” அக்னிபாத் “அவசியமா …?

முதலில் அக்னிபாத் பற்றிய பின்னணி –

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு
முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள்
வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார்,
ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா
என்று பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.
பெரும்பாலும் இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தை
எதிர்த்து தன்னிச்சையாக போராடி வருகிறார்கள்.

மத்திய அரசு இதுவரை ராணுவத்தில் ஆட்களை சேர்க்க
கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி
ஒரு புதிய முறையை அறிவித்திருக்கிறது.

 1. இந்திய ராணுவத்தில் இதுவரை நேரடி தேர்வு முறை
  மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள்
  பணிக்கு சேர்ந்து 60 வயது வரை பணியில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ரிட்டையர்
  வரை பல்வேறு ரேங்குகளில் பணியில் இருக்க முடியும்.
 2. ஆனால் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஒருவர்
  4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக
  (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும். 4 வருட
  பணியில் முதல் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி
  வழங்கப்படும்.
 3. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும்
  17.5 – 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி.
  10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து
  இருக்க வேண்டும்.
 4. இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு
  முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
  வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும்.
  கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம்
  ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும்.
 5. மொத்தமாக 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில்
  25 சதவிகிதம் பேர் மட்டும் ராணுவத்தில் நிரந்தரமாக
  15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.
  மீதமுள்ள 75% பேர் ராணுவத்தில் இருந்து
  விடுவிக்கப்படுவார்கள்.
 6. இதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல்
  நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு
  செய்யப்படுவர். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில்
  நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
 7. 4 வருடத்தில் முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும்.
  அதற்கு சம்பளம் உண்டு . தனிப்பட்ட இன்சூரன்ஸ்,
  மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த 4 வருட
  ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில்
  காயங்கள் ஏற்பட்டால் அதற்கு அதிக பட்சம் 44 லட்சம்
  ரூபாய் வரை, காயத்தை பொறுத்த நிவாரணமாக
  வழங்கப்படும். 4 வருடம் முடித்து செல்லும்
  அவர்களுக்கு 11.7 லட்சம் ரூபாய் மொத்தமாக தரப்படும்.

இதை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம்…..

ராணுவத்தில் ஒப்பந்த வீரர்கள் வந்தால் ராணுவத்தின்
திறன் பாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் திறன்
பாதிக்கப்படும். இந்த திட்டம் காரணமாக
ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும்.

அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும்
அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள்.
இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுகவும் வாய்ப்பு
உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு
ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் ….

முக்கியமாக இளைஞர்கள் இதை எதிர்க்க காரணம்
நிறைய உள்ளது. 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள்
என்ன வேலை பார்ப்பார்கள்? அவர்கள் எங்கே
போவார்கள் என்ற கேள்வி.

அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை.
அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் பயன் இல்லை.
இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.

இதில் வயது வரம்பு 21 வரை என்று இருந்ததை எதிர்த்தும்
இளைஞர்கள் போராட்டம் செய்தனர். வடஇந்தியாவில்
தொடர்ந்து வரும் போராட்டங்களின் விளைவாக
இப்போது வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு
நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும்
என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலில் பீகார் மாநிலத்தில் தொடங்கிய இந்தப்
போராட்டம் மெல்ல மற்ற மாநிலங்களுக்கும் பரவியது.
இப்போது சுமார் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில்
போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பீகாரில் சுமார்
15 மாவட்டங்களில் இணையச் சேவையும்
முடக்கப்பட்டுள்ளது. அதேபோல நாடு முழுவதும்
ரயில் எரிப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் குறைந்தது 12 ரயில்கள்
தீ வைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 214 ரயில்கள்
முழுமையாக ரத்து செய்யப்பட்டன.. 11 ரயில்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன .

தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில்
நிலையத்தில் நூற்றுக்கணக்கான
ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர். அங்கிருந்த
ரயில்களுக்கும் அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.
அப்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார்
துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வாரங்கலை சேர்ந்த
22 வயது ராகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக
உயிரிழந்தார்.

