…………..

…………………………………
மாட்டியாச்சு….
இதுலேந்தே –
உடன் பிறப்புகளுக்கு மெசேஜ் கெடெச்சுருக்கும்….
தானா புரிஞ்சுக்குவாங்க …
போதுமில்லே…?
இனிமே ரெய்டெல்லாம் இருக்காதில்லே …?
” …… “
என்னது….?
காங்கிரசா… ?
அதெல்லாம் இனி அவங்க தானா புரிஞ்சுக்கிடுவாங்க …
தானா புரிஞ்சுக்கல்லைன்னா –
போகப் போக புரிய வெச்சுடுவோம்…
சரி தானே …?
” ….. “
என்னது….?
அப்படியும் புரியல்லைன்னாவா ….?
சொரணை கெட்ட ஜென்மங்க –
கொஞ்சம் போவட்டும்…
தேர்தல் நெருங்கும்போது புரிய வெச்சூடுவோம் …!!!
எதுவுமே வெளிப்படையா வேணாம்….!!!
நீங்க சொன்ன மாதிரி – அது தான் நாம ரெண்டு பேருக்கும் நல்லது……!!!
.
……………………………………..
காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் பாராளுமன்றத் தேர்தலில் நல்ல வெற்றியை ஈட்ட முடியாது. திமுக, அதிமுக கிடையாது. காங்கிரஸுக்கும் திமுகவை விட்டால் வேறு கதி கிடையாது. அதனால திமுக மாவட்டச்செயலாளர்களான கே எஸ் அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ப.சிதம்பரம் போன்றவங்க, எப்பாடு பட்டாவது திமுகவுடன் இருப்பாங்க, திமுகவும் அவங்களைக் கைவிடாது.
இந்தத் தடவை டைரக்ஷன் கொஞ்சம் பெட்டர். இல்லைனா கோட்டு சூட்டோடு ஜிம்மில் இருப்பதா படங்கள் தயார் பண்ணியிருப்பாங்க. இப்போ டோப்பா மட்டும்தான்.
புதியவன்,
திமுக-வும், காங்கிரசும்
விரும்பி ஒட்டிக்கொண்டிருந்தாலும் சரி,
விரும்பாமலே ஒட்டிக்கொண்டிருந்தாலும் சரி –
காங்கிரசை உங்கள் கூட்டணியிலிருந்து
கழட்டி விடுங்கள் இல்லையேல் கடும்
விளைவுகளை –
உங்கள் ஆட்சியும், கட்சியும்
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
என்று பாஜக ரகசியமாக “அன்புடன்”
மிரட்டல் விடுத்தால் திமுக தலைமை
என்ன முடிவெடுக்கும் என்று நினைக்கிறீர்கள் …?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அப்படி பாஜக கட்டளையிடும் (அன்பாகத்தான்) இடத்தில் இல்லை. யாராவது, உன் கேடயத்தை வீட்டில் வைத்துவிட்டு என்னுடன் போருக்கு வா என்றால், உடனே கேடயத்தை வீட்டில் வைக்கமுற்படுவானா?
கடும் விளைவுகளை திமுக ஆட்சியும் கட்சியும் எதிர்கொண்டால்தான், பாஜகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம். திமுகவுக்கு பெரும் ஊழலும் செய்தாகவேண்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் காட்டிக்கொண்டாகவேண்டும்.
ஊழல் அமைச்சர்களோ, 2ஜி புகழ்பெற்றவர்களோ சிறைக்குச் சென்றால் திமுக தலைமைக்கு அது ஜாக்பாட்தான். ஊழல் செய்தவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று காட்டிக்கொள்ளலாம். வலிய முக்கியத்துவம் தராமல் இருந்து கெட்டபெயர் வாங்கிக்கொள்ளவேண்டாம்.
நல்லவேளை வெங்கையா நாயுடுகள் போன்ற புல்லுருவிகள் திரும்பவும் பதவிக்கு வரவில்லை. வந்திருந்தால் தமிழக பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு குறையத்தான் செய்யும்.
புதியவன்,
// நல்லவேளை வெங்கையா நாயுடுகள்
போன்ற புல்லுருவிகள் //
என்ன ஆயிற்று உங்களுக்கு….?
