கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு….!!!) – திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!

……………………

இது செய்தி –
Published: Monday, August 15, 2022,

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில், திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் எடை எடைக்கு இணையாக பணக்கட்டுகள் விடுதலை நாளிதழ் சந்தவாக வழங்கபட்டது.

கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை
காணிக்கை வழங்குவதை போல விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு எடை பணக்கட்டுகளை வழங்க முடிவு செய்து இருந்தனர். அதன்படி மேடை அருகே ஒரு பெரிய தராசு அமைக்கப்பட்டு ஒருபுறம் கி வீரமணி அமர வைக்கப்பட்டார்.

மறுபுறம் பத்து ரூபாய் இருபது ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட நோட்டு கட்டுகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்டது.

எடைக்கு எடை பணம் சுமார் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்
எடை சமமாக இருந்தது. அந்த சந்தா தொகை திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகையாக வழங்கப்பட்டது.

( விடுதலை நாளிதழுக்கு மாதச் சந்தா எவ்வளவு
இருக்கும்….? ரூபாய் 200/- …?
வருட சந்தா… 2400/- ? 20 லட்சம் ரூபாய் சந்தாவாக
வசூலாகியது என்றால், எவ்வளவு பேர் சந்தா கட்டி
இருப்பார்கள்….? குறைந்த பட்சம் 10,000 பேர்…?
முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10,000 பேர் திராவிடர்
கழகத்தில் உறுப்பினராக இருப்பார்களா…? )

  • அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரை பொறுத்தவரையில்
    திராவிட கழகத்தினர் சுமார் 60 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்தனர்….

(அப்படியானால், மொத்தம் 30,000 பேர்
திராவிடர் கழகத்தின் தீவிர சந்தா உறுப்பினர்கள்…..
திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டுமே … ஸபாஷ்…!!!)

https://tamil.oneindia.com/news/vellore/dravida-kazhagam-president-k-veeramani-was-given-money-equivalent-to-weight-in-tirupattur/articlecontent-pf742625-470998.html

………………………………………

Money Laundering என்றால் என்ன – இது சட்டம் ….!!!

ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு
பல்வேறு விதங்களில் பணம் வருவது சகஜம் தான்.
ஆனால், அவற்றை எப்படி கணக்கில் காட்டுவது
என்பது தான் பிரச்சினை….

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தை முறையான வழிகளில் ஈட்டப்பட்ட பணமாக மாற்றுவதே பணச் சலவை (Money Laundering) எனப்படுகிறது.

Prevention of Money Laundering Act 2002
சட்டத்தின் சில முக்கியமான விதிகள் –

இது பண மோசடி / நிதி மோசடி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட பணம் என்னும்
கறையை நீக்கும் முயற்சி என்பதால், சலவை
(laundering) என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவான வழிமுறைகள்: பணச் சலவை நடவடிக்கை பொதுவாக மூன்று கட்டங்களை உள்ளடக்கியது.

  1. சட்டவிரோதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட
    பணத்தைச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வங்கிக் கணக்கு உள்ளிட்ட நிதி அமைப்புக்குள் செலுத்துதல்.
  2. பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி செலுத்தப்பட்ட பணத்துக்கான ஆதாரத்தை (Source) மறைப்பது.
    இதன் மூலம் அந்தப் பணத்தின் மீதான ‘கறை’
    நீக்கப்படுகிறது
  3. இப்படிக் கறை நீக்கப்பட்ட பணத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வது, புழக்கத்தில்
    விடுவது. இது பொதுவான வழிமுறை மட்டுமே.
    சில பணச் சலவை நடவடிக்கைகளில் இந்த மூன்று
    கட்டங்களும் வரிசைப்படி நடக்க வேண்டியதில்லை.
    இரண்டு கட்டங்கள் இணைக்கப்படலாம். ஏதேனும்
    ஒன்றோ அனைத்துக் கட்டங்களுமோ தொடர்ந்து
    பல முறை நடக்க வேண்டியிருக்கலாம்.

பணத்தின் சட்டவிரோத ஆதாரத்தை (Illegal Source) மறைப்பதற்குப் பல வழிமுறைகளும் தந்திரங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. சட்டவிரோத வழியில்
ஈட்டப்பட்ட பணத்தையும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் தொழிலிலிருந்து ஈட்டிய வருவாயாகக் கணக்குக்
காண்பிப்பது ஒரு வழிமுறை.

கணக்கில் காண்பிக்க முடியாத பணத்தைச் சிறு
தொகைகளாகப் பிரித்து, பிறரிடம் கொடுத்துத் தன்
வங்கிக் கணக்கில் செலுத்தவைத்து, அதன் மூலம்
அந்தப் பணத்தை முறைப்படியான வருவாயாகக்
கணக்குக் காண்பிப்பது இன்னொரு வழிமுறை.

இதனால் நாடுகளின் பொருளாதாரம் சீரழிகிறது,
குற்றங்கள் அதிகரிக்கின்றன.

