
……
எது நிஜம் … எவ்வளவு நிஜம் …?
நிஜம் எத்தனை %, மிகை எத்தனை %, கற்பனை எத்தனை சதவீதம்….?
நமக்குத் தெரியாது …
நிச்சயமாக என்றைக்கும் – நம்மால் கண்டு பிடிக்கவும் முடியாது …!!!
எனவே – சவுக்கு சங்கர் சொல்கிறார் –
சுவாரஸ்யமாக இருக்கிறது – கேட்போமே …!!!
- குடும்பத்துக்கு போனது 50,000 கோடி….
- திருவாளர் துரை முருகனே – மறைமுகமாக -போட்டுக் கொடுக்கிறார்….!!!
- மானமிகு கி.வீரமணியாரும், அது இல்லாத -சு.ப.வீயும் – இட்டு நிரப்ப –
- எப்போதும் தயாராக இருக்கும் நிலைய வித்வான்கள்..
- தேவைப்பட்டால் – சுபவீயே கூட சத்ரு சம்ஹார யாகம் நடத்துவார் ….!!!
- திராவிட அரிவாள் – மனுஷ்யபுத்திரன் …. சொம்பு …!!!
- கண்ணாலே காண்பதெல்லாம் – அத்தனையும் மேக்கப் …!!!
- கன்னித்தீவில் – மாண்புமிகு செந்தில் பாலாஜி …!!!
–
- 30 % ஃபோர்ட்ஃபோலியோ – திராவிட மாப்பிள்ளைக்கு …
- சினிமாவிலிருந்து நேரடியாக சி,எம்.போஸ்ட்டுக்கு இம்போர்ட் – பிள்ளை ….!!!
- சவுக்கு சங்கர் வீடியோ போட்டால் நண்பர் திட்டுவார்…. அதனால் எல்லாவற்றையும் போடுவதில்லை; ஆனால், இதைப்போன்ற சுவாரஸ்யமான வீடியோவை போடா விட்டால் இந்த தளம் இயங்குவதில் அர்த்தமே இல்லை…!!!
- நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்…. நம் கையில் இல்லை. கடைசி 10-15 நிமிடங்களை வேண்டுமானால் பார்ப்பதைத் தவிர்த்து விடலாம்….
……………
.
………………………………………..
உண்மைபோல authorityயாக சவுக்கு சங்கர் பேசுவார். பெரும்பாலான யூடியூப் அடிமின்கள், கொத்தடிமை க்ரூப்பைச் சேர்ந்தவர்கள், மாதேஷ் போல. இவர்கள் சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்று யோசிப்பதைவிட, நான், நம்புவது, கஸ்டம்ஸில் எப்போதும் பத்து சதம்தான் பிடிபடும், மீதி கடத்தப்பட்டுவிடும் என்பதைத்தான். அதன் வழியில் சவுக்கு, குறைத்துச் சொல்லியிருக்கிறார் என்றே நம்புகிறேன். இதனை வெளிவந்தவுடன் பார்த்துவிட்டேன். (பல காணொளிகள் பார்த்தபிறகு, மாப்பிள்ளை, சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதன் காரணமாக எள்ளல் தொனியில் நான் எழுதியிருந்ததைப் பற்றி வருந்தினேன்.)
பத்திரிகையாளர் மணி போன்ற பலருக்கும் ஒரு அஜெண்டா, கொள்கை, தங்கள் விருப்பம் என்று எல்லாம் இருக்கிறது. அதனால் அவர்கள் பேசுவதில் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை மிகவும் குறைவு. உதாரணமாக மணி, கம்யூனிஸ்டு, திராவிடக் கொள்கையின் அடிமை. அதனால் அவர் சொல்லும் கருத்துகளில் சார்புத்தன்மை அதிகம். சவுக்கு சங்கர், to some extent சுப்ரமணிய சுவாமி போல. எந்தப் பக்கம் பாம்பு பாயும் என்று யாருக்குமே தெரியாது. சவுக்கு, தலித் மனநிலை உள்ள, கனிமொழி சார்பான, திராவிடக் கொள்கையை நம்பும், பாஜக எதிர்ப்பு மனநிலை இருக்கும், பிராமண எதிர்ப்பு மனநிலை இருக்கும் பத்திரிகையாளர். தனக்கு நிறையத் தெரிந்ததுபோலவும், தனக்கு நிறைய காண்டாக்ட் இருப்பது போலவும் காட்டிக்கொள்ளுபவர். அதே சமயம், அவரே, தனக்கு நல்லது செய்தால் உடனே திமுகவைப் பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திவிடுவேன் என்றும் சொல்லியிருக்கிறார் (உதாரணமா…அவருக்கு சஸ்பென்ஷனை நீக்கி வேலையைக் கொடுத்துவிட்டால். இதற்காக சில வாரங்கள் முன்பு தலைமைச்செயலாளரையும் பார்த்தேன் என்று சொல்லியிருக்கிறார்).
ஆனால் காணொளியில் சொல்லப்பட்டுள்ளவற்றை அனேகமாக நான் நம்புகிறேன்.