தகர்ந்த கனவுகள் …அய்யோ பாவம் எடப்பாடியார்….எந்த சினிமாவிலாவது பி.எஸ்.வீரப்பா ஜெயித்தது உண்டா …!!!

…………………..

பலர் – எடப்பாடியார் வல்லவர் –
எனவே அவரிடம்தான் கட்சித்தலைமை
இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக
வாதித்து வந்தனர்…

வல்லவர் என்பதற்காக எந்த சினிமாவிலாவது
வில்லன் ஜெயித்து பார்த்திருக்கிறோமா …?

சரியான நேரத்தில் சரியான தீர்ப்பு உயர்நீதி மன்ற
அப்பீலில் வந்திருக்கிறது.

எடப்பாடியார் மற்றும் அவரது சுயநலவாத
கும்பலின் “பொதுச்செயலாளர்” பதவி மற்றும்
ஓபிஎஸ்ஸை வெளியேற்றுவது குறித்த
ஆசைகளில் மண் விழுந்து விட்டது.

இனி ஓபிஎஸ் படு எச்சரிக்கையாக இருப்பார்.

பார்ப்போம் – இன்றைய பொதுக்குழு கூட்டத்தில்
என்ன நடக்கிறது என்று…

.
………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to தகர்ந்த கனவுகள் …அய்யோ பாவம் எடப்பாடியார்….எந்த சினிமாவிலாவது பி.எஸ்.வீரப்பா ஜெயித்தது உண்டா …!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    From ADMK perspective, why you have termed EPS as Villain and termed OPS as hero? இதைக் குறிப்பிட்டிருந்தீர்களென்றால் உங்கள் பதிவுக்கு அர்த்தம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    //வல்லவர் என்பதற்காக எந்த சினிமாவிலாவது வில்லன் ஜெயித்து பார்த்திருக்கிறோமா …?// – உங்கள் வாதம், எடப்பாடி நல்லவர் இல்லை என்பது. ஓபிஎஸ் மிகவும் நல்லவர் என்பது. எதைக்கொண்டு இந்த முடிவிற்கு வந்தீர்கள்?

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எடப்பாடியின் பின்னால் பாஜக இருப்பதால்
    நீங்கள் வரிந்து கட்டிகொண்டு வருகிறீர்கள்
    என்பது நன்றாகவே புரிகிறது….

    எடப்பாடி முதல்வர் பதவிக்கு எப்படி வந்தார்…?
    ஆது ஒன்று போதாதா வில்லன் என்று சொல்வதற்கு …?

    .

    • புதியவன் சொல்கிறார்:

      மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறீர்களே கா.மை. சார். ஓபிஎஸ் அல்லவா மோடி அவர்களின் காலில் விழுந்த படங்கள் காணக்கிடைக்கின்றன. எடப்பாடி அவர்களின் பின்னால் பாஜக இருப்பதுபோல எனக்குத் தெரியவில்லை. எடப்பாடி independentஆக இருக்கிறார், தலைமைக்குத் தகுதி என்று அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் (90 சதத்திற்கு மேல்) நினைக்கிறார்கள்.

      1. ஓபிஎஸ், ஜெ இருந்ததுபோல தன் கைக்குள் இருப்பார் என்று சசிகலா நினைத்தார். ஆனால் ஓபிஎஸ் ஸின் தன்மானத்தை உரசிப்பார்த்துவிட்டார் (முக்குலத்தோர் ரொம்ப சென்சிடிவ் ஆனவர்கள். நான் அந்த ஏரியாவில் பிறந்தவன், வாழ்ந்தவன்.). ஜெ. அப்படி ஒருக்காலும் தன்னுடைய இரண்டாம் கட்டத் தலைவர்களை, விசுவாசிகளை நடத்தியது இல்லை. ஓபிஎஸ்ஸுக்குப் பதிலாக சசிகலா/தினகரன், எடப்பாடி அவர்களை முதல்வராக மொழிந்து, எடப்பாடி அவர்கள் ஆட்சியைப் பிடித்ததும், தன் திறமையால் அதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். எடப்பாடி அவர்கள், சசிகலா, தினகரனை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, தன் சாணக்கியத்தனத்தினால் ஓபிஎஸ் ஆதரவையும் பெற்று, அரசியல் சாமர்த்தியத்தால் தன் ஆட்சியை ஸ்திரமாக்கிக்கொண்டார். (எடப்பாடி வில்லன் என்று சொன்னால், இதே போன்ற சூழலில்தான் திமுகவில் தன்னை கருணாநிதி முன்னிறுத்திக்கொண்டார் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அதற்கு முன்னால் கருணாநிதி, திமுகவில் முக்கியமான ஐந்து தலைவர்களில் ஒருவர் கிடையாது)

