அதிமுக பிளவு – அடுத்து என்னென்ன நடக்கக்கூடும் ….???

…………..

விஷயம் தெரிந்த – அனுபவசாலியான
ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார் ….

……………..

.
……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to அதிமுக பிளவு – அடுத்து என்னென்ன நடக்கக்கூடும் ….???

 1. புதியவன் சொல்கிறார்:

  என்னத்த விஷயம் தெரியுமோ… எதில் அனுபவசாலியோ இந்தத் தராசு… காடை சாருக்குத்தான் வெளிச்சம்.

 2. புதியவன் சொல்கிறார்:

  நிர்வாகிகளை எடப்பாடி விலைக்கு வாங்கிவிட்டார், – நல்ல நகைச்சுவை. எம்ஜிஆரே ஒரு சமயத்தில் தனது தளபதிகளைக் கூப்பிட்டு, எவ்வளவு பணம் வேணும் என்று கேட்க, காசு வாங்கிக்கொண்டு ஆதரிக்கும் அளவு நாங்கள் கெட்டுப்போய்விட்டோமா என்று ஒரு அமைச்சர் சொன்னாராம், வலம்புரிஜான், தன்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் பணம் வாங்கிக்கொண்டிருப்பேன் அப்போ கஷ்டத்தில் இருந்தேன், முதலில் நின்றுகொண்டிருந்தவரிடம் கேட்டு அவர் மறுத்ததால் தன்னால் எதுவும் செய்யமுடியாமல் போயிற்று என்று எழுதியிருந்தார்.

  பொதுக்குழு, யார் கட்சியை வழிநடத்துவதற்கு உகந்தவர், கட்சியை வெற்றிப்பாதையில் செலுத்தும் திறமை வாய்ந்தவர் என்று பார்க்கும். இதில் கட்சியை வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றதில் எடப்பாடிதான் திறமையானவர் என்று அவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் அனுபவம் இருந்திருக்கிறது.

  எம்ஜிஆரை வெளியேற்றியபோது, வைகோவை வெளியேற்றியபோது, நாஞ்சில் வெளியேறியபோது அச்சில் ஏற்ற முடியாதவாறு வசையும், குண்டர்களை ஏவுதலும் செய்தவர் கருணாநிதி. அதனால் ஒரு சிலர், ஓபிஎஸ் செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாட்டில் வீசியிருக்கிறார்கள். திமுக சார்பு ஊடகங்கள் அனைத்தும் தவறுதலாக மனம் போன போக்கில் எழுதுவார்கள் என்பதால் நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். என்ன தவறு?

  ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். மத்திய அரசை தங்கள் கொள்கைக்கு ஏற்றவாறு பல விஷயங்களில் ஆதரிப்பது என்பது வேறு. தமிழகத்தில் இன்னொரு கட்சிக்காக உழைப்பது என்பது வேறு. இதே ஊடகங்கள், (கார்ட்டூன் போட்டவை), திமுக+காங்கிரஸ் மத்திய அரசு நடத்தியபோது எந்தமாதிரி கார்ட்டுன்கள் போட்டன என்பதையும் நினைவுக்குக் கொண்டுவாருங்கள். உங்கள் பதிவு ஒருதலைப்பட்சமானது என்பது என் முடிவு. (இல்லாவிட்டால் எடப்பாடியை ஆதரித்து பலப்பல மூத்த பத்திரிகையாளர்கள் வெளியிட்ட காணொளியையும் ஒரு ஒப்பீட்டுக்காக வெளியிட்டிருப்பீர்களே)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   // உங்கள் பதிவு ஒருதலைப்பட்சமானது
   என்பது என் முடிவு. //

   சபாஷ்…. அமாவாசை சத்யராஜை
   ஆதரித்து பதிவு போட்டால் நான் நடுநிலை….
   எதிர்த்து எழுதினால் – ஒருதலைப்பட்சம்.

   தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில்
   நடக்கும் விவாதங்களை பார்த்து பார்த்து
   நீங்களும் அதே மாதிரி ஆகி விட்டீர்கள்
   போலிருக்கிறது.

   ஒருவேளை அமாவாசையை ஆதரித்து
   தூள் கிளப்பிய அந்த 2167 நபர்களில்
   நீங்களும் ஒருவரோ….?

   அங்கே இருந்தவர்களில் பாதி பேர் கூட
   நிஜமான பொ.கு. உறுப்பினர் அல்ல
   என்று ஓரு ரிப்போர்ட் சொல்கிறதே
   பார்த்தீர்களா …?

   எடப்பாடி காசு செலவழிக்காமலே
   இத்தனை ஆதரவாளர்களை பெற்றார்
   என்று –
   – நீங்கள் சொல்வதை –

   (ஓரு படத்தில் விஜய் சொல்வதை போல)

   – உங்கள் மனம் கூட நம்பாதே …!!!

   உங்களை திருப்தி செய்வதற்காக,
   நான் அயோக்கியர்களை – உத்தமர்
   என்று சொல்ல மாட்டேன்.

   என் மனசாட்சி
   தான் என்னை வழி நடத்தும் சக்தி.

   நீங்களே ஒப்புக்கொண்டது போல்
   உங்கள் மாதிரி –
   நான் எந்த கட்சிக்கும்
   அனுதாபியும் அல்ல – அடிமையும் அல்ல….

   எனவே என் மனதிற்கு தோன்றுவதைத் தான்
   நான் இங்கு எழுதுவேன்.


   வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.