அந்த இளைஞர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள
தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்,
இந்த விவகாரத்தில் மத்திய அரசையும்
சாடி உள்ளார்…

இளைஞர்களிடையே இந்த போராட்டம் தீவிரமாக
பரவ முக்கியமான காரணம் – பொதுவாக
வட மாநிலங்களில் ராணுவம் வேலை வாய்ப்பை
உருவாக்குவதில் முக்கிய இடத்தில் இருப்பதும்,
அக்னிபாத் அந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு
பற்றிய நம்பிக்கையை சிதைப்பதாக இருப்பதுவுமே.

இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை.
திட்டம் இன்னும் நடைமுறைக்கு வடவில்லை…
கௌரவம் பார்க்காமல் மத்திய அரசு அக்னிபாத்
திட்டத்தை கைவிடுவதே இதற்கான நல்ல தீர்வாக
இருக்கும் என்று தோன்றுகிறது.

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

22 Responses to ” அக்னிபாத் “அவசியமா …?

 1. புதியவன் சொல்கிறார்:

  எனக்கு இந்தப் பதிவு என்ன சொல்ல வருகிறது என்பதே புரியவில்லை. கோர்ட் தீர்ப்பினால் மனம் கொதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். கோர்ட் எதுவும் நாட்டிற்குத் தேவையில்லை என்று சொல்வீர்களா? வைகோ வை வெளியேற்றியதால் ஆறு பேர் தீக்குளித்து மாண்டார்கள்.. அரசியல் கட்சியோ இல்லை கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்றுவதோ தவறு என்று சொல்வதுதானே. 130 கோடி பேருக்குமான மத்திய அரசு. எந்தச் சட்டத்தையும் முறைப்படி நிறைவேற்றுகின்றனர். அதில் என்ன தவறு இருக்கமுடியும்? அந்தச் சட்டம், தங்கள் ஆட்சியைப் பதம் பார்க்கும் என்பதை உணர்ந்தால், அது சரி என்று அவர்களுக்குத் தோன்றினால், அதற்குரிய காலம் வரும்போது வாபஸ் வாங்குவார்கள். இது என்ன..ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குப் புதிதா என்ன?

  //இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.// – அப்படியானால் அப்ளை செய்யாமல் இருந்துவிடவேண்டியதுதானே. பேசாமல், வங்கி ஆபீசர் வேலைக்கு அப்ளை செய்யலாமே.

  நாட்டு இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதில் என்ன தவறு? இவர்கள் qualified personsதானே… நாளை தேவைப்பட்டால் இராணுவத்துடன் சேர்வது (போர் போன்ற காலங்களில்) சுலபமாகத்தானே இருக்கும். எத்தனை அரசு அலுவலகங்களில், துறைகளில் ஒப்பந்தப் பணியாளர்கள் உண்டு. அவற்றை ஏன் தடை செய்யப் போராட்டம் நடைபெறுவதில்லை?

  2 வருட இராணுவப் பயிற்சி கட்டாயம் என்று பல நாடுகளில் உள்ளதே..அங்கெல்லாம் ஒரு இளைஞன், இராணுவத்தை விட்டால் வேறு எதற்கும் லாயக்கில்லாதவனாகிவிட்டானா? நான் என் வேலை அனுபவத்தில், முன்னாள் இராணுவ, போலீஸ் பணியாளர்களை வித வித ஃபீல்டுகளில் (கணிணி கன்சல்டண்ட், செக்யூரிட்டி, ரிஸ்க் இன் சார்ஜ் என்று …. ஏன் ஹெச்.ஆர் மேனேஜராகவும்) சந்தித்துள்ளேன்… எல்லோரும் பிரிட்டிஷ், தென் ஆப்பிரிக்க வெள்ளையர்கள்.

