

காமராஜ் வீட்டில் திணற திணற ரெய்டு..
ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் நகைகளை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை!
………………………………………..
இந்த தலைப்பிலான செய்தியில் இரண்டு மாறுபட்ட
தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
1) திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காமராஜ் தெரிவித்துள்ளார்.
எனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிமுகவை மிரட்டும் ஆளும்கட்சியின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதையே அதிகாரிகள் தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
செலவுக்காக வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை மட்டுமே அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றி அதை மீண்டும் திருப்பி அளித்துவிட்டு சென்றுவிட்டனர்.
…………………..
பணம், நகைகள் பறிமுதல் –
இந்த அதிரடி சோதனையில் இதுவரை ரூ 41.06 லட்சம் பணம் மற்றும் 963 சவரன் நகைகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் 15.50 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கி பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐ போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தகவல்களுமே நிஜமாக இருக்க வாய்ப்பில்லை …
மக்களை முட்டாள்களாக்கும் முயற்சி இது.
இரண்டில் எது உண்மை …?
உண்மை நிலையை அரசுத் தரப்பு விளக்குமா …?
.
…………………………………………………..