
…………………..
தொழிலதிபர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி!
அரசு கஜானா யாருக்கு?
மத்திய அரசை சாடிய பாஜக எம்பி
Published: August 7 2022,
டெல்லி: ‛‛5 கிலோ இலவச உணவு தானியத்தை
ஏழைகளுக்கு வழங்கிவிட்டு நன்றியை எதிர்பார்க்கும் நாடாளுமன்றத்தில் தான் இந்தியாவில்
ரூ.10 லட்சம் கோடி வராக்கடனை ஊழல் தொழில்
அதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு கஜானாவில்
முதல் உரிமை யாருக்கு?” என மத்திய அரசை விமர்சித்து பாஜகவின் எம்பி வருண் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் பிலிபிட் நாடாளுமன்ற
தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ளவர் வருண்காந்தி.
- அடேங்கப்பா.. 5 ஆண்டில் வங்கிகளில்
ரூ.9.91 லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி!
மத்திய நிதி அமைச்சர் தகவல்
நாடாளுமன்றத்தில் பாஜகவின் எம்பி ஒருவர் பேசும்போது, ‛‛கொரோனா சந்தர்ப்பத்தில் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு மக்கள் நன்றி கூற
வேண்டும்” என பேசி இருந்தார்.
இதனை வருண் காந்தி எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படுவதையும், வராக்கடன் தள்ளுபடி
செய்யப்பட்டதையும் ஒப்பிட்டு அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக வருண் காந்தி
தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛ஏழை மக்களுக்கு 5 கிலோ தானியங்கள்
இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க
வேண்டும் என நாடாளுமன்றம் எதிர்பார்க்கிறது.
அதேவேளையில் கடந்த 5 ஆண்டுகளில்
ஊழல் தொழில் அதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி
கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு கஜானாவில்
முதல் உரிமை யாருக்கு? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வராக்கடன் தள்ளுபடி தொடர்பாக மத்திய அரசு
சார்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட
விபரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வராக்கடன் தள்ளுபடி எவ்வளவு?
கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில்
ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய
நிதித்துறை இணையமைச்சர் பகவத் கே காரத்
எழுத்துப்பூர்வமாக பதிலளித்து இருந்தார். அதில்,
‛‛கடந்த 2017-18ம் நிதியாண்டு முதல் 2021-22
நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் மொத்தம்
ரூ. 9 லட்சத்து 91 ஆயிரத்து 640 கோடி வங்கி
வராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என
கூறியிருந்தார்.
அத்துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய
10 நிறுவனங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில்
வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இதில்
வைர வியாபாரி மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால்
உள்ளிட்ட தொழில் அதிபர்களின் நிறுவனங்களும்
அடங்கும். இதனை தான் வருண் காந்தி விமர்சனம்
செய்துள்ளார்.
இவரது முந்தைய விமர்சனங்கள் –
முன்னதாக வருண் காந்தி,
இந்தியாவின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஓய்வூதியம்
வழங்க முடியாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளுக்கு
எதற்கு ஓய்வூதியம் வேண்டும் என மத்திய அரசை
சாடினார். மேலும் ஜிஎஸ்டிி வரி விதிப்பை பொறுத்த
மட்டில், பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு,
ரொட்டி போன்ற பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில்
வேலையில்லா திண்டாட்டத்துக்கு நடுவே இந்த முடிவு இளைஞர்களை பாதிக்கும்.
நிவாரணம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் காயப்படுத்துகிறோம் என வருத்தத்தை பதிவு
செய்திருந்தார் …..!!!
(https://tamil.oneindia.com/amphtml/news/delhi/bjp-mp-varun-gandhi-slams-)
.
……………………………………….
கண்டிப்பாக இத்தகைய விஷயங்களை பாஜக எம்பி எழுப்புவது பாராட்டிற்குரியது. தொழிலதிபர்கள் நாட்டிற்குத் தேவை. ஆனால் அவர்கள் தரவேண்டிய கடனைத் தள்ளுபடி செய்வது எந்த விதத்தில் நியாயம்? ஏழைகளுக்கு அரசு உதவி செய்வது அரசின் கடமை. தொழிலதிபர்கள் தரவேண்டிய வராக்கடனை தள்ளுபடி செய்வது அரசின் மடமை
அது சரி… மோடிக்கு எதிராக 2024ல் எதிர்க்கட்சிகளின் பிரதம மந்திரி வேட்பாளர் முகமாக நிதீஷ்குமார் இருப்பார் போலிருக்கிறதே…
புதியவன்,
// கண்டிப்பாக இத்தகைய விஷயங்களை
பாஜக எம்பி எழுப்புவது பாராட்டிற்குரியது. //
சொந்த கட்சிக்கு, ஆட்சிக்கு – எதிராக
ஆளும் கட்சி எம்.பி.யே பேசுவது
பாராட்டப்பட படவேண்டிய வேண்டிய
விஷயமா அல்லது –
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட
வேண்டிய விஷயமா …?
வெங்காய நாயுடுவுக்கு ஒரு ரூல்,
வருண் காந்திக்கு வேறொரு ரூலா …?
ஓரே நாளில் இப்படி உல்டா-பல்டி அடித்து
விட்டீர்களே…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
வெங்கையா நாயுடு செய்தது கட்சியின் நல்லதுக்கு அல்ல. ஊழலுக்குத் துணை போனது, தமிழகத்தில் பாஜகவைக் காவு கொடுக்க நினைத்தது.
