உலகின் தீரா மர்மங்களில் ஒன்றான ஸ்டோன் ஹென்ஜ் –

………………..

தோராயமாக இதன் வயதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணித்திருக்கிறார்கள். இன்றைய பிரிட்டனின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடம் என்பது கூடுதல்
சிறப்பு.

ஸ்டோன் ஹென்ஜ் பார்க்க எண்ணி பயணித்தீர்களேயானால்,
ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென
இந்த அமானுஷ்ய இடத்துக்குள் நுழைவீர்கள். இந்த இடத்தின்
மயான அமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும் உங்களுக்குள்
ஒரு மர்மத்தாக்கத்தை நிச்சயம் உண்டாக்கும். இது உருவாக்கப்பட்ட விதம் பற்றி ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள்
இவை –

1) முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன.

2) அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த
கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240 மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத
காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள்
இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே.
இவ்வாறு எடுத்துவரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு
இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு
அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது.

3) இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது
ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது.

4) இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ
ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட
வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது.

உலகின் தீரா மர்மங்களில் ஒன்று ஹென்ஜ் ஸ்டோன்…

ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட
நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர்
நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை
250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். நின்று கொண்டிருக்கும் இரண்டு கற்களின் மேல் இன்னொரு கல்லை எப்படி தூக்கி
வைத்திருக்க முடியும் என ஆச்சரியம் அளிக்கிறது. இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, வேற்று கிரகவாசிகள் தான் இதை செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் கூறி வருகிறார்கள்.

இன்று வரையிலும் இந்தக்கற்கள் அடுக்கப்பட்டிருப்பதன்
அர்த்தம் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை.

இது ஒரு வழிபாட்டுத்தலம்,
வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர்,
சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான கதைகள் திரிந்தாலும்
இது இன்னமும் தீர்க்கப்படாத ஒரு மர்மம்தான்!!!

செவ்வாய் கிரகத்தில் பூமியில் இருப்பதை போன்று
ஒரு ஸ்டோன் ஹெஞ்ச்….இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் ‘நாசா’ ஆய்வு மையம் வெளியிடும்
செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களில் ஏதாவது
ஒரு உருவம் இருப்பதாக அடையாளம் தெரியாத பறக்கும்
பொருட்கள் குறித்து ஆய்வு நடத்திவரும் இணையதளங்கள்
கூறி வந்தன. மனித எலும்பு, பெண் இருப்பது போன்ற படம்,
எகிப்து பிரமிடு போன்ற அமைப்பு, மேலும் நண்டு என
பல உருவங்கள் இருப்பதாக கூறப்பட்டன.

சமீபத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து
ஆய்வு நடத்திவரும் அந்த இணையதளத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் விண்கலம் ஒன்று செயல் இழந்த நிலையில்
இருப்பதாக தகவல் வெளியிட்டு இருந்தன. தற்போது பூமியில்
உள்ளது போல் செவ்வாய் கிரகத்திலும் ஸ்டோன் ஹெஞ்ச்
இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது இதே போன்ற வடிவில் செவ்வாய்கிரக மேற்பரப்பிலும்
உள்ள இதை ‘மார்ஸ் ஹெஞ்ச்’ என அழைக்கிறார்கள்.
அது ஒரு பெரிய வட்டம் சில இடங்களில் சிறிய பாறைகள்
பின்னர் பெரிய பாறை அதன் நடுவில் ஒரு சதுரம் என UFO இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஸ்டோன் ஹெஞ்சை பார்க்க வேண்டும்
போல் தோன்றுகிறதா….?
கீழே –

……………………

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to உலகின் தீரா மர்மங்களில் ஒன்றான ஸ்டோன் ஹென்ஜ் –

  1. புதியவன் சொல்கிறார்:

    இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் நிறைய கோவில்கள் (பிரம்மாண்டமாக) நிர்மாணிக்கப்பட்டு, ஆலயங்களாக வழிபடப்பட்டன. (அதில் படைகளைத் தங்கவைத்த நிகழ்வுகளும் நடந்தன). ஆனால் இந்த மாதிரி சில இடங்களில் (ஸ்டோன் ஹென்ஞ், மெக்சிகோவில் சீசன் இட்ஷூ போன்று) எதற்காக இத்தகையவற்றைக் கட்டியிருக்கிறார்கள் என்பதே புரிவதில்லை. சீchenஇட்ஷுவைப் பார்த்தபோது, அது ஆலயம் அல்லது குருமார்கள் நிறுவிய வழிபாட்டு முறை போன்றது எனப் புரிந்துகொண்டேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s