      2. அதிமுக, எந்தப் போராட்டத்திலும் எதிலும் தெளிவான முடிவு எடுக்காததற்கும், firmஆக இருக்காததற்கும் காரணம், இரட்டைத் தலைமை என்றே நான் நம்புகிறேன். ஓபிஎஸ் அளவிற்கு அதிகமாக பாஜகவுடன் இருந்தார்/இருக்கிறார். கூத்தாடிகள் இரண்டுபடுவதால் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்றே நான் நம்புகிறேன். ஓபிஎஸ், சுயநலத்துடன் கட்சியை அடகுவைக்கிறார். இது, தன் மகனுக்கு எம்.பி சீட் வாங்கியது, தன் மகனுக்கு அமைச்சர் பதவிக்காக எடப்பாடிக்கு அழுத்தம் தந்தது, தன் மகனை திமுக முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்திக்கச் சொல்லி, திமுக ஆட்சிக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்தது…. என்று அதிமுக தொண்டர்களால் ஜீரணிக்க முடியாதவற்றைத் தொடர்ந்து செய்திருக்கிறார். பாஜக கொடுக்கத் தயாராக இருந்த அமைச்சர் பதவிக்காக ஓபிஎஸ் ரொம்பவே அழுத்தம் கொடுத்தபோது, எடப்பாடி அதனை ஒத்துக்கொள்ளாமல், அமைச்சரவையில் சேராமல் இருந்தார்.

      பாஜக பற்றிய உங்கள் அனுமானம் முற்றிலும் தவறு. பாஜக, அவர்கள் கட்சிக்கு எது முக்கியம் என்றுதான் பார்ப்பார்கள். அதிமுக வலிமையாக இருப்பதை அவர்கள் ஏன் விரும்பப்போகிறார்கள்? எடப்பாடி நிச்சயம் பாஜகவுக்கு அடிமையாக கட்சியைக் கொண்டுசெல்லவில்லை, செல்லவும் மாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன். இரட்டைத் தலைமை அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜகவையே வளரச் செய்யும். அதனால் தைரியமாகச் செயல்படும் எடப்பாடியே அதிமுகவுக்குத் தலைமை தாங்கும் தகுதியைப் பெறுகிறார் என்று நான் நினைக்கிறேன். நான் இன்றும் ஜெ.வுக்காக அதிமுகவுக்கு வாக்களிக்க ஆசைப்படுவதால், அதிமுக நன்றாக இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

      இன்றைக்கு 2400 பொதுக்குழு உறுப்பினர்களில் 2200 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும், அதனைத் தக்க வைத்துக்கொண்டு அதிமுகவை இன்னும் வலிமையுறச் செய்வதில் எடப்பாடி அவர்களின் பங்கு மிகவும் அதிகம்.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        (எடப்பாடி வில்லன் என்று சொன்னால்,
        இதே போன்ற சூழலில்தான் திமுகவில்
        தன்னை கருணாநிதி முன்னிறுத்திக்
        கொண்டார் என்பதையும் உங்களுக்கு
        நினைவுபடுத்துகிறேன். )

        ஆக -எடப்பாடி இன்று செய்வதும்
        கருணாநிதி அன்று செய்ததும் ஒன்று தான்
        என்று சொல்கிறீர்கள்.

        பின் ஒரே வழியை கடைபிடித்த
        கருணாநிதியை இகழும் நீங்கள் –
        எடப்பாடியை மட்டும் புகழ்வது ஏனோ …?
        எடப்பாடியாரின் பின்னால்
        பாஜக இருக்கிறது என்பதால் தானே …?

        எடப்பாடியாருக்கும் பாஜகவுக்கும்
        என்ன அண்டர்ஸ்டாண்டிங்
        என்பதை காலம் வெளிப்படுத்தும்…

        அப்போது அதையும் நியாயப்படுத்த
        நீங்கள் இப்படித்தான் எதாவது உதவாக்கரை
        காரணத்தை சொல்வீர்கள்….!!!

        • புதியவன் சொல்கிறார்:

          தாங்க முடியலை…தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போல என்னை பாஜகவுடன் இணைத்தாகவேண்டும் என்று முயலுவது.

          கருணாநிதியை அந்தச் செயலுக்காக இகழவில்லை. எம்ஜிஆரின் பலம் தெரியாமல் அவருடன் மோதி, அவரைத் துரத்தியதன்மூலம் தமிழகத்துக்குப் பெரிய நன்மையைச் செய்தவர் அவர்.

