எதிர்பாராத கருத்துகள் – ஜக்கி வாசுதேவ் அவர்களிடமிருந்து ……!!!

……………..

………………….

பாஜக-விற்கும், மத்திய அரசுக்கும் – நெருக்கமானவராக
கருதப்படும் திரு. ஜக்கி வாசுதேவ் அவர்கள், பாஜகவினால்
ஏற்க முடியாத,

ஆனால் நடைமுறை சாத்தியமான சில
கருதுக்களை சொல்லி இருப்பது நம்மை பொருத்த வரை
எதிர்பாராததாகவே இருக்கிறது ….

இந்தியா டுடே செய்தித் தளத்திற்காக – திரு. ஜக்கி வாசுதேவ்
அவர்கள் அதன் ஆசிரியர் ராகுல் கன்வாலுடன் நிகழ்த்திய
உரையாடலின் ஒரு பகுதி கீழே –
(ஆங்கில உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு…)
…………………………….

இந்தியா டுடே செய்தி இயக்குநர் ராகுல் கன்வாலிடம்
பேசிய ஆன்மீகத் தலைவர் சத்குரு,

“ஆயிரக்கணக்கான கோவில்கள் படையெடுப்பின் போது இடித்துத்
தரைமட்டமாக்கப்பட்டன. அப்போது அவற்றைப் பாதுகாக்க
முடியவில்லை. இப்போது அவற்றைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை,
ஏனென்றால் உங்களால் வரலாற்றை மாற்றி எழுத முடியாது,”
என்று கூறினார்.

மேலும், “இரு சமூகத்தினரும் [இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள்] ஒன்றாக
அமர்ந்து, கலந்து பேசி – எந்த இரண்டு மூன்று இடங்கள் முக்கியமானவை
என்பதை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வை எட்ட வேண்டும்.

ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு பிரச்சினையாகத் துவங்கி இரண்டு
சமூகங்களுக்கிடையே பதட்டங்களையும், விரோதத்தையும் தொடர்ந்து
நீடித்திருக்க அனுமதிக்கக்கூடாது.

இரண்டு சமூகங்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துச்
செல்வதன் மூலம் மட்டுமே தேசத்தை அமைதியான வழியில் முன்னெடுத்துச்
செல்ல முடியும்…. எப்போது பார்த்தாலும், இந்துக்கள் – முஸ்லிம்கள் என்று
பிரித்து உணர்வதை தவிர்க்க வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் ஞானவாபி மசூதி சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட
கேள்விக்கு, சத்குரு தன்னிடம் இது குறித்த சமீபத்திய தகவல்கள் இல்லை
என்பதால் கருத்து கூறுவதைத் தவிர்த்தார்.

சத்குருவின் கூற்றுப்படி, இந்தியா தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில்
உள்ளது. “இந்த நேரத்தில் நாம் விஷயங்களைச் சரியாகச் செய்தால்,
இந்தியா உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்க முடியும்.
எல்லாவற்றையும் பெரிய பெரிய சர்ச்சையாக்கி அந்த வாய்ப்பை
வீணடிக்கக் கூடாது.

இந்த [மந்திர்-மஸ்ஜித் ] விஷயத்தை சர்ச்சைக்குரியதாக ஆக்க வேண்டாம்
என்று நான் மக்களையும் செய்தி நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்…..”

“தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை, மக்கள் மனதில்
வலி உள்ளது; எனவே முடிவில்லாமல் வாதிடுவதை விட்டு விட்டு, அமைதியாக
உட்கார்ந்து பேச வேண்டும்.

தீவிர அரசியலில் உள்ளவர்களை இதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்…..
ஏனெனில் இதிலிருந்து யாரும் அரசியல் ஆதாயம் அடைவதை
தவிர்க்க வேண்டும்…..

இந்தி vs தென்னிந்திய மொழிகள் விவாதத்தில், சத்குரு, “இந்தியாவில்
எல்லா மொழிகளுக்கும் சமமான இடம் உண்டு. உண்மையில் இந்தியை விட
தென்னிந்திய மொழிகளுக்கு இலக்கியம் அதிகம். இந்தியா ஒரு
தனித்துவமான தேசம், எதையும் ஒரே மாதிரியாக உருவாக்கவில்லை.
நாங்கள் ஒரு கலைடாஸ்கோப் – அதுதான் இந்த நாட்டின் அழகு.”

மேலும், ” நாம் மொழிவாரி மாநிலங்களை அமைத்தபோது, ​​அனைத்து
மொழிகளும் மதிக்கப்படும் என்பது இயற்கையான வாக்குறுதியாக
அமைந்திருந்தது….. தயவு செய்து அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள் அதிகம் என்பதற்காக தேசத்தின் அடிப்படை நெறிமுறைகளை மாற்ற வேண்டாம்.”


………………………………………………………………..

ஜக்கி வாசுதேவ் அவர்களின் – இந்த சமயத்தில் – மிகவும் தேவைப்படும் -இந்த கருத்துகளை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்.

