பாஜக-விலும் வாரிசு அரசியல் -???விகடன் தரும் காட்சிகள்….!!!!!

…………………

….

…………………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

15 Responses to பாஜக-விலும் வாரிசு அரசியல் -???விகடன் தரும் காட்சிகள்….!!!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    ‘மண்ணு மூட்டையை நான் சுமந்து திரிகிறேன்.. என் மகனுக்கு பதவி கொடுத்தால் என்ன’ என்பது போன்ற காட்சி எனக்கு பாஜகவில் தெரியவில்லையே

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    இப்படியும் ஒரு டிஃபென்ஸா …!!!

    நீங்கள் இதற்கு வக்காலத்து வாங்க வேண்டிய
    அவசியம் என்ன …?

    அப்பாவும் மந்திரி –
    பிள்ளையும் மந்திரி –

    வாரிசு அரசியல் என்பதற்கு இதை விட
    வேறு என்ன உதாரணம் வேண்டும் …?

    .
    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    .

    • புதியவன் சொல்கிறார்:

      வாரிசு அரசியல் என்பது முற்றிலுமாகக் களைவது பல்வேறு காரணிகளால் முடியாது. ஆனால் குடும்ப ஆட்சி, குடும்பக் கட்சி என்பதை ஒழிப்பது அவசியம். சிந்தியாவின் வம்சம் ராஜவம்சம். அதனால் அந்தக் கவர்ச்சியை வாக்குகளின் அவசியத்தை காங்கிரஸ் பயன்படுத்திவந்தது. (அந்தப் பகுதியில் ராஜவம்சம் கட்சி அரசியலுக்கு வந்ததே தவறு). விகடன் குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர பலர் உண்டு. ஆனால் எது பிரச்சனை என்றால், மாவட்டச் செயலாளர், மந்திரி, கட்சித் தலைமை – இந்தப் பதவிகள் வாரிசுகளுக்கே பிரதானமாகச் செல்வது, அவர்களையே தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ஜியசபா எம்பிக்கள் ஆக்குவது, கட்சி மாநாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவிதான் என்று சொல்லிவிட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் இருவரின் குடும்பங்களும் வேறு வேறு என்று கண்டுபிடிப்பதுதான் தவறு. காங்கிரஸ், திமுக, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், கேசிஆர், சிவசேனா போன்று பலவற்றில் தலைமை என்பது குடும்பம் மட்டும்தான், மந்திரிகள் என்பவர் வாரிசுகள்தாம் என்று இருப்பதுதான் குடும்ப அரசியல்.

      வாரிசு அரசியல், மிகக் குறைந்து இருப்பது கம்யூனிஸ்ட் கட்சிகளில் – (இப்போ கட்சியே அடமானம் வைக்கப்பட்டுவிட்டது அல்லது மாநிலக் கட்சியாகிவிட்டது). இதற்குக் காரணம், அந்தக் கட்சியில் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும் உண்டியல் எடுத்துத்தான் உணவே உண்ணவேண்டும். சொத்து சேர்க்கும் வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்ததாக வாரிசு அரசியல் மிகக் குறைந்து இருப்பது பாஜக என்றே நான் நினைக்கிறேன்.

      மாநிலத் தலைமை, மத்திய அமைச்சர், கட்சித் தலைமை, பிரதமமந்திரி என்று எந்தப் பதவியைப் பார்த்தாலும் டக் என்று வாரிசுகளுக்கு வாய்ப்பு என்று சொல்லிவிடமுடியாத கட்சி எது என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

    • புதியவன் சொல்கிறார்:

      //அப்பாவும் மந்திரி –
      பிள்ளையும் மந்திரி –

      வாரிசு அரசியல் என்பதற்கு இதை விட
      வேறு என்ன உதாரணம் வேண்டும் …?// – காந்தி பேரன், ராஜாஜி பேரன் ஆகியோர் தங்கள் சுய பலத்தால்தான் அரசியலில் பிரகாசித்தார்களா? கவர்னர் ஆனார்களா? சிந்தியாவின் குடும்பமே காங்கிரஸில் பிரதான இடம் பெற்றவர்கள். டாக்டருக்கே எல்லா நோய்களும் வருகிறதே. இறக்கிறார்களே..கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், மக்களின் நோயைத் தீர்க்கப்போகிறானாம் என்பது போல இருக்கிறது உங்க வாதம்.

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    ஆமாம்….நேற்று, அதற்கு முன் தினம்
    எல்லாம் கள்ள நோட்டு புழக்கம் பற்றிய
    செய்திகள், விவாதங்கள் எல்லாம் வந்தனவே ….

    உங்களை அங்கே மிகவும் எதிர்பார்த்தேன்…
    காணோமே ….
    டிஃபெண்ட் பண்ண முடியாத அளவிற்கு
    தர்மசங்கடமான நிலையோ …!!!!!

    .
    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்
    .

    • புதியவன் சொல்கிறார்:

      டிமானிடைசேஷன் பற்றி என் கருத்துக்களை முன்னரே பதிவு செய்துள்ளேன். திருட்டுத்தனத்தை ஒழிப்பது இயலாது. நோட்டடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு அளித்த ப.சியைக் கேட்டாலும் இதையே பதிலாகச் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

      • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        .

