…………………

…………………………………………………
மகாபாரதம் நிஜமாக நடந்ததா….?
முற்றிலும் கற்பனைக் கதையா…?
அல்லது மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ந்த சம்பவமா …?
-இந்த கேள்விகள் குறித்து விரிவாகப் பேசும்
2 வீடியோக்கள் கீழே – பாருங்களேன்….!!!
…………….
…………….
…………..
- 1998-லிருந்து, இன்று வரை தொடர்ச்சியாக,
கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக குஜராத்தை
ஆட்சி செய்வது பாஜக தான். - 2014-முதல் இன்று வரை கிட்டத்தட்ட
எட்டரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில்
இருப்பதும் பாஜக தான்..
ஹிந்து மதம் பற்றி பெருமிதம் கொள்ளும் கட்சி,
அதன் வளர்ச்சிக்காக, பெரிதாக உழைக்கும் கட்சி –
பாஜக என்று பொதுவாக பெரும்பாலான மக்கள்
நினைத்தாலும் –
மஹாபாரதம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான
இடங்கள் -( கடலில் மூழ்கி இருக்கும் துவாரகா பகுதிகள்
உட்பட) – பாஜக ஆட்சி செலுத்தும் இடங்களாக
இருந்தாலும் கூட இதுவரை இது குறித்து தீவிரமாக
ஆராய்ச்சிகள் நடைபெறவோ, அதற்கான
நிதி ஒதுக்கீடுகள் செய்யவோ – ஆட்சியிலிருக்கும்
பாஜக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ….?
அட்லாண்டிக் கடலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர்
மூழ்கிபோன கப்பலைக்கூட கண்டுபிடித்து
வெளிக்கொண்டு வரும் முயற்சிகள் எல்லாம்
சர்வசகஜமாக நடந்துகொண்டிருக்கும் –
அதியற்புதமான தொழில் நுட்பங்கள் கிடைக்கும்
இந்த காலத்தில் கூட –
இதைப்பற்றிய சிந்தனையே
இல்லாமல் இருப்பது ஏன் …?
இடிப்பதிலும், உடைப்பதிலும்,
புதிதாக கட்டுவதிலும் உள்ள ஆர்வம் –
தோண்டுவதிலும், தேடுவதிலும்
இல்லாதது ஏன்…? அவை – நிகழ்கால அரசியலுக்கு
எந்தவித லாபத்தையும் கொடுக்காது என்கிற
நினைப்பா …?
இனியாவது, புதைபொருள் ஆராய்ச்சியிலும்,
கடலடி ஆராய்ச்சியிலும் – தீவிரமாக கவனம்
செலுத்தப்பட்டு,
மகாபாரதம் குறித்த “mystry” மறைந்து நிஜமான “history”
வெளிப்படுமா …..?
………………………………………