.
………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to எதிர்பாராத கருத்துகள் – ஜக்கி வாசுதேவ் அவர்களிடமிருந்து ……!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  //“இரு சமூகத்தினரும் [இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள்] ஒன்றாக
  அமர்ந்து, கலந்து பேசி – எந்த இரண்டு மூன்று இடங்கள் முக்கியமானவை
  என்பதை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வை எட்ட வேண்டும்// – இது உண்மைதான். இஸ்லாமிய படையெடுப்பில், அதிலும் குறிப்பாக கில்ஜி, ஔரங்கசீப் போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளின் படையெடுப்பில் பல இந்துக் கோவில்கள் மசூதிகளாக்கப்பட்டன. ஒவ்வொன்றாகப் பேச ஆரம்பித்தால் இன்னும் மத சம்பந்தமாகவே ஐந்நூறு ஆண்டுகளாக மக்களிடையே பிரிவு எழும். அதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில முக்கியமான இடங்களை மட்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு சென்றுவிட்டு, மிகுதியுள்ள இடங்களை, வரலாறு அப்படியாக இருந்துவிட்டது என்றே ஏற்றுக்கொள்ளவேண்டும். (அதிலும் என் அபிப்ராயப்படி, காசி, மதுரா, அயோத்தி போன்ற சில இடங்களை இரு சமூகத்தினரும் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது).

  இப்போதும் ஒரு கோவிலைச் சுற்றியுள்ள இடங்களை வாங்கி முழுமையாக இஸ்லாமிய அல்லது கிறித்துவமய மாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதிலும் மத்திய அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து, சட்டத்தில் கொண்டுவரவேண்டும். இல்லாவிடில் இந்தப் பிரச்சனை ஒரு போதும் தீராது.

  //” நாம் மொழிவாரி மாநிலங்களை அமைத்தபோது, ​​அனைத்து
  மொழிகளும் மதிக்கப்படும் என்பது இயற்கையான வாக்குறுதியாக
  அமைந்திருந்தது….. தயவு செய்து அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.// – இதுவும் மிகச் சரியான கருத்து. உலகத்தில் எங்கிருந்தாலும், நான் தமிழன். ஆந்திராவில் கடந்த ஐந்து வருடங்களாக வசித்தாலும், இல்லை மும்பையில் செட்டில் ஆனாலும் நானும் என் தலைமுறைகளும் தமிழர்கள்தாம். அதனால் மொழி என்பது ஒருவனது இனத்தின் ஐடெண்டிட்டி. அதைவிட எந்த ஒரு மொழியும் ஒருவனுக்குப் பெரியதாக இருக்கமுடியாது. கர்நாடகத்திலும், இங்கேயே தலைமுறை தலைமுறையாக செட்டில் ஆனவர்களும், கன்னட மொழியை மட்டுமே உயர்த்திப் பிடிப்பர். அதனால், ஜனநாயக நெறிகள் (அதாவது பெரும்பான்மை) மொழி விஷயத்தில் செல்லாது. ஒவ்வொரு மொழியையும் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. அதே நேரம், இந்த மொழிதான் உயர்ந்தது, இது தாழ்ந்தது என்று பேசும் அரசியல்வியாதிகளையும், அவர்கள் எம்.பிக்களாக இருந்தாலும், சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தவேண்டியதும் அவசியம்.

 2. ஆதிரையன் சொல்கிறார்:

  எனது சிற்றறிவுக்கு புரிந்த வரையில், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மிகப்பெரிய பதட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்கள் மத சார்பற்ற அரசியல் கட்சிகள் என்று தங்களை தம்பட்டம் அடித்து கொள்பவர்கள் தான்.இவர்கள் தான் ஓட்டுக்களை பொறுக்குவதர்காக , அவர்களுக்கு சாதகமான அம்ஸங்களையே இது வரை செயல்படுத்தி, அவர்களின் வாக்குகளை பெறுவதர்காக, இந்துக்களை மட்டம் தட்டிக்கொண்டே வந்திருக்கின்றனர்.ஆனால் இது வரை யாரும் அதை தட்டி கேட்டதே இல்லை.
  ஆனால் இப்பொழுதோ, இது வரை இந்துக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை தட்டிக்கேட்க அந்த துப்பு இல்லாதபொழுதும் , திடீரென்று முஸ்லிம்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு, மீண்டும் அதே தவறை தான் செய்கிறார்கள்.
  ஹிந்துக்களின் சமய சடங்குகளை கிண்டல் செய்து,கை தட்டி சிரித்து கொண்டும், முடிந்தால் அவர்களின் மத வழிபாட்டு விஷயங்களில் பகுத்தறிவு என்ற போர்வையில் மூக்கை நுழைத்துக்கொண்டும், சிறுமை படுத்தி கொண்டிருக்கும் பொழுது, ஏன் இதுவரை யாரும் ஹிந்துக்களுக்காக வக்காலத்து வாங்க வில்லை.வேடிக்கை தானே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  அதே போன்று இப்பொழுதும், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாலே, எல்லாமே நலமாகவே இருக்கும்.ஓட்டுக்காக மற்ற மதத்தினரரின் ஓட்டுக்காக ஏன் ஊளையிடவேண்டும் .
  பிஜேபியையே மதவெறியர்கள் என்று தொடர்ந்து குற்றம் கூறுவதில் சிறிதளவும் அர்த்தம் இல்லை.இவர்கள் மற்ற அரசியல் கட்சியை கேள்வி கேட்க துப்பு இல்லாதவர்கள். இதுவரை எந்த விதமான மத வெறுப்பு அரசியல்களில் அவர்கள் ஈடுபட்டதில்லை.சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகளே இதற்க்கு சாட்சி. முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளிலும், முஸ்லீம் காட்சிகளை விடவும் அதிகமான ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்றிருப்பதே இதை காட்டுகிறது.எனவே பிஜேபி என்பது முஸ்லீம் விரோத கட்சி என்ற வெறி பேச்சு நீர்த்து போன ஒன்று..தமிழ் நாட்டை தாண்டி , இந்த பேச்சை எந்த முஸ்லிம்மும் நம்புவதில்லை .

 3. Tamil சொல்கிறார்:

  ஆச்சரியமாக உள்ளது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.