ஒவ்வொரு மசூதியிலிலும் ஏன் ……மோகன் பாக்வத் அவர்களின் புதிய சிந்தனை…

………………

ஆர்.எஸ்,எஸ். தலைவர் திரு மோகன் பாக்வத்
அண்மையில் ஆற்றிய ஒரு வித்தியாசமான உரையிலிருந்து –

………………..

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய
ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் உரையாற்றினார்..
அப்போது ஞானவாபி விவகாரம் தொடர்பாக பரஸ்பர
உடன்படிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும்
அழைப்பு விடுத்தார்.

ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவு
நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:
”இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக உட்கார்ந்துதான்,
இந்த பிரச்சனையை சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்…

கோர்ட் அதன் தீர்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும்
எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்… நமது நீதித்துறை
புனிதமானது.. மிகவும் உயர்ந்தது என்று கருதி நாம் எடுக்கும்
முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்… அதனால், அதன் முடிவுகளை
எல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது. இது தொடர்பாக
இப்படி சர்ச்சைகளை கிளப்பிவிட்டு வரக்கூடாது..

இந்துக்களும் சரி, முஸ்லிம்களும் சரி, வரலாற்று
உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரிஷிகள் – முனிகள் –

எந்தவித வழிபாட்டு முறைகளுக்கும் எதிராக இந்துக்கள்
ஒருபோதும் எதிர்ப்பை கொண்டிருக்கவில்லை.. நாங்கள்
எல்லாவற்றையும்தான் ஏற்றுக்கொள்கிறோம்.
எல்லாவற்றையும்தான் புனிதமாக கருதுகிறோம்.
அவர்கள் அந்த வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
ஆனால் அவர்கள் நமது ரிஷிகள், முனிகள், க்ஷத்திரியர்களின்
வழித்தோன்றல்கள்… நாங்கள் அதே மூதாதையர்களின்
வழித்தோன்றல்கள்..

இந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஒருபோதும்
நினைப்பதில்லை. காரணம், இன்றைய முஸ்லிம்களின்
முன்னோர்களும் இந்துக்களே ஆவர்..

சிவலிங்கம் சில இடங்கள் மீது எங்களுக்கு, ஸ்பெஷலான
பக்தி இருந்தது… அதுக்காக நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க
வேண்டும்?

ஞானவாபி விஷயத்தில் வரலாற்றை மாற்ற முடியாது…
இன்றைய இந்துக்களோ, இன்றைய முஸ்லிம்களோ அதை
உருவாக்கவில்லை. அது அந்த நேரத்தில் நடந்தது…

ஞானவாபி மீது நமக்கு நிறைய பக்தி உள்ளது.. அதனால்தான்
நாம் ஏற்கனவே அங்கு வழிபட்டு கொண்டிருக்கிறோம்..
ஆனால் அதற்காக ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன்
தேட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

.
………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to ஒவ்வொரு மசூதியிலிலும் ஏன் ……மோகன் பாக்வத் அவர்களின் புதிய சிந்தனை…

  1. புதியவன் சொல்கிறார்:

    இது உண்மையிலேயே புதிய சிந்தனைதான்………ஆச்சர்யமானதும்கூட. இதற்கு ஏதேனும் பின்னணிக்காரணங்கள் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். (சோழியன் குடுமி…). ஆனாலும் கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதுதான். சில முக்கிய வழிபாட்டுத் தலங்களைத் தவிர (அதாவது முஸ்லீம் படையெடுப்பினால் கோவில்களை ஆக்கிரமித்து அதன் ஒரு பகுதியில் மசூதி கட்டியவைகள்) மற்ற இடங்களுக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துவது, எதிர்காலத்தில் மத உரசல்கள் வராமல் தடுத்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.