  இரயிலை எரிப்பவர்கள், கலவரத்தில் ஈடுபடுபவர்கள் எவருக்கும் இராணுவம் என்றால் என்ன, அதன் purpose என்ன என்பதைக் கொஞ்சம்கூட அறியமாட்டார்கள். அவர்கள் இராணுவத்திற்கோ போலீஸுக்கோ லாயக்கில்லாதவர்கள். அவர்களை ஐடெண்டிஃபை செய்து தகுதியில்லாதவர்களாக்கிவிட வேண்டியதுதான்.

  • Ramaswamy thamilan சொல்கிறார்:

   இப்படி பேசுகிற உயர் சாதி பார்ப்பனர் தங்கள் வீடு பிள்ளைகளை ராணுவத்தில் எந்த காலத்திலும் அனுப்ப மாட்டார்கள் அவர்கள் வீடு பிள்ளைகள் மேலை நாடுகளில் நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர். பீகார் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ராணுவத்தில் சேருவது மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆகும்.
   //
   /இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்.// – அப்படியானால் அப்ளை செய்யாமல் இருந்துவிடவேண்டியதுதானே. பேசாமல், வங்கி ஆபீசர் வேலைக்கு அப்ளை செய்யலாமே.

   அவர்கள் இராணுவத்திற்கோ போலீஸுக்கோ லாயக்கில்லாதவர்கள்.
   // அப்போ பேங்க் officer ஆக மட்டும் ஆகலாம் அதுக்கு ஒழுக்கம் வேண்டாம் ??
   உங்க பிள்ளைகளை அமெரிக்கா போக கூடாது என்றால் எவ்வளவு கோபம் வருமோ அது போல தான் இதுவும்

   • புதியவன் சொல்கிறார்:

    அரசுஎன்ன சொல்கிறது? இராணுவத்திற்கு ஆள் எடுப்பதில்லை, அக்னிபத் மட்டும்தான் தீர்வு என்றா சொல்கிறது?

    தேவையில்லை என்றால் ஏன் சேர வேண்டும்? ரெகுலர் ரெக்ரூட்மெண்டில் முயற்சிக்க வேண்டியதுதானே. அக்னிபத் நம் இராணுவத்திற்கு நல்லது. அதனால்தான் முப்படைகளும் அதனை வரவேற்றிருக்கின்றன. அந்த அந்த professionல் இருப்பவர்களுக்குத் தெரியாததா மற்றவர்களுக்குத் தெரியப்போகிறது?

    இதற்கு எதற்கு ‘உயர் சாதி பார்ப்பனர்’ என்றெல்லாம் யோசிக்கணும்? இவ்வளவு எழுதுகிற நீங்கள், தமிழகத்தைப் பற்றியும் கவலைப்படலாமே. ஏன் ஒப்பந்தத்தில் ஆசிரியப்பணி மற்றும் மற்றப் பணிகள் இருக்கின்றன? ஸ்ட்ரைக் நடக்கும்போது எதற்கு தற்காலிகப் பணி என்று ரெக்ரூட் செய்யணும் என்றும் கேள்வி கேட்கலாமே

    • Ramaswamy thamilan சொல்கிறார்:

     உங்கள் பதிலில் இருந்து நீங்கள் 70 வயது மதிக்கத்தக்க நபர் உங்கள் உறவுகள் அமெரிக்காவிலோ மற்ற நாடுகளிலோ settle ஆகிவிட்டார்கள் உங்களுக்கு பொழுது போக்க உங்கள் மனதின் வன்மத்தை கொட்ட இணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறன். கொஞ்சம் உங்கள் பார்ப்பனிய சிந்தனைகளில் இருந்து வெளிவந்து சராசரி மனிதனாக சிந்தியுங்கள் எந்த குழப்பமும் இருக்காது. இந்த வயதிலாவது மத சாதி மாயைகளில் இருந்து வெளியே வாருங்கள்.

     • bandhu சொல்கிறார்:

      கா மை சார். இந்த தனி மனித தாக்குதல்களை உங்கள் தளத்தில் அனுமதிக்க வேண்டுமா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     .

     புதியவன்,

     // அரசுஎன்ன சொல்கிறது?
     இராணுவத்திற்கு ஆள் எடுப்பதில்லை,
     அக்னிபத் மட்டும்தான் தீர்வு என்றா
     சொல்கிறது?

