
………
பாண்டே அவர்கள் அடித்துச் சொல்கிறார் –
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வந்தே தீரும் என்று.
என்னுடைய அனுமானம் இரட்டைத் தலைமை
நீடிக்கும் என்பது….ஏன் என்று கேட்கிறீர்களா …?
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை முயற்சி
வெற்றி பெற்றால் கட்சி நிச்சயம் இரண்டாக
உடையும்.
அதிமுக உடைவதால் திமுக-வுக்குத்தான் பெருத்த
லாபம்…. 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி
அனைத்து இடங்களையும் அள்ளி விடும்.
எனவே, அதிமுக பிளவுபடுவதை
பாஜக தலைமை விரும்பவில்லை –
நிச்சயமாக அதை ஏற்காது…அனுமதிக்காது
பாஜக தலைமை எடுப்பது தான் இந்த விஷயத்தில்
இறுதி முடிவாக இருக்க முடியும்….
இதில் பாஜகவின் யோசனையை ஏற்க மாட்டேன்
என்று சொல்லும் துணிச்சல் எடப்பாடியாருக்கு இல்லை.
அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரி இலாகாவின்
ரெய்டுகளை எதிர்கொள்ளும் அளவிற்கு “சுத்த”
மானவராகவா இருக்கிறார்கள் எடப்பாடியாரும்
அவரது குழுவில் இருப்பவர்களும் …?
பாண்டே அவர்களின் பேட்டி கீழே –
….
.
………………………………………………..
Whether it is single leadership or double leadershipboth are disadvantage
to AIADMK
If it is single leadership EPS will assure more MP seat to BJP
Net result people will not vote for the Patrties alliance with BJP
If it is double leadership AIADMK will not take any decision uniformly it
is a weakness for AIADMK.
1. பாஜக வின் வாக்கு சதவிகிதம், சென்ற பாராளுமன்றத் தேர்தலைவிட அதிகமாகியிருக்கிறது, அதிலும் அண்ணாமலை அவர்கள் தலைமையில் என்று நான் நம்புகிறேன். பாராளுமன்றத் தேர்தல் என்பதால் மோடி ஃபேக்டரும் இருக்கும்.
2. எடப்பாடி அவர்கள், அதிமுகவின் சரியான தலைமை என்றே நான் நம்புகிறேன். அதிமுகவுக்கு எது நல்லது என்று மட்டுமே அவர் சிந்தித்துச் செயல்படுவார். சென்ற பாராளுமன்றத் தேர்தலில் 5 சீட்டுகள் கொடுத்தார். இந்த முறை 10க்கும் குறைவான சீட்டுகள் (அல்லது 10, அதாவது 9+1) கொடுப்பார் என்றே நம்புகிறேன். எடப்பாடி அவர்களின் வேலை அடுத்த கட்சியை வளர்ப்பது அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார். அவர், ஓபிஎஸ் மாதிரி பாஜகவுக்கு பயந்தவர் அல்லர். (அதனால்தான் பாஜக எதிர்பார்த்த சீட்டுகளை அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கவில்லை. பாஜக தனித்துப் போட்டியிட்டது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கணும்)
3. அதிமுகவை பலவீனப்படுத்துவது பாஜகவுக்கு ஆபத்தைத்தான் உண்டாக்கும். அதனால் பாஜக, விலகிச் சென்றவர்களும் வாக்குகளைப் பிரிக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.
ஓபிஎஸ் அவர்கள், திமுக அரசின் ஆதரவை, பொதுக்குழுவைக் கூட்டாமல் இருப்பதற்காக நாடியிருக்கிறார். அதுவும் தவிர, ஜாதிப் பிரச்சனையை முன்னிறுத்தி, கவுண்டர் – முக்குலத்தோர் என்று கொண்டுவந்து எடப்பாடியை எதிர்க்க முயல்கிறார். இதற்கு முன்பு, மோடி அவர்களின் ஆதரவைப் பெற்று தான் நினைத்ததைச் சாதிக்க முயன்றார். ஆரம்பத்தில் சசிகலாவை எதிர்த்து மௌனயுத்தம் ஆரம்பித்த அவர், அரசியல் லாபத்துக்காக சசிகலாவின் ஆதரவாளராகவும் காட்டிக்கொள்கிறார். (ஆரம்பகட்டத்தில் நான் ஓபிஎஸ் அவர்கள்தான் தலைவராக இருக்கணும் என்று நினைத்திருந்தேன். பிறகு அவர் அதிமுக பலவீனமடைய ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கிறார் என்று நடந்த நிகழ்ச்சிகளைவைத்து நான் புரிந்துகொண்டேன்). ஒரு நடுநிலையான அதிமுக அனுதாபி என்ற முறையில் என் வாக்கு எடப்பாடி அவர்களுக்குத்தான். அவர் தலைமையில்தான் அதிமுக தன் தனித்துவத்தைக் காக்க வாய்ப்பு உண்டு. இருந்தாலும், எடப்பாடி அவர்கள் பல விஷயங்களில் சிறுபான்மையினரைப் பகைத்துக்கொள்ள அஞ்சி, தவறான முடிவுகள் பலவற்றை எடுத்திருக்கிறார். அவர் சரியான முடிவுகளை, அதிமுக நலன் கருதி, அதிமுகவின் வாக்கு வங்கியை முன்னிறுத்தி எடுக்கவேண்டும்.
பாஜக, ஓபிஎஸ் அவர்களைக் கட்டுப்படுத்தி எடப்பாடியின் ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தும் என்றே நான் நம்புகிறேன்.
ஓபிஎஸ் ஒரு உறுதியில்லாத தலைமை. தன்னை நம்பியவர்களையே கை விட்டவர். இபிஎஸ் உறுதியானவர். அதனால் அவரே தலைவராக வருவார்.