        நல்ல விளக்கம்….!!!!!!!!!!!!!!!!
        நன்றி புதியவன்,

        .
        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

      • Manivannan Kamaraj சொல்கிறார்:

        நண்பர் புதியவன் அவர்களுக்கு ப.சிதம்பரம் தான் பாகிஸ்தானுக்கு அந்த நோட்டு அடிக்கும் மெஷினை கொடுத்தார் என்று உறுதியாக தெரியும் என்றால் திருவாளர் பிரதமர் மோடி அவர்களின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக் கொண்டு நமது நாடாளுமன்றத்தில் ஒரு கொள்கை முடிவை எடுத்து அதை ஒரு சட்டமாகவே செய்து இந்தப் பாசுரத்தை நான் காலவரையறையின்றி அல்லது சாகும்வரை ஜெயிலில் அடைக்க ஒரு கொள்கை முடிவு என்று ஒரு சட்டமே இவர் கூட கொண்டு வரலாம் அல்லவா அவர்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் உள்ளார்களே அதை வைத்து செய்ய முடியாதா செய்யலாமே செய்யுங்களேன் உங்களால் உறுதி பூர்வமாக நிரூபித்து கொள்கை முடிவை எடுத்து அவர் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் தள்ளvum.

        • Manivannan Kamaraj சொல்கிறார்:

          திருடன் என்று தெரிந்த பிறகு கைவசமுள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு அவரை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் இருந்தால் இந்த 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு என்ன பயன் என்ன செய்வீர்கள் திருடர்கள் என்று தெரிந்தும் அவர்களை veliye விடுவீர்களா ஒருவேளை நமது சட்டம் சரியில்லை என்றால் ஏன் உங்களால் அந்த ஒட்டுமொத்த சட்டத்தை மாற்ற முடியாது உங்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் உள்ளார்களா அல்லவா நீங்கள் என்ன நினைத்தாலும் செய்யலாம் அல்லவா அவன் திருடன் என்றால் ஏன் அவனை உள்ளே தள்ள முடியாது.

          • Manivannan Kamaraj சொல்கிறார்:

            திருடன் திருடன் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் ஆனால் அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் தண்டிப்பதற்கு உரிய சட்டத்தையும் உருவாக்க மாட்டோம் ஆனால் திருடன் திருடன் என்று சொல்லிக்கொண்டே 50 ஆண்டுகால எல்லா முன்னாள் பிரதமர்கள் மீதும் பழியைப் போட்டுக்கொண்டே இருப்போம் ஆனால் அவர்களை உள்ளே போடுவதற்கு உண்டான எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம் 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு

        • Tamil சொல்கிறார்:

          பாரதிய ஜனதாவில் இருப்பவர்கள் மற்ற கட்சியில் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் ஆக இருந்தவர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது அப்படி இருக்கையில் அது எப்படி ஒரு நல்ல கட்சியாக இருக்கும்

        • புதியவன் சொல்கிறார்:

          நாட்டில் மாற்றம் ஏற்பட, மக்களிடத்தில்தான் மாற்றம் ஏற்படவேண்டும். கடைந்தெடுத்த அயோக்கியன் என்று தெரிந்தும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது யார்? உதாரணமாக, (example only) ஒரு அரசியல்வாதி மோசம், ஊழல்வாதி என்றால், அவரை எப்படி தண்டிப்பது? என்னைக் கேட்டால், அவரையும், அவருக்கு வாக்களித்த மக்கள் அனைவரையும் ஒருங்கே தண்டிக்க வேண்டும். இது நடக்கிற காரியமா? ஒருவர் மீது என்னவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும், நீதி மன்றன் என்று ஒன்று இருக்கிறது. அவர்கள் என்ன மாதிரி முடிவுகளை எடுப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?

          நான் நினைக்கிறேன்…சட்டப்போராட்டம் என்பது மிக நெடிய ஒன்று. அதனால் அரசுகள் தேவையில்லாமல் தங்கள் நேரத்தை அதில் வீணடிக்காது.

          அரசியல் என்பதே மக்களுக்கானது. அதனால் அரசியல் கட்சி என்று ஒன்று இருந்தால் அதில், மக்களின் ரெப்ரெசெண்டேடிவ்கள்தாம் இருப்பர். அதாவது நல்லவர்கள்,இடைப்பட்டவர்கள், கடைந்தெடுத்த அயோக்கியர்கள். இதில் எந்தக் கட்சிக்கும் விதிவிலக்கு இருக்காது. ஆனால் அவர்களை எவ்வளவு தூரம் கட்சித் தலைமை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதில்தான் கட்சிகள் வேறுபடுகின்றன.

          //மற்ற கட்சியில் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் ஆக இருந்தவர்கள்// – இதற்கு எந்த வித அளவுகோல் உண்டு? ஜனநாயகத்தில் ஒருவர் நினைப்பதை தொகுதியில் இருக்கும் 30-40 சதம் மக்களும் நினைக்கணும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள்? நீங்கள் சொன்ன கடைந்தெடுத்த அயோக்கியர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் கடைந்தெடுத்த அயோக்கியர்களா இல்லையா?

  4. Thiruvengadam thirumalachari சொல்கிறார்:

    The RBI release may be to justify inflation too much money(caused by fake currency)in circulation is responsible for inflation.Secondly it may to frighten opposition politicians and make them dump the high denomination notes with them for distribution to voters

  5. thiruvengadamthirumalachari சொல்கிறார்:

    The basic point is while other parties did not use dynasty as the grave an of their election campaign BJP has been using it in all its campaigns.Kettle calling the pot black

    • புதியவன் சொல்கிறார்:

      This is a difficult argument. What is dynasty? 70 வருடங்களாக ஒரு குடும்பம் மட்டுமே காங்கிரஸுக்குத் தலைமை. திமுகவுக்கு 50 வருடங்களாக. இவர்களைப் பார்த்துத்தான் முலயாம் சிங், தாக்ரே, சரத்பவார்…… என்று பல கட்சிகள். கணவனும் மனைவியும் பொறுப்பில் இருந்ததால் கம்யூனிஸ்டுகளும் dynasty politics என்று எழுதுவீர்களா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.