     தேவையில்லை என்றால் ஏன் சேர
     வேண்டும்? ரெகுலர் ரெக்ரூட்மெண்டில்
     முயற்சிக்க வேண்டியதுதானே.//

     —————
     நீங்கள் பிரச்சினையின்
     அடிப்படையையே புரிந்து
     கொள்ளவில்லை….

     ராணுவத்தின் கடைநிலை பதவி
     “ஜவான்”. ஆண்டு தோறும்
     ஜவான் போஸ்டுக்கு தான்
     ஆயிரக்கணக்கில் ஆள்
     எடுக்கிறார்கள்..
     இனி இந்த போஸ்டுக்கு
     நேரடி ரெக்ரூட்மெண்ட் கிடையாது.

     மறைமுகமாக அக்னிபாத்
     மூலம் எடுக்கப்ப்டும் 25% வீரர்கள்
     தான் ஜவான் போஸ்டை
     நிரப்புவார்கள்.
     ————-

     பிரச்சினையை முழுவதுமாக
     புரிந்துகொள்ளாமலே நீங்கள்
     பாஜக செய்வதை யாரும்
     குறை சொல்லக்கூடாது
     என்று பிடிவாதமாக விதண்டாவாதம்
     செய்கிறீர்கள்.

     .
     -வாழ்த்துகளுடன்,
     காவிரிமைந்தன்

 2. Raghuraman சொல்கிறார்:

  Sir, I really don’t understand the reason for agitation. This is not a compulsion for all. This is optional. But this will bring in some discipline and focus for many.
  Agitation is now currently kickstarted just for the sake of political mileage. They should be crushed.
  Check with families of military – how proud they are and they don’t look at money.
  Regards.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Raghuraman,

   // I really don’t understand
   the reason for agitation.//

   நீங்கள் இந்த பாராவை படிக்கவில்லையா ..?

   —————-
   இளைஞர்களிடையே இந்த போராட்டம் தீவிரமாக
   பரவ முக்கியமான காரணம் –

   பொதுவாக
   வட மாநிலங்களில் ராணுவம் வேலை வாய்ப்பை
   உருவாக்குவதில் முக்கிய இடத்தில் இருப்பதும்,

   அக்னிபாத் அந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு
   பற்றிய நம்பிக்கையை சிதைப்பதாக இருப்பதுவுமே.

   ——————

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Tamil சொல்கிறார்:

    அப்படியா இவர்களின் வாட்ஸ் அப்பில் வந்த ஃபார்வேர்டு அதையெல்லாம் சொல்லவில்லையே?

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  புதியவன்,

  //எனக்கு இந்தப் பதிவு என்ன சொல்ல
  வருகிறது என்பதே புரியவில்லை. //

  பதிவு என்ன சொல்கிறது என்பது புரியாமலே
  இவ்வளவு நீள பின்னூட்டமோ …?

  இதைவிட – ஒரே வரியில் –

  பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை
  குறை சொல்பவர்கள் எல்லாரும்
  – வடிகட்டிய முட்டாள்கள்,
  – அறிவற்ற முண்டங்கள்,
  – கருத்து சொல்ல அருகதை இல்லாதவர்கள்….

  இவர்களுக்கு எதற்கு வலைத்தளமும் –
  அரசியல் இடுகைகளும் என்று எழுதிவிட
  வேண்டியது தானே …?

  .
  -வாழ்த்துகளுடன்,
  காவிரிமைந்தன்

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்…. பாஜக கொண்டுவந்த திட்டம் என்பதனாலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள் அனைவரும். இந்தத் திட்டத்தின் நோக்கம் எனக்குப் புரிகிறது. சிலர், இராணுவத்தை இந்துமயமாக்கவேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் என்று பேசுவதையும் கவனித்திருப்பீர்கள். போராட்டக்காரர்களுடைய நோக்கம் வேறு. அதில் தேசபக்தி கிடையாது.

