
…………………………
பொதுவாக மனிதரில் 100 சதவீதம் நல்லவராகவோ
அல்லது 100 சதவீதம் கெட்டவராகவோ யாரும்
இருப்பதில்லை; நல்லதும் கெட்டதும் கலந்தவர்கள்
தான் எல்லாருமே…
நல்லது கூடுதலாக இருப்பவர்கள் மற்றவர்களால்
அதிகம் விரும்பப்படுகிறார்கள்….
கெட்டது கூடுதலாக இருப்பவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் குடும்பத்தைப்
பொருத்தவரை பாஸிடிவ் அதிகமாகவும்,
பொது வாழ்க்கையில் எதிர்த்திசையிலும் இருப்பதாக கருதப்பட்டார்.
எனவே, அவரைப்பற்றி உயர்வாகப் பேசினால்,
திமுக கட்சியினர், திமுக அனுதாபிகள்,
அவரால் தனிப்பட்ட முறையில் பயனடைந்தோர் ஆகியோரைத்தவிர – அதை ரசிக்கக்கூடிய பொதுமக்கள்
அதிகம் இருக்க மாட்டார்கள்.
இங்கே ஒரு சுவாரஸ்யமான காணொளி –
கருணாநிதி அவர்களின் நீண்டநாள் சகாவும்
அவரைப்பற்றிய நல்லது கெட்டது அனைத்தையும்
அறிந்தவருமான திரு.துரைமுருகன் அவர்கள்
மனம்விட்டு பேசுகிறார். ( பொதுவெளி என்பதால்,
அவர் ஒரு பக்கத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறார்.
தனியாக – நெருங்கியவர்களிடம் உரையாடும்போது,
மற்றொரு பக்கமும் சகஜமாக வெளிப்படும்
என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்……!!! )
நான் இந்த காணொளியை இங்கே பதிவிட்டிருப்பதையே
விரும்பாத பல வாசக நண்பர்கள் இங்கே இருப்பார்கள்
என்பது எனக்குத் தெரியும்….. இருந்தாலும்,
என்னைப் பொருத்தவரை நான் – கலைஞரின்
இன்னொரு பக்கம் என்கிற அளவில் தான் நான் இந்த காணொளியை பார்க்கிறேன்.
என்னப் பொருத்த வரையில் அவரைப்பற்றிய
என் கண்ணோட்டங்கள் ஏற்கெனவே
முற்றுப்பெற்று விட்டன…
இந்த காணொளியால் அது மாறப்போவதில்லை.
துரைமுருகன் அவர்களின் ஒரு சுவாரஸ்யமான
உரையாடல் என்கிற அளவில் தான் இதற்கான
முக்கியத்துவம்…..
அதே பார்வையில் நீங்களும் பாருங்கள்…
ஒரு வேளை உங்களாலும் ரசிக்க முடியலாம்….
கீழே துரைமுருகன் அவர்களின் காணொளி –
….
.
………………………………………..
முதல்வரின் கோவை பயணத்தை முன்னிட்டு,
அவர் பயணிக்கும் ரோட்டின் ஒரு பக்கம் மட்டும்
புதுப்பிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டி இருக்கிறார்
பாஜக நண்பர் ஒருவர்….
கீழே-
……………………………………………………..
.
…………………………………………………………………….
இந்த வேலையை தனியார் யாரிடமாவது
காண்டிராக்டிற்கு கொடுத்திருப்பார்கள்….
அதில் அவர் மற்றொரு பக்கத்தை மிச்சம் பிடித்து,
கிடைத்ததில் பாதியை காண்டிராக்டு கொடுத்தவருக்கு
கொடுத்து விட்டு, மீதி பாதியை எடுத்துக் கொண்டிருப்பார்…
திராவிட மாடல் என்றால் என்ன என்பதை
சுலபமாக புரிய வைக்கிறார்கள்…!!!
அம்புடுதேன்….
…