வெங்கையா நாயுடு என்ன செய்தார்…
ஏன் இந்த தாக்குதல்….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்… கண்டுபிடியுங்கள். கொள்கையைவிட பதவி முக்கியம் என்று நினைப்பவர்களெல்லாம் புல்லுருவிகள் இல்லாமல் வெற்று அரசியல்வாதியாக நினைக்க எனக்குத் தோன்றவில்லை.
புதியவன்,
ஆக்டிவ்’வாக செயல்பட்டு வந்த
வெங்கய்யா நாயுடுவை “டம்மி”யாக்க
நினைத்து வைஸ் ப்ரெசிடெண்ட்
ஆக்கியதற்கு யார் காரணம் …..?
அவர் தொடர்ந்து அரசியலில் நீடித்தால்
தங்களுக்கு சௌகரியப்படாது என்று
நினைத்து அவரை, “டம்மி” போஸ்டிற்கு
அனுப்பியது யார்…?
வைஸ் ப்ரெசிடெண்ட்’ஆக இருந்தவரை
ஜனாதிபதி பதவியில் அமர்த்தினால்
தங்களுக்கு ஆபத்து என்று
முடிவெடுத்து அவரை ஒதுக்கியது யார்…?
புத்திசாலிகள், திறமையானவர்கள்
யாரும் முக்கிய பதவிகளில் இருக்கக்கூடாது
என்று ஏன் தவிர்க்கப்படுகிறார்கள்…?
நிறைய கேள்விகள் எழுகின்றன…
ஆனல் உருப்படியான பதிலை உங்களால் கூட
கொடுக்க முடியாது; எதையாவது சொல்லி
சமாளிப்பீர்கள்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இது என் தியரி.
என்ன தான் புத்திசாலியாக இருந்தாலும், தலைமைக்கு கட்டுப்படுபவர்களே பிஜேபியில் அதிகாரத்தில் இருக்க முடியும். தலைமை என்பது இங்கு ஒரு குழு. அப்படி கட்டுப்பட்டவர்களாக இருந்தால் தான் பிரச்சனை என்றால் எளிதில் விலக்கி வைக்க முடியும். இது எல்லோருக்கும் பொருந்தும். ஏன், 75 வயதாகிவிட்டது என்று மோடியையும் விலக்கி வைக்க முடியும் தலைமையினால்.
புத்திசாலியாக இருந்தாலும், சுப்பிரமணியம் ஸ்வாமி போன்றவர்கள் loose canon என்பார்களே, அது போல. எந்த பக்கம் வேண்டுமானாலும் வெடிக்கும். சமயத்தில், கட்சியை நோக்கியும்!
அதனால் தான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
தலைமைக்கு அடங்கி வேலை செய்யும் பல அதி புத்திசாலிகள் இன்னமும் பதவியில் உண்டு, கட்காரி போல்!
1. அரசியலில், கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்பவர்களின் வார்த்தைகளுக்கு என்றுமே மரியாதை இருக்கும். அரசியல் கட்சியும் ஓரிரண்டு நபர்களினால் நடத்தப்படுவதல்ல. இன்றைக்கு இருக்கும் சூழலில், ஆர்.எஸ்.எஸ் ஸே மோடிக்கு வாக்களிக்கவேண்டாம் என்று சொன்னாலும் அதன் உறுப்பினர்களே கேட்காத அளவிற்கு மோடி அவர்களின் மக்கள் செல்வாக்கு இருக்கிறது.
//’தங்களுக்கு சௌகரியப்படாது’ //- இது தலைமைப் பதவியில் இருக்கும் எல்லோரும் செய்யும் செயல்தான். கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோ இல்லை ஒரு துறையில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களோ, தங்களுக்குத் தோதுப்படும் ஆட்களைத்தான் முக்கிய இடத்தில் வைத்திருப்பார்கள். இதன் நோக்கம் தவறானதல்ல.