   நம் நாட்டில், நிரந்தர வேலை என்பது அரசுத் துறையில் இருப்பதால்தான், வேலைபார்ப்பவர்களின், அவர்கள் செய்யும் வேலையின் தரம் மிக மிகக் குறைவாக இருக்கிறது (விதிவிலக்குகள் 10 சதம் அளவில் இருக்கலாம்). இது வங்கி, அரசுத்துறை, கல்வி நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் காணப்படுகிறது (ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடந்தபோது, 20 சதம் ஆசிரியர்கள் கூட பாஸ் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது).

   அமெரிக்காவில் எவ்வாறு இராணுவம் நடக்கிறது? ஒப்பந்த அடிப்படையில்தான். ஒரு காலத்தில் உடல் நலம் இருந்த எல்லோரையும் இராணுவப் பணியாற்ற, போரின் போது அவர்கள் அழைத்தனர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின்மூலம், பயன் பெற்ற ஒரு இராணுவ நடைமுறைகள் தெரிந்தவர்கள் சமூகத்தில் இருப்பார்கள். இரண்டாவது 25 சதம் 15 வருடங்கள் (அல்லது 20 வருடங்கள்) இராணுவத்தில் பணியாற்ற எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் நிச்சயமாக ஓரளவு ஒழுக்கமான சமூகத்துக்கான அடித்தளமாக இருக்கும். ஒரு எமெர்ஜென்சியின்போது இராணுவப் பணியாற்ற நிறைய குடிமக்கள் இருப்பார்கள்.

   இதை வேண்டாம் என்பதற்காக இந்த நீள பதிவா என்பது என் கேள்வி.

   • புதியவன் சொல்கிறார்:

    I go one step further. ஆசிரியப் பணியும் ஒப்பந்த அடிப்படையில்தான் இருக்க வேண்டும். ஐந்து வருட பெர்ஃபார்மன்ஸ், தங்களை தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொள்ளுதல், காலத்துக்கேற்ற கல்வியறிவு இவையெல்லாமும் தீர்மானிக்கும் ஃபேக்டர்களாக இருக்கவேண்டும். அரசு வேலை என்பதே தகுதியற்றவர்களின் புகலிடமாக ஆகிவிடுகிறது (ஆரம்பத்தில் தகுதி உண்டு. பிறகு எதுவுமே அவசியமில்லை. ஒரு நேரத்தில், தாங்கள் ராஜாவாகவும், தங்களை நாடுபவர்கள் பிச்சைக்காரர்களாகவும் நடத்தும் போக்கு). இதிலும் 10 சதம் விதிவிலக்குகள் உண்டு.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    //கா.மை. சார்…. பாஜக கொண்டு
    வந்த திட்டம் என்பதனாலேயே
    எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள்
    அனைவரும்.//

    பாஜக கொண்டு வரும்
    எந்த திட்டத்தையும் யாரும்
    எதிர்த்து விடக்கூடாது என்பதிலேயே
    குறியாக இருக்கிறீர்கள்
    உங்களைப் போன்ற
    கண்மூடி தீவிர பாஜக ஆதரவாளர்கள்…

    தப்பித்தவறி என் போன்ற
    நடுநிலையாளர்கள் மிக மென்மையாக
    விமரிசித்தால் கூ ட
    பொங்கி எழுந்து வாயை பொத்துகிறீர்கள்.

    உங்களை போன்ற தீவிர
    பாஜக ஆதரவாளர்களை –

    மாற்று கருத்துகளை சகித்து கொள்ள
    முடியாதவர்களை –

    என்னால் எப்படி
    திருப்திப்படுத்த முடியும் …?

    டிமானடைசேஷனையே
    தீவிரமாக ஆதரித்தவராயிற்றே நீங்கள்….

    .
    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     புதியவன்,

     ஆமாம்….
     அந்த நிரந்தர வேலை வாய்ப்பு
     பெறப்போகும் 25 % அதிருஷ்டசாலிகளை
     எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்….?

     தீர்மானித்து விட்டீர்களா …?

