உடனே ஜாமீனில் வரமுடியாத ஆயுள் தண்டனை, கடன் வசூலாகும் வரை, கொடுக்கவேண்டும், அப்போதைய நிதி அமைச்சர் மற்றும் அவர் குடும்பம் உட்பட. இதைச் செய்யத் தவறுவதால்தான் வாராக்கடன்கள் பெருகிவிட்டன. அதுவும் தவிர, கடன் வாங்கிய கம்பெனி போர்ட் மெம்பர்கள், தலைவர்கள், அவர்களது குடும்பம் முழுமைக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து திஹார் ஜெயிலில் அடைத்த பிறகு, எப்படி கடன் வசூல் செய்வது என்று யோசிக்கணும்.
மத்திய அரசு, மல்லையாவின் பசங்களையும் குடும்பத்தையும் ஜாமீனில் வரமுடியாதபடி கடுங்காவல் சிறைத்தண்டனை கொடுத்திருந்தால் எப்போதோ மல்லையா ஒழுங்காக பணத்தைத் திருப்பிக்கொடுத்திருப்பார். அந்தப் பணத் திமிர்தானே அவர்களை கிரிக்கெட் ஃப்ரான்சைஸ், தீபிகா படுகோன் போன்ற அழகிகளின் தொடர்புகளுக்குக் காரணமாக இருந்தது.