2. கட்சியின் கொள்கைகளை மீறி, தலைமையின் எண்ணத்திற்கு மாறாக நடந்துகொள்ளும் யாருக்குமே பெரும்பாலும் அரசியல் எதிர்காலமோ வாய்ப்போ கிடைக்காது. கண்ணுக்கு முன்னால் தெரிந்தது பாராளுமன்றத்தில் ஒரு நிகழ்வில் வெங்கையா நாயுடு நடந்துகொண்டது கட்சித்தலைமைக்குப் (அரசியல் தலைமைக்குப்) பிடிக்கவில்லை என்பது. அதுவும் தவிர, கொள்கையை மீறி, பின்வாசல் வழியாக அழுத்தம் தர, திமுகவுடன் நெருக்கம் காட்டியதும், தலைமையின்அரசியல் நோக்கத்தை மீறி சென்னை வந்ததும் அவருக்குப் பின்னடைவைத் தந்தது. 73 வயதிற்கு மேல், அவருக்கான வாய்ப்புகள் இனி இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
3. //புத்திசாலிகள், திறமையானவர்கள் யாரும் முக்கிய பதவிகளில்// – அரசியல் பதவிகளுக்கு இது ஒரு முக்கிய க்ரைடீரியா அல்ல. தலைமையின் எண்ணத்திற்கு ஒத்துப்போய், தவிர்க்கமுடியாத நேரங்களில் வளைந்துபோய், அல்லது தவறுக்குப் பொறுப்பேற்று (தலைமையின் தவறுக்குத் தான் பொறுப்பு ஏற்பது) இருப்பதுதான் அரசியலில் மேலே வருவதற்கான வழி என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டியதில்ல்லை.
4. //குழுவாவது வெங்காயமாவது….// – முன்பு ஒரு காணொளியில் பார்த்தேன். அமித்ஷாவும் ஒரு நேரத்தில், தான் சொன்னபடி நடக்கவில்லை என்றால் ராஜினாமா அஸ்திரத்தை எடுத்ததாக. (தலைமைக் குழுவின் மீட்டிங்கின்போது). கட்சியை நடத்த ஒரு குழு இருக்கும். இரு நபர்களால் கட்சி நடத்தப்படாது. ஆனால் செல்வாக்கு இருக்கும்போது, இரு நபர்களின் சொல்லுக்கு எல்லோருமே ஒத்துப்போவார்கள். (காரத், கம்யூனிஸ்ட் கட்சியை அழிவுக்கு அழைத்துச்சென்றதுபோல) எல்லோருக்கும் புரியும் உதாரணம் வேண்டும் என்றால், BCCI Selection Committee உண்டு. அதனையும் மீறி தான் நினைத்த ஜால்ராதான் – ரவி சாஸ்திரி, கோச்சாக வரணும் என்று கோஹ்லி பார்த்துக்கொண்டார். அவருடைய ஆட்டத் திறமை, ரசிகர்களின் செல்வாக்கு, BCCIஐ விடப் பெரிதாக இருந்தது. தன் இஷ்டப்படி ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பளித்தார், கீழே தள்ளினார். கோஹ்லியின் திறமை மங்கி அவர் இந்திய அணியின் லயபிலிட்டி என்ற நிலை தோன்றியவுடன், ரவியும் கழற்றிவிடப்பட்டார், கோஹ்லியின் பல்லும் பிடுங்கப்பட்டது. இன்று கோஹ்லியின் நிலைமை, சாதாரண ஆட்டக்காரர், ஏசியன் கப்பில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியிலேயே இருக்கமாட்டார்,
As I saw your reply only today, I have responded today.
bandhu,
குழுவாவது வெங்காயமாவது….
உங்களை நீங்களே ஏன் ஏமாற்றிக்
கொள்கிறீர்கள் bandhu,
உங்கள் மொழியில் சொல்வதானால்,
இங்கு குழு என்பது தலை-1 & தலை-2…
அவ்வளவு தான்.
கட்கரியின் மீது கை வைக்கமுடியவில்லை …
ஏனென்றால், அவருக்கு நாக்பூரின்
முழு ஆதரவு உண்டு.. அவரைத் தொட்டால்,
ஷாக் அடிக்கும். தொடுபவருக்கே
ஆபத்தாக மாறும்….அது தான் காரணம்….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்