……………….
கீழே ஒரு சுவாரஸ்யமான படம்…..
திருச்செந்தூரில் வள்ளி குகை அருகே
விசேஷ பந்தல் போடப்பட்டு –
அங்கே ஒரு ” சத்ரு சம்ஹார ” யாகம் நடந்திருக்கிறது..
………….

………….
யாகம் செய்தவர் யார்…?
புகைப்படத்தை பார்த்தாலே தெரியுமே….
தமிழகத்தின் முக்கிய குடும்பத்தின் ” மாப்பிள்ளை சார் “….!!!
யாகத்தை செய்வித்தவர் யார்….?
அதுவும் – புகைப்படத்தைப் பார்த்தாலே தெரியும்….!!!
சில சந்தேகங்கள் –
- சபரி’க்கு அப்படி யார் ” சத்ரு…? ” (அதாவது விரோதி …)
-யாகம் செய்வதன் மூலம் எதிரியை(களை) அழித்து/
ஒழித்து விட முடியும் என்று நம்புகிறாரா….?
இதற்கு மாமனார் அவர்களின் ஆசியும் உண்டோ …?
- திமுக அரசு விசேஷ பயிற்சி கொடுத்து,
நிறைய அர்ச்சகர்களை உருவாக்கி இருக்கிறதே….
அவர்களில் யாரையாவது பயன்படுத்திக்கொள்வது
தானே நியாயம்….? ஏன் இப்படி “யாரை”யோ
வைத்து யாகம் செய்கிறார்….?
இதற்கு “மானமிகு” வீரமணியார்,
“அது” இல்லாத சுபவீ – ஆகியோர்
அப்ரூவல் (அனுமதி) கொடுத்து விட்டார்களா …?
- சரி – திருச்செந்தூர் கோவில் வாசலில்,
இப்படி விசேஷ பந்தல் போட்டு, யாகம் செய்ய
எல்லாருக்கும் அனுமதி உண்டா….?
சாதாரண பொதுமக்களுக்கும்
இந்த முறை’யில் தங்கள் தங்கள் எதிரிகளை
அழிக்க வாய்ப்பு கொடுக்கும் விதத்தில் –
தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும்
“சத்ரு சம்ஹார யாகம்” செய்விக்கும்
திட்டத்தை அரநிலையத்துறையே
அறிமுகம் செய்ய “உத்தேசம்” எதுவும் உண்டா …?
திருவாளர், மாண்புமிகு அரநிலையத் துறை அமைச்சர்
இத்தகைய சந்தேகங்களை எல்லாம் தெளிவிப்பாரா….?
.
………………………………………….
//சபரி’க்கு அப்படி யார் ” சத்ரு…? ”// – ஏதோ..நீங்கள் சொல்வதைப் பார்த்தால், மேல நான், கீழ நீ இன்சார்ஜ் என்று குரல் எழுந்த வேளையிலேயே, இது எதிர்காலத்துக்குச் சரிப்படாதே என்று நினைத்து, தன் ஆட்களை ‘மேலே’ ராஜ்ஜிய..வுக்கு அனுப்ப ஆரம்பித்தவர்தான் ‘சத்ரு’ என்று நினைப்பதுபோலத் தெரிகிறதே…
//திமுக அரசு விசேஷ பயிற்சி கொடுத்து, நிறைய அர்ச்சகர்களை உருவாக்கி // – Brilliant. பாராட்டுகள். மற்ற சாதியினரை வழக்கறிஞர்களாக, ஆடிட்டராக, மருத்துவர்களாக, அர்ச்சகர்களாக ஆக்கினாலும், தங்களுக்கு பிராமணர்கள் மட்டும்தான் வேண்டும் என்று எப்போதும் செயல்படுத்தும் திமுக தலைமையைப் பற்றி இன்னும் புரிந்துகொள்ளவில்லையா?
//“மானமிகு” வீரமணியார், “அது” இல்லாத சுபவீ // – வீரமணிக்கு ‘மானமிருக்கிறது’ என்று கண்டுபிடித்துவிட்டதால் இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்ற விருது உங்களுக்குத் தரப்படும் என்ற எதிர்பார்ப்பா?
//மாண்புமிகு அரநிலையத் துறை அமைச்சர்// – சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.
//தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் “சத்ரு சம்ஹார யாகம்” செய்விக்கும்// – யாகம் செய்ய நினைப்பவர்களுக்கு இலவச பித்தளைக் கூஜா வழங்கப்படுமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையே..
🙂
இந்த அரசு விழாவில், கிருத்துவ போதகர்கள், முஸ்லீம் இமாம்கள் எங்கே ?
இந்த யாகத்தை தடை செய்ய வேண்டும்.இது திராவிட மாடல் ஆட்சி
Good
“இதற்கு மாமனார் அவர்களின் ஆசியும் உண்டோ …?”
அதைவிட வலுவான மாமியாரின் ஆசி நிச்சயம் உண்டு!!!!!!!!
நியாயமான பிரார்தனைகளுக்குத்தான் யாகம் செய்தால் பலன் கிடைக்கும் .
சத்ரு சம்ஹாரம் செய்ய இவர் என்ன முருக கடவுளா? இந்து கடவுள்களை
நிந்திக்கும் இவர்களுக்கு யாகங்கள் மீது நம்பிக்கை இருப்பது பெரிய முரண்.
இவர்களுக்கு ஓட்டு போடும் இந்துக்களை என்னவென்று சொல்வது?
சத்ரு சம்ஹார யாகம் செய்ய எவ்வளவு கட்டணம் என்று ஹிந்து அறநிலையத்துறை
அறிவிக்கலாம் . தேவைப்படுபவர்கள் பயன் படுத்தி கொள்ளலாமே.