
………
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே –
- எடப்பாடியாரின் பொதுக்குழுவில் அக்கா வளர்மதி
பாடுகிறார் நேற்று…. - சிரிப்பு வருகிறது இன்று – அதை மீண்டும்
போட்டுப் பார்க்கும்போது …!
எடப்பாடியார் எத்தனை கோடிகள்
செலவழிதிருப்பார் – அதிமுகவை கைப்பற்றுவதற்கு ….?
எல்லாம் எதற்காக … பிசினஸ்…. இப்போது
போடுவதெல்லாம் ஜஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் தான் –
பின்னால் கொட்டப்போகும் லாபத்திற்காக …!!!
சும்மா கோடிகளை கொட்ட முட்டாளா என்ன …?
தராசு ஷ்யாம் அலசுகிறார் – காணொளி கீழே –
………………
.
………………………………………….
கா.மை. சார்…. ஏன் நீங்க இவ்வளவு அதிதீவிரமாக எடப்பாடியை எதிர்க்கிறீர்கள்? வேறு யாரேனும் அதிமுக தலைமைக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? எத்தனையோபேர் இந்த விஷயத்தில் பேட்டியளித்தாலும் தராசு ஷ்யாம் பேட்டியை நீங்கள் பதிவது, அது உங்கள் கருத்தையொட்டி இருக்கிறது என்பதற்காகவே.
//எடப்பாடியார் எத்தனை கோடிகள் செலவழிதிருப்பார் – அதிமுகவை கைப்பற்றுவதற்கு ….? எல்லாம் எதற்காக … பிசினஸ்…. இப்போது
போடுவதெல்லாம் ஜஸ்ட் இன்வெஸ்ட்மெண்ட் தான் – பின்னால் கொட்டப்போகும் லாபத்திற்காக …!!! சும்மா கோடிகளை கொட்ட முட்டாளா என்ன …?//
இந்தக் கேள்வியை அரசியலில் இருப்பவர்கள் எல்லோர் மேலும் வைக்கலாமே. முன்பு விஜயகாந்த், பாமக ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்-அதிலும் மார்க்சிஸ்ட், நாம் தமிழர், விசிக, காங்கிரஸ்…. ஒரு ஆனந்தபவன், ஐந்து கோடி ரூபாயை இந்தியாவிற்குக் கொடுத்துவிட்டு, லட்சம் கோடிகளைச் சேர்த்திருக்கும் காங்கிரஸ் குடும்பம் மீதும் வைக்கலாமே-நேரு உட்பட – நாட்டு மக்களுக்கு தன் மகளால்தான் நல்ல ஆட்சி கொடுக்கமுடியும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் வேஸ்ட் என்று நினைத்தவர் அல்லவா நேரு. 360 கோடிகளை பி.கே விற்குக் கொடுத்தது மக்களுக்கெல்லாம் நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவா? இல்லை… பிகே மற்றும் பல ஸ்ட்ராடஜிஸ்டுகளை இந்த அரசியல்வாதிகள் நாடுவது, நாட்டுக்குச் சேவை செய்யவா? ஒருவரை நீங்கள் குற்றம் சாட்டும்போது, அது ஒவ்வொருவராகத் தாவி எல்லோர் மேலும் போய் நிற்காதா? தற்போதைய தமிழக அமைச்சர்களைப் பற்றி சவுக்கு போன்றவர்கள் வெளியிடும் பேட்டிகள் கொட்டிக் கிடக்கின்றன, எதற்காக அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்கள் என்று.
கடந்த 75 வருடங்களில் எத்தனை காமராசர்கள், கக்கன்கள் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? ஒரு பத்து அல்லது இருபது தேறுமா?
இந்த சப்ஜெக்ட் குறித்து இனி எழுதப் போவதில்லை. இரட்டை இலையை யாரும் முடக்க முடியாது. இந்தப் பிரச்சனை என்றாவது ஒரு நாள் (விரைவில்) ஒற்றைத் தலைமையில் போய் நிற்கும். அதிமுகவின் stake holders 2500 பொதுக்குழு உறுப்பினர்களுக்குப் புரியாததோ இல்லை தெரியாததோ, நமக்குத் தெரிந்துவிடப் போவதில்லை.
.
// கா.மை. சார்…. ஏன் நீங்க
இவ்வளவு அதிதீவிரமாக
எடப்பாடியை எதிர்க்கிறீர்கள்? //
————
புதியவன்,
நீங்கள் ஏன் அமாவாசை சத்யராஜை
இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கிறீர்கள்…?
……………………
நான் அதிமுக அனுதாபி. அந்தக் கட்சியை வல்லவர் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்
.
சபாஷ்…
நீங்களும்
ஒரு கட்சியின் அடிமையாக இருப்பவர்
என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்….
என்ன … பாஜகவுக்கு பதில் அதிமுக
என்று சொல்கிறீர்கள்.
ஆமாம் நாளை ஒருவேளை
பாஜக ஓபிஎஸ்ஸை ஆதரிப்பது
என்று முடிவெடுத்து விட்டால்
உங்கள் நிலை எதுவாக இருக்கும் …?
.
கா.மை. சார்… இந்தத் தளத்தில் நிறைய தடவை எழுதியிருக்கிறேன். தமிழக அரசியல் வேறு. மத்திய அரசு வேறு. தமிழகத்தில் திமுகவிற்கு மாற்றான பலம் வாய்ந்த கட்சியாக ஓரளவு நல்ல கட்சியாக (திமுகவைக் காட்டிலும்) பொதுமக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி அதிமுக. அந்தக் கட்சியின் அ னு தா பி (அடிமையல்ல). கொஞ்சம் விட்டால், சோ சார் மறைந்துவிட்டார் என்பதற்காக அவரும் அதிமுகவின் அடிமை என்று சொல்லிவிடுவீர்கள் போலிருக்கிறதே. பாஜக யாரை ஆதரித்தால் என்ன? In fact BJP மூக்கை நுழைப்பதை வெறுக்கிறேன் நான். பாஜக, நடராஜன் மீது சாஃப்ட் கார்னர் காண்பித்ததை, பிறகு சசிகலா மீது… இவற்றை வெறுத்தவன் நான். அதைவிட ஓபிஎஸ்ஸை அடிமையாக்கிக்கொண்ட விதத்தையும், அதன் மூலம் எடப்பாடிக்கு நெருக்கடி தந்ததையும் நான் அவதானித்திருக்கிறேன்.
காலம், அதிமுகவிற்கு சரியான தலைமையைக் காட்டும். தற்போது அது ஈபிஎஸ் என்று தோன்றுகிறது, ஓபிஎஸ் அல்ல. இதனைப் பல்வேறு தரப்பினரும் சொல்லுகின்றனர். இதில் who is BJP? They have to accept what ADMK cadres want.
எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்கு செலவு செய்த தொகையை விட அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதற்கு செலவு செய்தது குறைவு