……………….

……………
1000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தெற்காசிய நாடுகளில்
வெற்றிக்கொடி நாட்டி ஆட்சி செய்து வந்தனர் என்பதற்கு
கம்போடியா, வியட்னாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ்,
தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும், நிறைய ஆதாரங்கள்
கிடைக்கின்றன….
தாய்லாந்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான ஆதாரங்கள்
சில கீழே …..
தற்போது தாய்லாந்து புத்த மத நாடாக இருந்த போதிலும்,
1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள், அதன் பின்னர் சோழர்கள்
காலத்தில் தமிழர்கள் அங்கு சென்று இந்து மதத்தை பரப்பினர்.
அப்போது படைகளுடன் வணிகர்கள், பிராமணர்கள் போன்றோரும்
சென்றனர். தாய்லாந்தில் கிடைத்த ஒரு தமிழ்க் கல்வெட்டில்
( phu khao Thong என்ற இடத்தில் )
- ” நன்கூர் உதயன் ” என்கிற பல்லவ தளபதி “அவுணி நாராயணம்”
என்ற ஏரியை வெட்டி அதை பராமரிப்பு செய்ய மணிக்கிராமம்
( படைவீர்கள் முகாமில் பாதுகாப்புடன் இருக்கும் வணிகர்கள் ) என்ற
பெயரில் அழைக்கப் பட்ட தமிழ் வணிகர்களிடம் ஒப்படைத்து பற்றி
பொறிக்கப்பட்டுள்ளது. அவுணி நாராயணன் என்ற பெயர் கி பி 826
முதல் 840 ஆம் ஆண்டு வரை தமிகத்தில் ஆண்ட பல்லவ மன்னன்
மூன்றாம் நந்திவர்மனை குறிப்பதாகும்.
அங்கே சென்ற பிராமணர்கள் காலப்போக்கில் அங்கே உள்ள
பெண்களை திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.
அவர்களின் வழி வந்தவர்கள் – தேவாரம், திருவாசகம், திருப்பாவை
போன்ற பாடல்களை அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து
கோவில்கள் மற்றும் அரண்மனையில் பாடுகின்றனர் .
இந்த வழக்கம் முன்னர் மன்னர் இந்துவாக இருக்கும் போது முடிசூட்டு
விழாவில் பாடப்பட்டது.
மன்னரின் முடிசூட்டு விழாவில் கங்கை நீரை ஊற்றி வழிபடும் சடங்கை
செய்யும் பிராமணர்கள் தாம் ராமேஸ்வரம் ஊரில் இருந்து வந்தவர்கள்
என பெருமையாக சொல்லிக்கொள்ளுகிறார்கள். அந்த வழக்கம் இன்றும்
தொடர்கிறது. தமிழ் மக்கள் போலவே ஜனவரி 14 ஆம் நாள் பொங்கலை
தாய்லாந்து மக்களும் பண்டிகை நாளாக கொண்டாடுகின்றனர்.
மேலும் தமிழரை போலவே சூரியனை மைய்யமாக கொண்ட
ஆண்டுக்கணக்கையும் வைத்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் மொழியான “தாய்” -மொழியின் எழுத்துக்கள்
பல்லவ கிரந்த எழுத்தை( தமிழ் எழுத்துக்களில் ஒரு பிரிவு )
அடிப்படையாகக் கொண்டது.
தமிழர் எங்கு சென்றாலும் அந்த இனப் பெண்களை மணந்து
சில தலைமுறைகள் கடந்த பின்னர் அங்குள்ள பண்பாட்டுடன் கலந்து
விடுவது சகஜமாக இருந்திருக்கிறது….. இது போலவே பாலி, பிலிபின்ஸ்,
வியட்னாம், மியான்மர், கம்போடியா போன்ற நாடுகளுக்குச் சென்ற
பண்டைத்தமிழர்கள் தனியே அடையாளம் காண முடியாமல்
அந்நாட்டு மக்களுடன் ஒன்றிவிட்டனர்.
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய தாய்லாந்து மன்னர்
முடிசூடும் காட்சியின் காணொளி ஒன்று கீழே……
……………….
.
……………………………………………………………….