திருமா-வுக்கு ஜெகத் வடிவில் வந்த சோதனை …!!!

……………………….

திமுக அரசை டென்ஷன் ஆக்கும் வகையில்
விசிக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் …..
………….

………………………….

விழுப்புரம் மாவட்டம், வழுதாவூர் பகுதியை சேர்ந்தவர்
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி
திமுக எம்.பியுமான ஜெகத்ரட்சகன். இந்த பகுதியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சொந்தமாக பல நூறு
ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் சுமார் 110 ஏக்கர் நிலங்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்த பட்டியல் இன மக்களுக்காக கொடுக்கப்பட்டு இருந்த
பஞ்சமி நிலம் என்கிற குற்றச்சாட்டு கடந்த சில
ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது.

இந்த இடத்தில் திருவாளர் ஜெகத்ரட்சகன் தன் மனைவி
பெயரில் தற்போது கல்லூரி கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இப்போது இந்த பிரச்சனையை திமுக கூட்டணியின்
பிரதான கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
கையில் எடுத்திருக்கின்றனர்….

ஜூலை 27ம் தேதி மயிலம் சட்டசபை தொகுதிச் செயலாளர் செல்வசீமான் தலைமையில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
அங்கு திடீரென வந்துள்ளனர். பின்னர் அவர்கள், ‘இந்த இடம் பஞ்சமி நிலம். இங்கு கல்லுாரி கட்டக்கூடாது’ என்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, விசிக கட்சிக் கொடி கட்டிய
டிராக்டர் மூலம் கல்லுாரிக்கு எதிரிலுள்ள காலி இடத்தை
உழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்னை தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் படத்துடன் கூடிய கண்டன போஸ்டர் ஒன்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பளிச்சிட்டது. அந்த போஸ்டரில்,‘பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா?’ என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கிறது…..

பாவம்….. திருமாவுக்கும், விசிக வினருக்கும்
இந்த விஷயம் இத்தனை ஆண்டுகளாக தெரியவே
தெரியாது போலிருக்கிறது….

தெரிந்திருந்தால், முன்பே போராடி இருக்க
மாட்டார்களா என்ன…..???? – !!!!

.
…………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to திருமா-வுக்கு ஜெகத் வடிவில் வந்த சோதனை …!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  என்னவோ இப்போடு வீறுகொண்டு போராடுவதுபோலச் சொல்லுகிறீர்களே… அடுத்த எலெக்‌ஷனிலாவது தங்கள் சொந்தச் சின்னத்தில் போட்டியிட அனுமதித்து ஓரிரு சீட்டுகள் வழங்கமாட்டார்களா என்று தொல்.திருமா அறிவாலய வாசலில் காத்துக்கிடக்கும் நேரத்தில், இந்த மாதிரி எதிர்பார்ப்பு உங்களுக்கு இன்னும் இருக்கிறதா? சட்டப்படியான நடவடிக்கையில் ஈடுபடலாமே தவிர சிறுத்தைகள் போராடி, அதன் மூலம் பாசிச பாஜகவுக்கு உரம் போடும் செயலில் ஈடுபடக்கூடாது என்று சொல்லி இதனைப் புறம் தள்ளிவிடுவார் திருமா. அவருக்குத் தெரியாதா, திமுக அணியில் இல்லாவிட்டால் கவுன்சிலர் தேர்தலில் கூடத் தான் ஜெயிக்கமுடியாது என்று. கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் என்று திமுக கூடாரத்தில் கொத்தடிமைகளுக்கா பஞ்சம்?

 2. bandhu சொல்கிறார்:

  திமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இதை கையில் எடுத்திருக்க வேண்டும். இல்லையேல் எவராவது ஆர்வக்கோளாறு ‘தொண்டர்’ இவர் மேடையில் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பி விடுதலை சிறுத்தைகள் பேர் போட்டிருக்கவேண்டும்.

  முன்னதை செய்யும் அளவுக்கு இவருக்கு தைரியம் கிடையாது. அதனால் இரண்டாவது காரணம்தான் உண்மையாக இருக்கவேண்டும்!

 3. Venkataramanan சொல்கிறார்:

  When i checked the location in Google maps, i found one JR Medical College & Hospital by NH132 between Tindivanam and Vikravandi, at Kiledayalam village. Building construction seems to be going on (though maps are updated only once in a while). College name also matching.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s