
( அமைச்சரின் புதிய 8-க்கான புதிய விளக்கம்…..!!! )
………………………………..
ஏற்கெனவே அருமையான சென்னை-பங்களூர் சாலை
இருக்கும்போதே,
அதிமுக ஆட்சியில் ” சென்னைலிருந்து சேலத்துக்கு “
புதிதாக 8 வழிச்சாலை திட்டம் ஒன்றை அறிவித்தார்
எடப்பாடியார்…
தங்களைச் சேர்ந்த “பலருக்கு” அது வாழ்வும், வளமும்
தருமென்று நினைத்தார் போலும்…
அவர் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டன
திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும்….
கடுமையான எதிர்ப்பு…
பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கிராமவாசிகளும்
போராட்டத்தில் ஈடுபட்டனர்….
திட்டம் செயல்படுத்த துவங்குவதற்குள் –
2021 – மே வந்தது….
ஆட்சி மாறியது…
குப்பர் போனார் – சுப்பர் வந்தார்….!!!
எதிர்க்கட்சியாக இருந்தபோது இதை கடுமையாக எதிர்த்த,
திமுக, இந்த திட்டத்தை நிச்சயம் கைவிட்டு விடும்
என்றே அனைவரும் – குறிப்பாக – பாதிக்கப்பட்ட
விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்…..
ஆனால், காசு சம்பாதிக்கும் ஆட்கள் தான் மாறினார்களே
தவிர…. திட்டம் எங்கும் போகவில்லை….
திமுகவைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள்
மற்றும் இரண்டு எம்எல்ஏ-க்கள், ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி
மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்
இரண்டு பேரைக்கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து
புதிய திட்ட வரைவு பெற( …!!!)ப்பட்டது.
சென்னையிலிருந்து சேலத்துக்கு – போடப்பட்ட திட்டத்தை
தானே எதிர்த்தார்கள்…?
” சென்னையிலிருந்து சேலத்துக்கு” பதிலாக –
” சேலத்திலிருந்து சென்னைக்கு ” –
புதிய எட்டுவழிச்சாலை திட்டம் போட்டால்….?
வாக்குறுதி கொடுத்தபடி “பழைய 8 ” கைவிடப்பட்டது…!!!
மக்களின் பாதிப்பு தடுக்கப்பட்டு விட்டது….!!!
புதிய 8-ல் ஊர்கள் இடம் மாறி விட்டன….
புதிய திட்டம்….
புதிதாக டெண்டர்கள்…
புதிய காண்டிராக்டர்கள்…
புதிதாக பலருக்கு காசு சம்பாதிக்க வழிகள்….
மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரையில்,
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடும்
இந்நாட்டு “குடிமக்கள்” இருக்கும் வரையில் –
நம் தலையில் மிளகாய் அரைப்பதில்
இந்த அரசியல்வாதிகளுக்கு எந்த சிரமும் கிடையாது …!!!
.
…………………………………………..
நாங்கள் என்றிலிருந்து ஒவ்வொரு குடும்பப் பெண்மணிக்கும் மாதம் 1000 ரூபாய் தருவோம் என்று சொன்னோமா? ஐந்து வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் அதனைச் செய்வோம்.
தேர்தல் அறிக்கை தயாரித்தது டி.ஆர்.பாலு. அவரிடம் கேளுங்கள். திமுக அரசையோ அல்லது முதல்வரையோ, ஏன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கேட்காதீர்கள்.
ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது. – உதயநிதி, ஸ்டாலின்
முதல் கையெழுத்தே மதுவிலக்குதான். இதனை உறுதியாகச் சொல்லுகிறேன். – கனிமொழி எம்.பி.
இது மாதிரி பெரிய லிஸ்டே எழுதலாம். இதில், இந்தப் பத்திரிகையாளர்கள் (so called) வாயைப் பொத்திக்கொண்டு கொத்தடிமையாக இருக்கிறார்கள். பத்திரிகைகள் புளுகை எழுதுகின்றன. உருப்படியான எந்த விவாதத்தையோ, தமிழக மக்களுக்கு நன்மை தருமாறு எதனையுமோ சொல்லுவதில்லை. தேசத் துரோகிகள் என்ற பட்டத்திற்குத் தகுதியான பல NGOக்கள், போன இடமே தெரியவில்லை. உதயகுமாரன்கள், ஜெயரஞ்சன் புளிகள், மதுவிலக்குக்காகப் போராடிய போலிப் போராளிகள் இவர்களெல்லாம் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?
இந்த லட்சணத்தில் எட்டு வழிச் சாலையாவது, புதிய விமானநிலையமாவது… எதை மத்திய அரசு சொன்னாலும், கொத்தடிமையாக முதுகு வளைத்து வணங்கி ஏற்றுக்கொள்ளும் திமுக அரசு இருக்கும்வரை…….. எழுதி என்ன பிரயோசனம்?
‘தேசிய கல்வி கொள்கையை தி.மு.க., அரசு எதிர்க்கவில்லை; எந்த ஒரு எதிர் கருத்தையும் இதுவரையில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யவில்லை,” என, மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறினார். – Today’s news
(கொத்தடிமை) முத்தரசன் அவர்கள் சொல்கிறார், எட்டு வழிச் சாலையை திமுக தலைமையிலான கூட்டணி எதிர்க்குமாம், மாநில அரசு எதிர்க்காதாம். 25 கோடி (லஞ்சத்துக்கும் இவங்க வாங்கியதற்கும் வித்தியாசம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை) வாங்கினதுனால இப்படி திமுகவுக்கு காவடி எடுக்க வேண்டியிருக்கு இந்த முத்தரசன் வகையறாக்களால்.
இந்த முறை மன்னார்குடியில் அந்த ஊரிலிருக்கும் டாக்சி ஓட்டுநரிடம் பேசிக்கொண்டிருந்தபோது (அவர் பல ஊர்களுக்கும் டாக்சி ஓட்டுபவர்), சேலம்-சென்னை ரோடில் டிராஃபிக்கே மிகவும் குறைவு. அங்கு 4 வழிச் சாலையே அதிகம். எதற்காக 8 வழிச் சாலையைப் போடுகிறார்கள் என்பதே மர்மம் என்றார். சேலம்-சென்னை வழியாகப் பயணிப்பவர்கள்தாம் சொல்லணும். எனக்கென்னவோ பெரிய தொழிற்சாலையோ அல்லது ஏதேனும் பிஸினெஸோ அல்லது வெளிநாட்டுக் கம்பெனியோ அந்த ஏரியாவில் வரப்போகிறது, தனியார் ஒருவர் (அதானி?) அதனை நடத்தப்போகிறார். அதற்கான முன்னேற்பாடோ என்று சந்தேகம்.
இந்த 8 வழி சாலை என்பதற்கு பின்னே பெரிய கைகள் இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் ஆட்சி மாறினாலும் தடையின்றி திட்டம் பயணிக்கிறது.
மாநிலமெங்கும் பற்பல சாலைகளை பழுது பார்த்தாலே போதும். திருவண்ணாமலையிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் முதுகு வலி வராமல் பயணிக்க முடியுமா? மாநிலமெங்கும் பற்பல சாலைகள் வெறும் 2 வழி சாலைகள். அதையெல்லாம் செய்யாமல் இந்த 8 வழி சாலை பின்னால் தொங்க என்ன காரணம்?