……………………

…………..
நம்ம ஊர்த் தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோர் போன்று –
வடக்கேயும் சிலர் இருந்தனர் ….
……………
வாடகை செலுத்தாத அந்த 94 வயது முதியவரை , தனது வீட்டிலிருந்து
வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் , அந்த
முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய
பாத்திரங்கள், தட்டு குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு
விட்டார்.
சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார்
முதியவர்.
வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம்
தரச் சொல்ல – வேண்டா வெறுப்பாக அந்த முதியவரின்
சாமான்களை மீண்டும் அனுமதித்தார் உரிமையாளர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த , அவ்வழியே சைக்கிளில் சென்ற
பத்திரிக்கையாளர் ஒருவர், அந்த காட்சிகளை படுமெடுத்து ,
தனது பத்திரிக்கையில் வெளியிட நினைத்து – ” கொடூர
நிலக்கிழார், பரிதாப நிலையில் முதியவர் ” என்றெல்லாம்
தலைப்பு ரெடி செய்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று , நடந்தது
குறித்து விளக்கமளித்து , படங்களை காட்டினார்.
படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார்.
இவர் யாரென்று தெரியுமா ..? என செய்தியாளரை கேட்க –
தனக்கு எதுவும் தெரியாது என்றார் செய்தியாளர்.
இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த
குல்சாரிலால் நந்தா தான் அவர். (4 July 1898 – 15 January 1998)
நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத்தான்
இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சாரிலால் நந்தா…
பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி.
HMSS தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர்.
1948 ல் இவரது தலைமையில் தான் கொல்கத்தாவில் INTUC
திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர்.
பத்திரிக்கையில் செய்தி வந்தது – அவரது வீட்டின் முன்பு அரசு
அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு
உரிமையாளர் மிரண்டு போனார்.
பிறகு தான் அவருக்கே தெரிந்தது – இருமுறை பிரதமராக
இருந்த நந்தா தான் இவர் என்று.
நீண்ட காலம் மத்திய அமைச்சராக இருந்த இவரது நிலையை –
இன்றைய அரசியல்வாதிகளோடு கனவிலும் ஒப்பிட்டு பார்க்க
முடியும ….?
சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக
முன்பு தந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார்.
சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த 500 ரூபாய்க்காக
அல்ல என்று கூறிவிட்டார்.
அரசு இல்லத்துக்கு வாருங்கள் என வந்த அதிகாரிகளும் ,
அரசியல்வாதிகளும் எவ்வளவோ கெஞ்ச, ” இந்த வயதில் அந்த
வசதியெல்லாம் எதற்கு ..?” என மறுத்து விட்டார்.
கடைசியில் அவர்களின் கடுமையான வற்புறுத்தலுக்குப் பிறகு
அரசு தந்த 500 ரூபாய் பென்ஷனை ஏற்றுக்கொண்டு,
அந்த பணத்திலிருந்து வீட்டு வாடகையை தந்தார்.
இதையெல்லாம் கண்ட, அந்த வீட்டின் உரிமையாளர் நந்தாவின்
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
இறுதிவரை உண்மையான காந்தியவாதியாக , சாதாரண
குடிமகனைப் போல் வாழ்ந்த இவருக்கு 1997 ல் பாரத ரத்னா
விருது வழங்கப்பட்டது.
( லிங்க் – https://en.wikipedia.org/wiki/Gulzarilal_Nanda )
.
……………………………………………………….
ஆக குஜராத் நல்ல பிரதமர் களையும் கொடுத்துள்ளது!!
ஜீவாவை விட்டுவிட்டீர்கள். எத்தனையோ நல்ல அரசியல்வாதிகள், ‘நல்ல’ குணத்தால் தங்கள் வாழ்க்கையையும், தங்கள் குடும்பத்தின் வாழ்க்கையையும் நாசமாக்கிக்கொண்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதனை முன்பே படித்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்கள் அரசியலில் வெகு வெகு அபூர்வம். வித்தியாச வித்தியாசமாகப் பதிவு செய்வதற்குப் பாராட்டுகள் கா.மை. சார்.