எந்தக் கட்சி எம்பி என்றாலும் நியாயமான விமர்சனத்தை நிச்சயமாக வைக்கவேண்டும். ஜால்ரா அடிப்பதற்குத்தான் ஏகப்பட்ட ஆட்கள் உண்டே. அதேசமயம் வருண் காந்தியின் (அம்மாவும்தான்) வரலாற்றில் சட் சட் என்று இந்த மாதிரிப் பேசுவார். இதெல்லாம் நல்லது சொல்வதற்கா இல்லை தன் எதிர்பார்ப்பு ஏதோ நிறைவேறாததால் தலைமையைச் சங்கடத்தில் ஆழ்த்துவதற்கோ என்ற சந்தேகமும் என் மனதில் எழும்.
.
அது சரி – 2024 தேர்தலில், பாஜகவில்
மோடிஜிக்கு எதிராக நிதின் கட்கரிஜியே
பிரதமர் வேட்பாளர் முகமாக
களம் இறங்குவார் போல் தெரிகிறதே….!!!
.
நம்ம சீமான் பாணியில், ‘அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா’ என்றுதான் சொல்லணும். என் assessment படி, நிதின் கட்கர்ஜிக்கு மக்கள் வாக்குகளைப் பெற்றுத்தரும் கரிஷ்மா இல்லை என்றே நம்புகிறேன். மோடி அவர்கள் யோகியிடம்தான் ஒப்படைக்க வாய்ப்பு உண்டு. யோகியின் ஆங்கிலப் புலமை (just communication), PM Positionக்கான கெத்து பற்றித் தெரியவில்லை. பாஜகவில்தான் குடும்ப ஆட்சிமுறை கிடையாதே….. அங்கு தூரத்து எதிர்காலத்திற்கு 2-3 பிரதம மந்திரி கேண்டிடேட்கள் இருப்பதாகத் தெரிகிறதே..
கீழே ஒரு செய்தி –
Pastor arrested for sexually harassing
girls at church in TN’s Rameswaram –
இந்த செய்தி தமிழ் நாட்டின் எந்த செய்தி
சேனலிலாவது வந்ததா….?
வரவில்லை என்றால் – ஏன்…..?
——————–
https://www.indiatoday.in/crime/story/pastor-arrested-sexually-harassing-girls-came-church-tamil-nadu-rameshwaram-1985621-2022-08-09
——————–
Pastor arrested for sexually harassing girls at church in TN’s Rameswaram –
John Robert, a church pastor in Tamil Nadu’s Rameswaram, was arrested under the POCSO Act by the police after members of the child welfare committee filed a complaint that he had sexually harassed young girls who came to church.
The pastor was part of the Punithar Arul Anandhar Church in Rameswaram’s Mandapam area.
The victims who were sexually assaulted contacted the child welfare authorities to report the incidents. Based on this, the child welfare authorities conducted confidential investigations into John Robert and the allegations.
After the investigation confirmed that John Robert, who was working as a priest in the church, had sexually harassed the girls, the child welfare officials filed a complaint against the priest at the Mandapam Police Station.
.
……………………………………………………………………………
எங்கேயாவது, கிறித்துவ பள்ளிகளில் நடக்கும் தற்கொலை, சந்தேகத்திற்கிடமான மரணம், விபத்துகள் பற்றி எந்தப் பத்திரிகையாவது (தமிழகத்தில்) எழுதிப் பார்த்திருக்கிறீர்களா? எப்போதாவது விவாதங்கள் நடந்துள்ளனவா? திமுக ஆட்சி வந்த உடனேயே சென்னையில் பள்ளியின் பெயர், அப்புறம் ஈசிஆர் சாலையில் உள்ள ஒருவர் (அவர் கோவில்கள் சார்ந்த பள்ளிகள் நடத்துகிறார்), போதாக்குறைக்கு ஜக்கி வாசுதேவ் என்று பலரைப் பற்றி செய்திகள், விவாதங்கள் என்றெல்லாம் பார்த்திருக்கும் நீங்கள் காருண்யா, லயோலா பற்றி எப்போதாவது செய்திகளோ விவாதங்களோ நடந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சக்தி International School தவிர வேறு எந்தப் பள்ளியைப் பற்றியாவது (அதற்கு அப்புறம் ஒரு கிறித்துவப் பள்ளியில் மரணம்) கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகள் வாயைத் திறந்திருக்கிறார்களா இல்லை so called NGOs பேசியிருக்கிறார்களா?
தமிழகத்தில் இந்து எதிர்ப்பு மற்றும் பாஜக எதிர்ப்புக்கு மட்டும்தான் fundings.
கோவில்கள் பணத்தில் பள்ளிகள் நடத்தலாம் என்று பேசும் நடிகர் சூரியா குடும்பம், சித்தார்த், சூரி போன்ற பலர், என்றாவது, 100-200 கோடி செலவழித்து திரைப்படம் எடுப்பதற்குப் பதிலாக 100 பள்ளிகளை நடத்தலாம் என்று பேசிக் கேட்டிருக்கிறீர்களா? திரையுலகிலும் இந்து எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டே போவதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஆதரவா இல்லை வெளிநாட்டு நிதியா என்பதைப் பற்றியும் யோசிக்கணும்.
இதிலென்ன சந்தேகம்? இரண்டும்தான்!