     .
     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

     பாஜக ஆதரவாளன்னு என்னை நீங்க தீர்மானித்துவிட்டீர்கள். அப்புறம் நான் எப்படி அந்த எண்ணத்தை மாற்றுவது. மாற்றுக் கருத்தைக் கேட்டால்தான், நம் கருத்தை திரும்பவும் யோசிக்கமுடியும். கா.மை சாரின் பதிவுகள் அப்படிப்பட்டவை என்றே நம்புகிறேன்.

     இது நல்ல திட்டம் என்று நான் நம்புகிறேன். 25 சதமும் on performance based என்று இருக்கலாம். இல்லை, திரும்பவும் மற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். எப்படி இதைச் செய்யப்போகிறார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை.

     இராணுவத் தலமை தளபதிகள் இதனை வரவேற்றுள்ளார்கள் (அவங்கதான் இதனை propose பண்ணியிருக்கலாம்)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      புதியவன்,

      “பாஜக ஆதரவாளன்னு”

      தவறு –
      ” தீவிர பாஜக ஆதரவாளர்” என்று
      ——————–

      ” மாற்றுக் கருத்தைக் கேட்டால்தான்,
      நம் கருத்தை திரும்பவும் யோசிக்கமுடியும்.”

      தவறு –

      மாற்றுக் கருத்தை எந்த பாஜக-காரர்
      கேட்கத் தயாராக இருக்கிறார்…
      சொல்ல விடுகிறார்…? பொறுத்துக் கொள்கிறார் ..?
      ( நீங்களே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்…)

      ——————-

      ” 25 சதமும் on performance based
      என்று இருக்கலாம்….”

      எந்த விதத்தில் performance-ஐ நிரூபிக்க
      முடியும்…?

      போருக்கு போக வாய்ப்பு உண்டா …?
      எவ்வளவு எதிரிகளை கொல்கிறார்
      என்பதை வைத்தா ..?

      அநேகம் பேருக்கு ஆபிசர் வீட்டில்,
      கிச்சன் வேலை, தோட்ட வேலை,
      பசங்களை ஸ்கூலுக்கு அழைத்துப் போவது
      போன்ற வேலைகள் தானே கொடுக்கப்படும் ..?

      இதில் எந்த performance-ஐ வைத்து
      எப்படி தீர்மானிக்க முடியும்…?

      ————————-
      ” எப்படி இதைச் செய்யப்போகிறார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை…”

      இதை முடிவு செய்யாமல் திட்டம் எப்படி
      நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது…?

      ———————–

      ” இராணுவத் தலமை தளபதிகள்
      இதனை வரவேற்றுள்ளார்கள் ”

      இது நகைப்பிற்குரியது,,,,,,
      அரசுக்கு எதிராக ராணுவ தளபதிகள்
      கருத்து கூற முடியுமா …?

      ————————
      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

 4. bandhu சொல்கிறார்:

  உழைத்து ஒரு வேலையை எப்படியாவது சம்பாதித்துவிட்டால் போதும். வாழ்க்கை முழுவதும் வருமானம் பற்றி கவலைப்படாமல் வாழ்க்கையின் மற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என்பது உண்மையிலேயே பெரிய வரம்.

  ஆனால், இதிலுள்ள பழுது, வேலையை தான் சம்பாதித்தாகிவிட்டதே. இனி வேலை செய்தால் என்ன. செய்யாவிட்டால்தான் என்ன. சம்பளம் தானாக வரும். என்ற மன நிலையில் உள்ள பலரும் இதை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்!

  வேலையில் நீடிக்க தகுதியை நிரூபிக்கவேண்டும் என்பது கசப்பான மருந்தாக இருந்தாலும் விழுங்கித்தான் ஆகவேண்டும்!

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  ஒரு தகவல் –

  2015 முதல் ராணுவத்தில் அதிகபட்சமாக
  பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம்,
  மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம்
  மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து
  186,795 பேர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  மொத்தம் 3,08,280 பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட
  நிலையில் 1,86,795 பேர் அதாவது 60 பங்கு இந்த 8 மாநிலத்தை
  சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

  .

