இளவரசருக்கு மந்திரிப்பதவி கேன்வாஸ் செய்வதுமட்டும் தான் அமைச்சரின் வேலையா …?

…………………………

வாய் கிழியப் பேசுகிறார்கள்…
ஆனால் தங்கள் துறை நிர்வாகம் எப்படி இருக்கிறது
என்று பார்க்க இவர்களுக்கு நேரமில்லை…!!

இந்த பள்ளியின் நிலையைப் பார்க்க அமைச்சருக்கு
அவமானமாக இல்லையா …?

இது போல் தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை
நூறு பள்ளிகள் இருக்கின்றனவோ … ?

கீழ்க்காணும் பத்திரிகை செய்தியை பார்த்த பிறகாவது
அரசு பள்ளிகளுக்கு விமோசனம் பிறக்குமா … ?

…………………………

அரசுப் பள்ளியில் வகுப்பறை வசதியின்றி மாணவிகள்…!

மதுரை, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை மற்றும் நூலக வசதிகள் இல்லாமல் மாணவிகள்
மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் அவலநிலை தொடர்கிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில்
இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 1949-ல் தொடங்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் திருமங்கலத்தைச்
சுற்றியுள்ள கிழவனேரி, அச்சம்பட்டி, மீனாட்சிபுரம்,
அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த
மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும்
மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து
வருகிறது.

தற்போது சுமார் 1,700க்கும் மேற்பட்ட மாணவிகள்
இங்கு பயின்று வருகின்றனர்.

ஆனால், வகுப்பறை கட்டடங்கள் போதிய அளவில் இல்லை.
தற்போது தான் – இரண்டு வகுப்பறைகள்

 • ரூ.60 லட்சம் செலவில் –
 • அதுவும் தனியார் நிதி உதவியுடன் –
  கட்டப்பட்டு வருகின்றன.

கூடுதலாக மேலும் ஒன்பது வகுப்பறைகள் தேவைப்படுகிறது. மாணவிகள் வகுப்பறை வசதி இன்றி மரத்தடியில் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிக்கு என தனியாக நூலக வசதி இல்லை.

அத்துடன் குடிநீர் வசதியும் இன்றி கடுமையாக சிரமப்பட்டு வருகின்றனர்.

https://www.minnambalam.com/public/2022/07/07/5/girls-students-suffer-without-classrooms

.
…………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to இளவரசருக்கு மந்திரிப்பதவி கேன்வாஸ் செய்வதுமட்டும் தான் அமைச்சரின் வேலையா …?

 1. புதியவன் சொல்கிறார்:

  பலர் காணொளிகளில் பேசுவதுபோல், இளவரசர் படப்பிடிப்புத் தளங்கள், பாடல் வெளியீடு போன்ற இடங்களின் வேலைகள், ப்ரெசன்ட் சார் என் தினமும் ஆஜர் கொடுத்தல், லீவு விடுதல் போக நேரமிருந்தால் துறை அறிவிப்புகள் என பிசியாக இருப்பவருக்கு அதிகப்படியான வேலைகள் கொடுப்பதில் உங்களுக்கு ஏன் தீராத ஆசை? 50 ஆண்டுகள் ஒன்றும் நடக்காதாம். இவர் மட்டும் இதெல்லாம் சரி பண்ணணுமா? ஆசை தோசை அப்பளம் வடை

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


  நாம் கேள்வி கேட்டது தவறு …

  அமைச்சரும், அதிகாரிகளும்
  எதில் ‘பிஸி’ யாக இருக்கிறார்கள்
  என்பது இந்த செய்தியை பார்த்தபிறகு,
  இப்போது புரிகிறது.

  https://www.dinamalar.com/news_detail.asp?id=3071783

  சென்னை: தனியார் பள்ளி வாகனங்களில், செஸ் விளையாட்டு போட்டிக்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்ட, அரசு கட்டாயப்படுத்துவதாக, தனியார் பள்ளி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

  இதுகுறித்து, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:செஸ் விளையாட்டு போட்டிக்காக, ‘மெகா சைஸில்’ தமிழக அரசு உருவாக்கியுள்ள ‘லோகோ’வுக்கான ‘ஸ்டிக்கர்’களை, பள்ளி பஸ்களின் மூன்று புறமும் ஒட்ட வேண்டும் என, போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர். இது, பள்ளி வாகன விதிகளுக்கு முற்றிலும் முரணானது.

  அதேபோல், கரூரில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவுக்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பள்ளிகளின் வாகனங்கள், பள்ளிகளின் செலவில் கட்டாயப்படுத்தி இயக்கப்பட்டன.ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் கோவைக்கு வரவுள்ளதாகவும், அதற்கும் எரிபொருள் நிரப்பி, பள்ளி வாகனங்களை அனுப்ப வேண்டும் என்றும், போக்குவரத்து அதிகாரிகள் கட்டாயப் படுத்துகின்றனர்.

  இதுபோன்று, பொது நிகழ்ச்சிகளுக்கு பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதால், அதில் மாணவர் அல்லாதவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்துவர். அதனால், மாணவர்களுக்கு ஏற்ற வகையில், வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, முதல்வர் தலையிட்டு, பள்ளி வாகனங்களை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி பள்ளி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s