…………….

……..
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறி அவர்களையும் வழக்கில் சேர்த்து, உரிய விசாரணை நடத்த அனுமதிகோரி கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி,
7 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.” என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்…
கமல்ஹாசனை நாமும் வழிமொழிகிறோம்….
திமுக அரசு தயங்குவது –
வேலுமணிக்காகவா அல்லது
அந்த ஐஏஎஸ் அதிகாரிகளில்
யாரையாவது காப்பாற்றவா …?
.
…………………………………………….
//திமுக அரசு தயங்குவது – வேலுமணிக்காகவா அல்லது அந்த ஐஏஎஸ் அதிகாரிகளில் யாரையாவது காப்பாற்றவா …?//
அல்லது, தேவையில்லாமல் அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜகவை வளர்த்துவிட வேண்டாம் என்று எண்ணுவதாலா?
என்ற கேள்வியையும் சேர்த்துக்கொள்ள மறந்துவிட்டீர்களா? ஒருவேளை அந்த அதிகாரிகளின் பெயர்களும் தெரிந்தால், இந்தக் கேள்வியே எனக்கு எழுந்திருக்காதோ?
அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்தால் இப்போது திமுக அரசின் தவறுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் அலெர்ட் ஆகி ஒத்துழைக்க மறுத்தால் கோடிகள் செலவழித்து பதவிக்கு வந்தவர்களின் கதி அதோகதி ஆகிவிடுமே என்கின்ற அக்கறைதான்!!! வேறென்ன?