டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..

………………………

…….

மார்ச் மாதம் 18-ந்தேதி வெளிவந்த பத்திரிகைச் செய்தி ஒன்று கீழே –


இது குறித்து மேற்கொண்டு செய்திகள் எதுவும் வருமா என்று
எதிர்பார்த்து காத்திருந்தேன்… எதுவும் வெளி வராததால்
இந்த இடுகை…..

………………..

டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..
பிடிஆர்-க்கு மிகப்பெரிய சவால்..!

டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்வது மூலம் 2003ஆம்
ஆண்டில் இருந்து இப்பிரிவில் தமிழக அரசு மிகப்பெரிய ஆதிக்கம்
செய்தாலும்,

மதுபான விற்பனையில் சுமார் 50 சதவீத கலால் வரி வருமானத்தைத்
தமிழக அரசு இழந்து வருவதாக இன்று பட்ஜெட் அறிக்கை தாக்கல்
செய்யும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும்
மதுபான வியாபாரத்தை முழுமையாகத் தடுத்து நிறுத்துவது மட்டும்
அல்லாமல் வரி ஏய்ப்புச் செய்யப்படும் வழிகளையும்,
வருவாய் இழக்கும் ஓட்டைகளையும் விரைவில் அடைக்க வேண்டும்
எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றான விளங்கும்
டாஸ்மாக் விற்பனை மூலம் 2020-21ஆம் நிதியாண்டில் சுமார்
ரூ.33,811 கோடி வரி செலுத்தியுள்ளது.

இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 5.1 கோடி கேஸ்கள் ஐஎம்எஃப்எல்
(இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்) மற்றும் பீர்
ஆகியவை டாஸ்மாக் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2020-21 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 67,622 கோடி ரூபாய்
வரி வருமானம் ஈட்டக்கூடிய 10 கோடிக்கும் அதிகமான மதுபான
பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் 50 சதவீத தொகை அரசுக்குச் செலுத்தப்படாமல் வரி ஏய்ப்பு
மற்றும் வருமான லீக்கேஜ் ஆகியுள்ளது. கள்ள சந்தை விற்பனை மூலம்
சுமார் 50 சதவீதம் வரையிலான வருமான இழப்பு தமிழக அரசு
சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது அரசியல்வாதிகள், காவல்துறை,
மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையரகம், டாஸ்மாக் மற்றும்
வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கட்டாயம் தெரியாமல் இருக்காது
என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் கள்ள சந்தை விற்பனையில் சட்டவிரோத இயங்கும் மதுபான
ஆலைகள் மற்றும் டிஸ்டில்லரிகளால் தயாரிக்கப்படும் மதுபானம்,
கொள்ளையர்களால் தயாரிக்கப்படும் சாராயம், மற்ற மாநிலங்களில்
இருந்து தமிழ்நாட்டிற்குக் கடத்தப்படும் மதுபானம் ஆகியவையும்
அடங்கும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது,
இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய்
மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

2017-18ஆம் நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் 26,797.96 கோடி
ரூபாயாகப் பெற்ற வரி வருமானம் 2020-21ல் 33,811.14 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரை பிற மாநிலங்களில் இருந்து கடத்தி
வரப்பட்ட 2.95 லட்சம் லிட்டர் அர்ராக், 75,720 லிட்டர் ரெக்டிஃபைட் ஸ்பிரிட்
மற்றும் 17.53 லட்சம் ஐஎம்எஃப்எல் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பாகச் சுமார் 1.65 லட்சம் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் பிரச்சனையைச் சரி செய்வதன் வாயிலாக எவ்விதமான கட்டண
உயர்வோ அல்லது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை அதிகரிக்காமல்
சுமார் 30000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருமானத்தைப்
பெற முடியும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தத் தொகை மாநிலத்தின்
வளர்ச்சி திட்டங்களுக்குப் பெரிய அளவில் பயன்படும்.

( https://tamil.goodreturns.in/news/tasmac-daylight-robbery-50-percent-of-liquor-sale-at-black-market-tn-lost-nearly-30000-crore-reven-027287.html )

……………………………..

மதுபான விற்பனையில் சுமார் 50 சதவீத கலால் வரி வருமானத்தைத்
தமிழக அரசு இழந்து வருகிறது என்கிற மிக சீரியசான விஷயத்தை
நிதியமைச்சர் சர்வ சாதாரணமாக கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது
என்று தெரியவில்லை….

