
……………………
ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக, இயக்குநராக,
தயாரிப்பாளராக அறியப்பட்ட –
சார்லி சாப்ளின் (சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்
(Sir Charles Spencer Chaplin,
ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) – என்பவரை –
ஒரு தலைசிறந்த தத்துவமேதையும் கூட என்பதை
பலர் அறிய மாட்டார்கள்….
அவரது சிந்தனையில் விளைந்த வார்த்தை
முத்துக்கள் சில கீழே –
……………………
ஏராளமான உற்பத்திகள் செய்யும்
இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்
என்ன பயன்.. ?
நாம் வறுமையில் தான்
உழன்று கொண்டிருக்கிறோம்.
இயந்திரங்களை விட நமக்கு
அதிகம் தேவை மனிதமே..!
சர்வாதிகாரர்கள் தாங்கள்
சுதந்திரமாக இருந்து கொண்டு
மக்களை அடிமைப்படுத்தி
வைத்திருக்கிறார்கள்.
புன்னகைத்து பாருங்கள்
வாழ்க்கையும் அர்த்தம்
உள்ளதாக மாறும்.
உங்களை தனியாக
விட்டாலே போதும்
வாழ்க்கை அழகானதாக
இருக்கும்.
நமது அறிவு யார் மீதும் நம்மை
நம்பிக்கை அற்றவர்களாக
ஆக்கி விட்டது.
நமது புத்திசாலித்தனமோ
கடின மனம் கொண்டவர்களாகவும்
இரக்கமற்றவர்களாகவும்
நம்மை மாற்றிவிட்டது.
உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும் மகிழ்ச்சியும்
பிரச்சனைகளுடன் போராட
மட்டும் அல்ல..
அதிலிருந்து மீளவும் உதவும்.
போலிக்கு தான்
பாராட்டும் பரிசும் அதிகம் ..
உண்மைக்கு அநேக சமயங்களில்
ஆறுதல் பரிசு மட்டுமே.!
ஆசைப்படுவதை மறந்துவிடு..
ஆனால் ஆசைப்பட்டதை
மறந்து விடாதே..!
நான் புரட்சியாளன் அல்ல..
மக்களை மகிழ்விக்கும்
கலைஞன் அவ்வளவு தான்.
வாழ்க்கை வெகு தொலைவில்
இருந்து பார்க்கும் போது
மிகவும் ஆனந்தமானது..
அருகில் இருந்து பார்க்கும் போது
மிகவும் துயரமானது..!
சில பெற்றோர்களின் அன்பு –
பல குழந்தைகளின் ஒளி
பொருந்திய எதிர்காலத்தை கூட
இருளடைய செய்து விடுகிறது.
என் துன்பங்களை என் உதடுகள்
அறிவதில்லை..
அதனால் தான் அவை என்றுமே
சிரித்துக்கொண்டே இருக்கின்றன.
நகைச்சுவை என்பது
தனக்காக மட்டுமல்லாமல்
பிறருக்காகவும்
இருக்க வேண்டும்.
தன்நம்பிக்கையை இழக்காதீர்கள்..
நம்மை ஆட்கொண்ட
துயரம் என்பது வேறொன்றுமில்லை
பேராசையின் விளைவுதான் அது.
நான் மழையில் நடக்கவே
விரும்புகிறேன்.. ஏனென்றால் –
அப்பொழுது தான் நான் அழுவது
உலகிற்கு தெரியாது.
அறிவு கூர்மையை விட..
நமக்கு அதிகம் தேவை
இரக்க உணர்வும்
கண்ணியமுமே..!
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும்
இடம் இருக்கின்றது..
நம்முடைய பூமி எல்லோருடைய
தேவைகளையும் நிறைவேற்ற கூடிய
அளவுக்கு வளம் மிக்கது.
எனவே போட்டி வேண்டாம்…
பிறருடையதை பறிக்க வேண்டாம்.
நாம் மிக அதிகளவு சிந்திக்கின்றோம்..
ஆனால் மிக மிக குறைந்தளவே
அக்கறை கொள்கிறோம்.
நேசிக்கப்படாதவர்கள் தான்
பிறரை வெறுப்பார்கள்.
சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட
தனிமனிதன் நான்.
இது மட்டுமே என் அரசியல்.
அணுகுண்டுகள் நம்மை அழிப்பதற்கு
முன்னால் அவற்றை நம்மால்
அழித்து விட முடியும் என்று
நான் நம்புகின்றேன்.
மனிதர்களின் ஆன்மாக்களின்
பேராசையானது நஞ்சைக்
கலந்து விட்டது.
அந்த பேராசை –
வெறுப்பினால் இந்த உலகத்துக்கே
முட்டுக்கட்டை போட்டு விட்டது.
துன்பத்திலும் துயரத்திலும்
மக்களை தள்ளி விட்டது.
நீங்கள் வாழ்க்கையை பார்த்து
பயப்படவில்லை என்றால்
வாழ்க்கை அற்புதமானதாக
இருக்கும்.
.
……………………………………………….