
…………………………
அநேகமாக – இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையைச் சேர்ந்த நாம் யாருமே, இந்திய சுதந்திரத்திற்காக எந்த விதத்திலும் பாடுபட்டிருக்க
மாட்டோம்.
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது,
அனுபவித்துக் கொண்டிருப்பது, அத்தனையும்,
நமது முந்திய – அதற்கும் முந்தைய தலைமுறைகளைச்
சேர்ந்த லட்சக்கணக்கான, நமது முன்னோர்கள் செய்த தியாகம்…
எத்தனையோ லட்சம் உயிர்கள் பலியாயின….
எத்தனையோ லட்சம் பேர் தங்கள் சொத்து சுகத்தை இழந்து
குடும்ப வாழ்வை இழந்து,
சிறையில் அல்லலுற்றுக் கிடந்தனர்…
எத்தனையோ லட்சம் பேர் –
சாத்வீகத்தை கடைபிடித்து – அஹிம்சா முறையிலும்,
இன்னும் எத்தனையோ லட்சம் பேர் – ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் போராடினர்…!!!
இவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து நமக்காக பெற்றுத்தந்த
சுதந்திரத்தை தான் நாம் இன்று அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம்…
இன்று நாம் என்ன செய்ய முடியும்…என்ன செய்ய வேண்டும்…?
இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு,
பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்
அரசியல்வாதிகள்
-எவரும்-எவருமே –
சுதந்திரத்திற்காக, துரும்பைக் கூட அசைத்துப்
போட்டவர்களில்லை… ஆனால், அதன் பலன்களை
சுவைத்து, அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.
நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்
அரசியல்வாதிகள் எவரும் நமக்கு எஜமானர்கள் அல்ல –
என்பதை முதலில் உள்ளத்தில் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அவர்களை பதவியில் அமர்த்தியது நாம் தான்.
எனவே – நமக்காகத்தான் அவர்கள்….
அவர்களுக்காக – நாமல்ல.
முதலில் – நம்மில் சிலரிடம் இருக்கும்
காசுக்கு ஓட்டை விற்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும்.
அவர்கள் தாமாக மாறாவிட்டால், சுற்றி இருப்பவர்கள் –
அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
காசு கொடுத்து ஓட்டுகளை வாங்கும் வியாபாரிகளை
ஒழிக்க வேண்டும்….
வாங்குபவர்களை ஒழித்தால் –
விற்பது தானாகவே நின்று விடும்.
அடுத்து – ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம் என்று
பேதம் பேசி நமக்குள் மோதலை உருவாக்கி,
ஆதாயம் காண்போரை அடையாளம் கண்டு,
தவிர்க்க வேண்டும்….
இந்த பரந்த பாரத பூமியில் –
அனைத்து ஜாதியினரும், அனைத்து மதத்தினரும்,
அனைத்து மொழியினரும், அனைத்து இனத்தவரும் –
ஒற்றுமையாக சேர்ந்து ஆனந்தமாக கூடி மகிழ
நிறைய இடம் உண்டு….
வேற்றுமையில் ஒற்றுமை காண்பது எப்படி என்று
உலகத்தோர்க்கு உணர்த்த நாம் ஒரு சிறந்த உதாரணமாக
இருக்க வேண்டும்.
இந்த பாரத நாட்டின் வளங்களும், வாய்ப்புகளும் –
அனைத்து குடிமக்களுக்கும் கிடைப்பதை
உறுதி செய்ய வேண்டும்..
நம் நாட்டின் – 90 சதவீத வளங்கள்
வெறும் 10 சதவீத பணக்காரர்களிடம் சென்று குவியாமல்,
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.
ஒட்டுமொத்த பாரதமும் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும்.
வளர்ச்சி பெற வேண்டும் … வலிமை பெற வேண்டும்.
அத்தனை அன்னல்களையும் அனுபவித்து,
சுதந்திரத்தை பெற நமக்காக உழைத்த –
அந்த அத்தனை தியாகிகளுக்கும், வீரர்களுக்கும்
நாம் காட்டும் மரியாதையும் நன்றியும் அதுவே….
……………………………………………………………………………………………………………………
சுதந்திரம் பெறுவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே,
சுதந்திரம் வந்தவுடன் என்னென்ன செய்வோம் என்று
கனவு கண்ட பாரதி பாடியது –
……………….
……………….
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
விமரிசனம் தளத்தின் சார்பாக –
இனிய சுதந்திர தின வாழ்த்துகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
…
.
………………………………………
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்
//90 சதவீத வளங்கள் வெறும் 10 சதவீத பணக்காரர்களிடம் சென்று குவியாமல்,
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.// – இதற்கு என்ன செய்யமுடியும்? அரசியல் பலமில்லாமலா இவர்கள் இப்படி பணத்தைக் குவிக்கிறார்கள்?