……………………


………………………
நம்மில் பலர் நமது அற்ப சங்கடங்களை / துன்பங்களை
எல்லாம் நினைத்து எனக்கு மட்டும் ஏன் இத்தனை
துன்பங்கள் என்று வருந்துகிறோம்…. பெரும் கவலையில்
ஆழ்கிறோம்.
அத்தகையோருக்காகவே இந்த காணொலி….
நாம் படுகின்ற கஷ்டம் இவர்களுடன் ஒப்பிடுகையில்
ஒன்றுமே இல்லை என்பது புரியும்….
இவர்களைப் பெற்றவர்கள், இவர்கள் சிறு குழந்தையாக
இருக்கும்போதே – தங்களால் முடியாது என்று
சொல்லி காப்பகத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.
இந்த 17-18 வயது வரை இவர்கள் எத்தனை தொல்லைகளை
சந்தித்திருப்பார்கள்….? மற்றவர்களைப் போல் இயற்கையாக
எதையும் செய்ய முடியாத இவர்களை பார்த்துக் கொண்ட
அந்த இல்லத்தைச் சேர்ந்த தாய்மார்கள், எவ்வளவு
சிரமப்பட்டிருப்பார்கள்….?
ஒட்டிப்பிறந்த இந்த பெண் குழந்தைகளின், மனோ நிலை,
உணர்வுகள் எப்படி இருக்கும்….?
இவர்கள் நிலையைப் பார்க்கும்போது எனக்கு
படைத்தவனின் மேல் கடும்கோபம் தான் வருகிறது….
என்ன சொல்லி திட்டுவது அந்த படைத்தவனை …???
…………….
.
………………………………………………
ஒரு அரசனின் சகோதரன் எப்போது பார்த்தாலும் அவனுக்குக் குடைச்சல் தருபவனாகவும், ராஜ்ஜிய வேலைகளில் நிறைய நேரத்தை சகோதரனின் செயல்களைக் கண்காணிப்பதிலும் செலவிடவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிவிட்டதை எண்ணியும், எப்போதும் சகோதரனிடம் அன்பை மட்டுமே பாராட்டணும், எந்தக் காரணம் கொண்டும் அவனைத் துன்புறுத்துவிடக்கூடாது என்று தன்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்ட தந்தையை நினைத்து… அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால், அவனுடனேயே எப்போதும் இருக்கும் நிலைமை வேண்டும், தனியாக அவனைக் கண்காணிக்க ஆட்கள் நியமிப்பதைவிட தனக்குத் தெரியாமல் அவன் ஒன்றும் செய்யமுடியாதவாறு இருக்கும் நிலை வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாகவும், அவனுடைய அடுத்த ஜென்மத்தில் சயாமீஸ் இரட்டையர்களாகப் பிறந்துவிடுவதாகவும் ஒரு கதையைத் தயார் செய்திருந்தேன் (சயாமீஸ் இரட்டையர் படத்தைப் பார்த்த பிறகு). இப்படித்தான் மனது ஏதேனும் சொல்லி ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இரட்டையர்களின் வாழ்க்கை மிகவும் கொடியது, அவர்களைப் பார்த்துக்கொள்பவர்களுக்கும் வாழ்வு மிகவும் கஷ்டமானதுதான்.
இந்தக் காணொளி சொல்லும் மனித நேயத்தையும் கவனிக்கத் தவறவில்லை.
https://www.ndtv.com/world-news/brazilian-conjoined-twins-who-shared-fused-brains-successfully-separated-3213498#pfrom=home-ndtv_lateststories
God also gives solutions. May be not immediately.
Hope the girls also get a solution soon.
Sridhar
ஸ்ரீதர்,
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொன்ன பிறகுதான் அந்த செய்தியை நான் படித்தேன்.
உண்மை தான். எதிர்காலத்தில் இந்த பெண்களுக்கும்
நல்ல வழி பிறக்கக்கூடும்… அந்த படைத்தவனை வேண்டுவோம்…!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அதனால் தான் படைத்தவன் மேல்பெரிய அளவில் நம்பிக்கையில்லை….