
………………………
பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்
அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனது
சமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்த
ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார்.
அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவை
சிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டை
குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சில
சிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிக
இரத்த இழப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தார்கள் ஆனால் பயனில்லை.
எனவே பெண்ணின் உயிரைக் காப்பாற்ற உதவக்கூடும்
என்கிற எண்ணத்தில் – கருப்பையை
முழுவதுமாக அகற்ற முடிவு செய்தனர். அப்போது
அங்கேயிருந்த 11 வருட அனுபவமுள்ள மருத்துவ
மனையின் மூத்த செவிலியர் “நைனேஸ்வரி கட்கே”
என்பவர், தனது அற்புதமான யோசனையால்
அந்த பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார்.
அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் இரத்தப்போக்கு
இருந்தபோதிலும் இரட்டையர்களுக்கு தாய்ப்பால்
கொடுக்குமாறு நர்ஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.
அந்தப்பெண் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தவுடன்
ஆச்சரியம் அளிக்கும் விதத்தில்
இரத்தப்போக்கு அடியோடு நின்று விட்டது.
தாய்ப்பால் ‘ஆக்ஸிடாஸின்’ என்கிற ஹார்மோனை
வெளியிடுகிறது. இது இரத்த உறைவுக்கு உதவுகிறது.
அந்த நர்ஸ், 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயிற்சியின்
போது கற்றுக்கொண்ட அடிப்படைகளை நினைவில்
வைத்திருந்தது சமயத்தில் உதவியது
என்று கூறி இருக்கிறார்.
.
…………………………………………..
Excellent 👍 God is great
எனக்குத் தெரிந்து பல பெண்களின் உயிர் இந்த பிரச்சினையால் போயிருக்கிறது எனவே இது ஒரு ஆச்சரியம்தான்.