          எடப்பாடி பின்னால் பாஜக இருக்க வாய்ப்பே இல்லை. பாஜக,, அதிமுகவைக் குழப்புகிறது, தன்னுடைய சொந்த நலத்திற்காக வித வித யோசனைகளைச் சொல்கிறது. பாஜகவுக்கு, தன் கட்சியின் பெர்ஃபார்மன்ஸுக்காக அதிமுக வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் தொடர்ந்து இது சம்பந்தமான செய்திகளைப் படித்து வந்தீர்களானால் இது புரியும். முதலில் மோடி, ஜெ. இறுதிச் சடங்கிற்கு வந்தபோது நடராஜன் தலையில் கையை வைத்து ஆறுதல் கூறினார் (அப்போ யார் தலைமை பீடத்திற்கு வருவார் என்று பாஜகவுக்குத் தெரியவில்லை. பின்னர் ஓபிஎஸ்ஸை ஆதரித்தனர். பிறகு எடப்பாடி முதல்வராக ஆனாலும் ஓபிஎஸ் ஸை தன் பிடிக்குள்ளேயே வைத்திருக்கும்படி ஓபிஎஸ், மோடி அவர்களின் ஆதரவை வேண்டினார். பாராளூமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஓபிஎஸ் பையனுக்கு அமைச்சர் பதவி கேரட் காண்பிக்கப்பட்டது. ஓபிஎஸ், எடப்பாடிக்கு அழுத்தம் தந்தார். ஆட்சியிலிருக்கும் எடப்பாடிக்கு, அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து நடத்தவேண்டிய சூழ்நிலை…. சில மாதங்களுக்கு முன் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளணும் என்ற பேச்சு பாஜகவால் வந்தது (இதன் காரணம், தினகரன்/சசிகலா வாக்குப் பிரிப்பால்தான் அதிமுக தென் மாவட்டங்களில் தோற்றது என்பதால்). இப்படி முடிந்த அளவு குட்டையைக் குழப்பி, தங்கள் கட்சியின் நன்மைக்காக பாஜக நடந்துகொள்கிறது. நீங்கள் சரியாக அவதானிக்கவில்லை. பாண்டிச்சேரியில் என்ன நடந்தது? ஒட்டகம் கூரைக்குள் நுழைந்தது. பிறகு நமச்சிவாயத்தை இழுத்தது. பிறகு கிட்டத்தட்ட கூடாரத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது. எடப்பாடி நிச்சயம் இதையெல்லாம் கவனிக்கக்கூடியவர்.

          இன்றைக்குக்கூடப் பாருங்கள்…. எனக்கும் செல்வாக்கு இருக்கிறது (எங்கே? கட்சியிலா? இல்லை.. பிரதமரிடத்தில்…அதாவது இன்னொரு கட்சித் தலைவரிடத்தில்) என்று காட்ட ஓபிஎஸ் அவர்கள் குடு குடுவென தில்லியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார். யார் பின்னால் பாஜக இருக்கிறது?

          //எடப்பாடியாருக்கும் பாஜகவுக்கும் என்ன அண்டர்ஸ்டாண்டிங்// – நிச்சயம் அண்டர்ஸ்டேண்டிங் இருக்கும். அதில் சந்தேகமில்லை. அதாவது அதிமுகவில் நான் தலைவன். அதற்கு பங்கம் வராமல் நடந்துகொள். எங்கள் கட்சி மத்திய அரசான பாஜகவுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும். இதற்கு மேல் வேறு அண்டர்ஸ்டாண்டிங் இருக்க வாய்ப்புகள் குறைவு.

  3. Karthikeyan சொல்கிறார்:

    அப்புறம் என்ன இனிமேல் வழக்கம் போல பா ஜ க தான் இந்த தீர்ப்பின் பின்னணியில் இருக்குன்னு சொல்லுவோம்…

    அதிமுகவை விட்டு விட்டு திராவிட மாடல் அப்புறம் தேசிய மாடலில் நடக்கும் ஊழல்களை பற்றி எழுதுங்கள் அய்யா…

  4. ஆதிரையன் சொல்கிறார்:

    சதா பிஜேபி எதிர் புராணம் தானா ?
    பிஜேபியை யாரும் ஆதரித்தாலே , அவர்கள் வில்லன்தானா ?
    பிஜேபி மேல் அப்படி என்னதான் கோபமோ?
    மதவெறி கட்சி என்று தொடர்ந்து புழுதிவாரி தூற்றி கொண்டோ இருப்பீர்கள் போலும். சமீபத்தில் இந்தியாவெங்கும் வன்முறையை மதத்தின் பேரால் நிகழ்த்தி கொண்டிருக்கும் கூட்டத்தையும், அதன் பின்னால் இருக்கும் மதவெறி பிடித்த அதன் கட்சிகளையும் இது போல் மதவெறியர்கள் என்று வர்ணிக்கவோ, தட்டி கேட்கவோ இதே போல் திராணியில்லாமல் தொடை நடுங்கி கொண்டிருக்கிறீர்கள் .
    இதே போன்ற மதம் சார்ந்த வன்முறையை பிஜேபி இடம் அளித்ததே இல்லை.
    தயவு செய்து கண்ணை திறந்து பார்த்து எல்லா கட்சிகளையும் தூற்றவும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.