
ஒரு சுவாரஸ்யமான பேட்டி –
நம்பியவர்களில் பெரும்பாலானோர்
எடப்பாடியாரின் பக்கம் போய் விட்ட நிலையில் –
எதிர்பாராத இடத்திலிருந்து,
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு வலுவான –
உரத்த குரலாக வந்திருக்கிறார் புகழேந்தி ….
……………
.
……………………………………………
ஒரு சுவாரஸ்யமான பேட்டி –
நம்பியவர்களில் பெரும்பாலானோர்
எடப்பாடியாரின் பக்கம் போய் விட்ட நிலையில் –
எதிர்பாராத இடத்திலிருந்து,
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒரு வலுவான –
உரத்த குரலாக வந்திருக்கிறார் புகழேந்தி ….
……………
.
……………………………………………
விசுவாசிக்கு ஜெ கொடுத்த மரியாதையையும், தற்போது அதிமுக ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எழுப்பப்படும் குரலையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். பணம் கொடுத்தார் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதிமுக என்ற ஆலமரத்தால் வாழ்வு பெற்ற விசுவாசிகள் பலர் பொதுக்குழுவில் இருப்பார்கள். நிச்சயம் எடப்பாடி காசு தருகிறார் என்பதற்காக ஆதரவுக் குரல் எழுப்பமாட்டார். நான் சி.வி. சண்முகம் போன்றவர்களை விசுவாசிகளாக நம்புவது கிடையாது.
இருந்தாலும் யாருக்கு ‘விதி’ இருக்கும் என்றுதான் தெரியவில்லை. அதிமுகவுக்கு நல்லது நடந்தால் சரிதான். சில ஜோசியர்கள் சொல்வதுதான் வித்தியாசமாக இருக்கிறது (சசிகலா, ஓபிஎஸ் காம்பினேஷன் வரும், எடப்பாடிக்கு வாய்ப்பில்லை என்று).
// பணம் கொடுத்தார் என்று சொல்லப்படுவதை
நான் நம்பவில்லை. //
நீங்கள் சொல்வதை உங்கள்
மனசாட்சியே நம்பாதே… !!!
கா.மை. சார்…. உண்மை தெரியாது, நானும் எழுதுவது தவறாகலாம், உங்கள் அனுமானமும் தவறாகலாம். 5200 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பணத்தைக் கொடுத்துத் தன்னை ஆதரிக்கச் சொன்னார். மீதி 200 பேர் பணம் வாங்கவில்லை, அதனால் ஆதரிக்கவில்லை என்று ஆகிறதே உங்கள் அனுமானம்? அரசியலில் பணம் இல்லாமல் ஒன்றும் கிடையாது. ஆனால் பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்காது, விசுவாசம் உட்பட.
வாங்குபவர்களுக்கும் மனசாட்சி இருக்காது. (பணம் கொடுத்தால்). இவன் என்ன சொந்தப் பணத்தையா கொடுக்கிறான், திருடியதை இப்போ பங்கு தருகிறான் என்று மனம் சொல்லி அதனை ஜஸ்டிஃபை செய்யும். இது பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும். (எப்போதுமே வாக்காளர்கள், இந்தத் திருடன் அதிகமாகப் பணம் கொடுக்கிறான், நிறையவே திருடியிருப்பான் போலிருக்கு என்று யோசிப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு மூளை கிடையாது. திருடியதில் இவன் அதிகப் பங்கு நமக்குக் கொடுக்கிறான், அவன் குறைந்த பங்கை நமக்குக் கொடுக்கிறான் என்றே எண்ணுகிறார்கள் பணம் வாங்கி வாக்களிப்பவர்கள்)