
………………………………
இவ்வளவு தைரியமாக அவர் பெயர்களைச் சொல்லி,
குற்றச்சாட்டுகளையும் கூறும்போது –
இவர் எந்த தைரியத்தில் இதையெல்லாம் கூறுகிறார்
என்கிற சந்தேகம் நமக்கே எழுகிறது….
ஒருவேளை பாஜக டெல்லி தலைமை எதாவது
உறுதி கொடுத்திருக்குமோ – தைரியமாகப் பேசுங்கள்
பிரச்சினை வந்தால் –
நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று….?
( பாஜகவைப் பொருத்தவரை இது நடக்கக்கூடியது தான்…!!! )
சங்கர் ஒவ்வொரு நபராக – பெயரையும், பொறுப்பையும்
சொல்லிச் சொல்லி அடிக்கிறார்…. கொஞ்சம் கூட
தயக்கமே இல்லை அவருக்கு….
இதில் அதிசயம் என்னவென்றால், இவர் இவ்வளவு
பேர் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்… ஆனால்,
சம்பந்தப்பட்டவர்
எவருமே – எவருமே –
இதுவரை வாயையே திறக்கவில்லை;
மறுப்பு ஏதும் சொல்லாமல் – “கப்-சுப்” …!!!
(திருடனு(ரு….? )க்கு தேள் கொட்டியது மாதிரி…??? )
அப்படி சங்கர் என்ன சொல்கிறார் இந்த பேட்டியில் …?
……………
- திமுக-வில் மிஸ்டர் க்ளீன் என்று சொல்ல
யாராவது ஒரு ஆளை காட்டுங்கள் பார்ப்போம்….
- மாப்பிள்ளை சாருக்கு இன்னொரு பெயர் –
திமுக-வின் சசிகலா….
- மாமூல் கலெக்ஷன் ஆப் தயாரித்த மாப்பிள்ளை சார்….
- போக்குவரத்து துறையில் – போஸ்டிங்குக்கு –
ஆர்டிஓ -1 கோடி…
மோட்டார் வெஹிகிள் இன்ஸ். – 90 லட்சம்…
சாதாரண பியூன் – 10 லட்சம் …
ஆப்பில் தனித்தனி ரேட் –
2 வீலர், 4 வீலர் -லைசென்சுக்கு …
நம்பர் ப்ளேட்டுக்கு …
ஃபிட்னஸ் சர்டிபிகேட்டுக்கு …
- 100-ல் 80 குடும்பத்துக்கு ….!!!
“வீர விஸ்வாமித்திரர்…”
” லண்டன் வெங்கட்….”
“ஸெல்ஃபி உலகில் சந்தோஷமாக …”
- பேட்டியை இன்னொரு முறை முழுவதுமாக
பார்த்தபின் – “தலைப்பில் ” சொல்லப்பட்டுள்ள
அதே சந்தேகம் மீண்டும் எழுகிறது….
கேட்டுப்பாருங்களேன் –
(நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்…!!! )
………………
.
…………………………………………..
Without a personal agenda, சவுக்கு சங்கர் இணையத்தில் அல்லது பேட்டியில் வெளிப்படுத்துவதில்லை. முன்பு அவர் ஜாஃபர் சேட் மீதான கோபத்தில் நிறைய எழுதினார். பிறகு உளவுத்துறை ஆபீசர்கள் மேலான கோபத்தில் நிறைய எழுதினார்/பேசினார். எதற்காக திமுக மீதான கோபம் என்பது என்னால் அநுமானிக்க முடியவில்லை. ஆனால் தைரியமாக நிறைய ஊழல்களைப் பற்றிப் பேசுகிறார்.
ஆனால் பாஜகவைத் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனநிலை உள்ளவர் சவுக்கு. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவர் பேசியது உண்மை என்றே நான் நம்புகிறேன். பாஜக சார்பாக அவர் பேசவில்லை என்றே நினைக்கிறேன்.
எனக்கும் புரியவில்லை. எதை achieve செய்ய இப்படி நடந்துகொள்கிறார் என்று. அவரே, தனக்கு வேலையைத் தந்துவிட்டால் எதைப்பற்றியும் பேசமாட்டேன் என்றும் சொல்கிறார்.