இந்த ஓட்டைகளை அடைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 30,000 கோடி
ரூபாய் அதிக வருமானத்தைப் பெற முடியும் என்று கணிக்கப்படுவதாக
வேறு சொல்கிறார்கள்.

ஓட்டைகள் எங்கே இருக்கின்றன என்பது கண்டு பிடிக்கப்பட்டு விட்டதா …?
கலால் வரி என்பது மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படும்
தொழிற்சாலைகளின் வாயில்களிலேயே அமைந்திருக்கும் அரசு
எந்திரத்தின் ஒரு பிரிவினால் வசூல் செய்யப்படுவது தான். இவர்கள்
அனுமதியின்றி, இவர்களுக்கு தெரியாமல் – உற்பத்தி செய்யப்படும் எந்த
பொருளும் தொழிற்சாலையை விட்டு வெளியே செல்ல முடியாது.

இந்த மோசடி – மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளின் முதலாளிகளால்,
கலால் வரித்துறையின் ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே சாத்தியப்படும்.

இவ்வளவு பெரிய மோசடி இவ்வளவு நாட்களாக நடந்து வந்ததற்கு
காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டார்களா..?
அவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது…?

இது குறித்த விவரங்கள் எதுவும் ஏன் வெளிவரவில்லை…?

தமிழ் நாட்டின் சாராய உற்பத்தி தொழிற்சாலைகளின் முதலாளிகளுக்கும்,
ஆளும் கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் தான் இந்த
மோசடிக்கான மூல காரணமா …?

சுமார் 30,000 கோடி ரூபாய் அளவிற்கு
மோசடி நடந்திருக்கிறது… அரசுக்கு பேரிழப்பு –
என்று பரபரப்பான ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது….

ஆனால், தமிழகத்தின் எந்த பத்திரிகையுமோ,
எந்த செய்தி தொலைக்காட்சி சேனலுமோ –
இது குறித்த எந்தவித மேல் தகவல்களையும்
தொடர்ந்து தரவில்லை; இது குறித்த எந்தவித
விவாதங்களையும் எந்த மீடியாவும் நடத்தவில்லை;

வெட்கக்கேடான, அவமானகரமான செய்தி இது.
இந்த அளவிற்கு மீடியாக்கள் அநேகமாக அனைத்துமே
விலை போய் விட்டன என்பதைப் பார்க்கும்போது,
நமக்கு எதற்கு செய்தி பத்திரிகைகளும்,
செய்தி தொலைக்காட்சி சேனல்களும் என்றே
தோன்றுகிறது.

.
……………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to டாஸ்மாக் கொள்ளை.. 50% வருமானம் மாயம்..

  1. R.Gopalakrishnan சொல்கிறார்:

    this is nothing but increase the local make.A CHEAP tactics

  2. பஞ்சவர்ணகிளி சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது,
    இதில் ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 110 முதல் 120 கோடி ரூபாய்
    மதிப்பிலான மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

    அடிச்சு விடுவதற்கும் ஓரு அளவு உள்ளது ஜயா!!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      .

      நீங்கள் குறிப்பிடுவது, பத்திரிகைச் செய்தியின் ஒரு பகுதி…. அதை நான் எப்படி மாற்ற முடியும் …?

      எனவே நாம் புள்ளி விவரங்களை
      விட்டு விட்டு, செய்தியின்
      அடிப்படை கருத்தை மட்டும்
      எடுத்துக்கொள்வோம்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      .

  3. bandhu சொல்கிறார்:

    இந்த அளவு வரி இழப்பை ஒரு பெரிய செயதியாக வரவிடாமல் பார்ப்பது எந்த சக்தி? அல்லது, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்ற அளவு ஊழல் தலை விரித்து ஆடுகிறதா?

    ஒன்றுமே புரியவில்லை!

  4. Tamil சொல்கிறார்:

    டாஸ்மாக் 30,000 கோடி வருமான இழப்பு
    மணல் கொள்ளையில் பல்லாயிரம் கோடி வருமான இழப்பு (இயற்கையின் அரணான மலைகளை கடைந்து எம் சாண்ட் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது)
    கருப்புப் பணத்தின் மூலம் பத்திரப்பதிவு பயிற்றுவிக்கப்பட்டு பல்லாயிரம் கோடி வருமான இழப்பு

    இப்படி எதை எடுத்தாலும் குறைபாடுகளுடன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன இன்றைய அரசும் இதற்கு முந்தைய அரசும் தமிழகத்தின் சாபக்கேடு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.