 6. Thiruvengadamthirumalachari சொல்கிறார்:

  First of all why now this recruitment. Those who quote us should know General Eisenhower didnot encourage demobilization fearing unrest and utilized the men in building the Hoover dam and and other infrastructure activities. Further even now they are sent over forcombatduties as USA has apiein all disturbances in the world and also has employment potential and many laws providing scholarships to the GI to go for highrr studies In India we havelargeunemployedyouths and expansion of armed forces require accommodating them and how they will brush when there is no emergency Many of the released ECOs after1962ended up in very junior ranks in CAPF Theproposal requires more thought planning andpreplannedexit strategy for the youngsters Unless this is only a strategy for 2024election

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  .
  இதற்குத்தான் ஆசைப்பட்டீரோ …?
  ——————

  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக
  இருப்பவர் கைலாஷ் விஜயவர்கியா.

  இவர் அக்னிபாத் திட்டம்
  பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
  அப்போது அவர், ‛‛அக்னிபாத் நல்ல திட்டம்.
  அக்னிவீரராக ஒருவர் 4 ஆண்டுகள் வரை
  பாதுகாப்பு படையில் பணி செய்யலாம்.
  அதன்பிறகு அவர்கள் பணியில் இருந்து
  வெளியேறும்போது அக்னிவீர் பேட்ஜ்
  வழங்கப்படும்.

  பாஜக அலுவலகத்துக்கு
  பாதுகாப்பு பணிக்கு காவலாளிகளை
  அமர்த்த விரும்பினால் நான் அக்னிவீரர்களுக்கு
  தான் முன்னுரிமை கொடுப்பேன்” என்றார்.

  Read more at: https://tamil.oneindia.com/news/delhi/agnipath-i-want-to-hire-security-for-the-office-will-priority-to-an-agniveer-says-bjp-leader/articlecontent-pf711016-462923.html

  ———————–

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்…. நான் ஏற்கனவே தெரிவித்தது போல, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா என்று பல தேசங்களில் உள்ளதுதான் இது.

   இன்றைக்கு, எல்லா செக்யூரிட்டிகளும் (பெரும்பாலும்) க்வாலிஃபைட் கிடையாது. ரிடையர் ஆனவர்கள், மற்ற வேலை எதுவும் செய்யத் தெரியாதவர்கள் என்று பலரும் இந்த வேலையைச் செய்கின்றனர். இப்போதுதான் இதில் ஆர்கனைஸ்ட் செக்டார்கள் நுழைய ஆரம்பித்திருக்கின்றன. இதில் ‘திறமையாளர்கள்’ குறைவு. அதனால் வேலை வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை. எல்லா இராணுவ வீரர்களும் நேரடியாக ஆபீசராக ஆகிடுவாங்க என்ற எண்ணத்தினால் உங்களுக்கு ஏற்படும் குழப்பம் இது. இந்த அக்னிபத் வீரர்களே, மேற்படிப்பு படித்து இந்தத் துறையில் தனித்தன்மை பெற முடியும்.

   ‘காவலாளிகள்’ என்ற வார்த்தையைக் கேட்ட உடனேயே உங்களுக்கு ரிடையர் ஆகி, ஏதோ சின்ன குச்சியை வைத்துக்கொண்டு வேலை வாய்ப்புக்காக வேலை செய்பவர்களை உங்கள் மனதில் கொண்டுவருகிறீர்கள். இது நல்ல திட்டம். நாட்டின் குவாலிட்டியை முன்னேற்றும் திட்டம் என்றே நான் நம்புகிறேன். இதைச் சொல்ல பாஜக ஆதரவாளனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. கண்ணைமூடிக் கொண்டு எதிர்க்க பாஜக எதிர்ப்பாளராக இருக்கவேண்டியதும் இல்லை.

   எந்த வேலைக்கும், ‘வேலை உத்திரவாதம்’ கொடுக்கக்கூடாது என்பது என் எண்ணம். அரசு வேலை கிடைத்துவிட்டால், பிறகு வேலையே செய்யவேண்டாம், அதுபாட்டுக்கு பென்ஷன் வரும் என்பதுதான் இந்தியப் பொதுப்புத்தி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.