…………………………

தமிழக – உழைக்கும் சுய உதவிக்குழு பெண்களுக்கு (மற்ற பெண்களுக்கும் கூடத்தான் …) ஒரு உபயோகமான செய்தி –
தெலங்கானா மாநிலத்தின் பெத்தபள்ளி மாவட்டத்தில் இருக்கும்
சுல்தான்பூரை சேர்ந்த பெண்கள், பாரம்பரிய தெலுங்கு
வீட்டு சிற்றுண்டிகள், லட்டு, முறுக்கு, அதிரசம் போன்ற பலகார
வகைகளை மிகப் பெரிய அளவில் தயாரித்து விற்பதன் முலம்,
கோடிகளில் வருமானம் ஈட்டும் வணிக சாம்ராஜ்யத்தை
உருவாக்கியுள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுய உதவிக் குழு தொடங்கிய இந்த
பலகாரத் பதயாரிப்பு தொழிலை தற்போது ஏழு குழுக்கள் செய்கின்றன.
விழாக்கள், கொண்டாட்டங்களின்போது அவை நூற்றுக்கணக்கான
மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு
வழங்குகின்றன. ஏழு குழுக்களின் ஆண்டு வருவாய் சுமார் 4 கோடி
இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
பலகாரங்களைத் தயாரிக்கும் தொழில், அவர்களை பொருளாதார
ரீதியாகச் சுதந்திரமாக்கியுள்ளது. மேலும், தாங்கள் இப்போது
வாழ்க்கையில் சுயசார்பு நிலையில் இருப்பதாக சுல்தான்பூர் பெண்கள்
நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட ஒரு காணொளி –
லிங்க்கில் க்ளிக் செய்யுங்கள் –