பணச் சலவைத் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) இந்தியாவில் 2002 -ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள்
பிறப்பிக்கப்பட்டு 2005-ல் நடைமுறைக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரம் அமலாக்க இயக்குநரகத்துக்கு (Enforcement Directorate) வழங்கப்பட்டுள்ளது.

.
………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு….!!!) – திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!

  1. புதியவன் சொல்கிறார்:

    //பணச் சலவைத் தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act) இந்தியாவில் 2002 -ல் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிகள்
    பிறப்பிக்கப்பட்டு 2005-ல் நடைமுறைக்கு வந்தது.
    இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களை விசாரிப்பதற்கான அதிகாரம் அமலாக்க இயக்குநரகத்துக்கு (Enforcement Directorate) வழங்கப்பட்டுள்ளது.// – இதெல்லாம் என்ன சட்டமோ. நம் நாட்டில் சட்டங்களால் பாதிக்கப்படுகிறவர்கள் எளிய மக்கள் மட்டும்தான். மற்றவர்களுக்கெல்லாம் கொரோனா பாதிப்பு வந்துவிடுகிறது.

    ஒரு ரூபாய் நன்கொடையையும் ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என்ற சட்டம் வரவேண்டும். இரண்டாவதாக, எல்லா டிரஸ்டுகளும் கலைக்கப்பட்டு, இந்திய அரசு இதற்கென்று ஒரு நிதியம் ஏற்பாடு செய்து அதற்கு மாற்றப்படவேண்டும். இந்த இரண்டும் நடக்கிற காரியமா?

    பேட்டரி வாங்கினார் என்று வெளியே விடப்பட்ட திக காரரும் ஆடி கார் வாங்குமளவு பெரும் பணக்காரராக இருப்பது இந்த நாட்டில்தான் நடக்கும்.

  2. bandhu சொல்கிறார்:

    வருட சந்தா 1800 என்று போட்டிருக்கிறார்கள்.

    இது சந்தா என்பதால் வாங்கிய அனைவரின் பெயரும், முகவரியும் இருக்கும். திருப்பத்தூரில் மட்டுமே 30000 பேர் என்றால் குத்து மதிப்பாக தமிழகமெங்கும் மொத்த சந்தா தாரர் 300,000 பேர் இருப்பார்கள் என்று கணக்குப்போட்டு, அதில் சில சந்தாதாரரை விசாரித்தால் எந்த அளவு இது உண்மை என்று தெரிந்து விடப்போகிறது. அதே போல், அந்த அளவு பத்திரிகை அடித்தார்களா என்று பார்ப்பதும் எளிது.

    அமலாக்கத்துறை / வருமான வரித்துறை இணைந்து இதை வெளிக்கொணரும் என்று நம்பலாம்!

    மேற்கு வங்காளத்தில் பார்த்தா சட்டர்ஜி என்பது போல் இங்கு முதல் போணி வீரமணி தான்!

    • புதியவன் சொல்கிறார்:

      நீங்க சொல்றதைப் பார்த்தால், டப்பா படங்கள் வெளியிட்ட தியேட்டரின் சிசிடிவியை வாங்கிப்பார்த்து, என்னடா ஒவ்வொரு ஷோவுக்கும் பத்து பேர்கள்தான் இருக்காங்க, ஆனால் வரவில் 20-50 கோடிகள்னு கணக்குக் காண்பிச்சிருக்கீங்க என்று அதனையும் வருமான வரி, ED போன்றவை விசாரித்து உள்ளே தள்ளும் என்ற பேராசை உங்களுக்கு இருக்கிறது போலிருக்கு.

      தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே ஊழல், ஏமாற்று, அரசை ஏமாற்றிப் பணம் சேர்த்தல், பொய்க்கணக்கு, சட்டத்தை மீறுதல், கொள்ளையடித்தல், திருட்டுத்தனம் என்று எதை எடுத்தாலும் அதற்கு ஆரம்பப் புள்ளி ஒரே ஒரு ஆள் என்பதைத் தெரியாதவர் உண்டா? ஏதோ நாம் செய்த புண்ணியம், அவருக்கு ‘பாரத ரத்னா’ கொடுக்கவில்லை. (நாங்கள் உங்களுடன் கூட்டணி சேருகிறோம், கொத்தடிமையாக இருக்கிறோம் என்று சொல்லியிருந்தாலும் ‘அவர்கள்’ இதற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்களோ?)

      நீங்க ஏதோ பச்சப்புள்ளயாட்டம், முதல் போணி வீரமணி என்று சொல்றீங்களே. இந்த மாதிரி, தொண்டர்களிடம் பணம் கலெக்ட் பண்ணுகிறேன் என்ற போர்வையில் அரசை ஏமாற்றியது யார் என்று உங்கள்க்குத் தெரியாதென்றால், உங்கள் வயது 20க்குள்தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.