…..

…………..
” மாநிலக் கட்சிகளுக்கு சித்தாந்தமோ, மையப்படுத்தப்பட்ட
அணுகுமுறையோ இல்லாததால், பாஜகவை எதிர்த்து காங்கிரஸால்
மட்டுமே போராட முடியும் ” என்று உதய்பூரில் நடந்த கூட்டத்திற்கு
பிறகு ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு, எதிர் அணியில் உள்ள
பல கட்சிகள் அதிருப்தியை வெளிப்படுத்தின.
தான் கூறிய கருத்துகள் எதிர்மறையானதொரு நிலையை உருவாக்கி
விட்டதை புரிந்து கொண்டகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இப்போது -லண்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலையில்
நடந்த ஒரு உரையாடலின் போது,
நுணுக்கமான ஒரு நிலையைத் தேர்ந்தெடுத்து விளக்கமாக பேசி இருக்கிறார்.
உதய்பூரில் அவர் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும்,
( ராகுல் தனது கருத்துகள் தவறாக
புரிந்துக் கொள்ளப்பட்டதாக சொல்வதுசரி அல்ல…..
ராகுல், தான் சொல்ல நினைத்ததை சரியாகச்
சொல்லவில்லை என்பதே சரி….) –
காங்கிரஸை தன்னை “பெரிய தந்தை”யாகக்
(பிக் டாடி – பெரிய கட்சி) கருதவில்லை என்று
ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மற்ற எதிர்க்கட்சிகளை விட காங்கிரஸ் பெரிய கட்சி என்று கூறவில்லை
என கூறிய ராகுல் காந்தி, அனைத்துக் கட்சிகளும் ஒரே மாதிரியான
போரில் ஈடுபட்டு வருவதாகவும் “ஆர்எஸ்எஸ்-ன் தேசியப் பார்வைக்கும்
காங்கிரஸின் தேசியப் பார்வைக்கும் இடையேதான் சித்தாந்தப் போர்
நடைபெற்று வருகிறது” என்றும் கூறினார்.
முக்கியமாக – பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்த தவறியதாலும், ஊடகங்களின் மீதான பாஜகவின் ஆதிக்கத்தாலும் தான் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
“நாம் இப்போது இந்திய அரசின் நிறுவனக் கட்டமைப்பை எதிர்த்துப்
போராடுகிறோம், இது ஒரு அமைப்பால் கைப்பற்றப்பட்டு வருகிறது,
இதற்கு எதிராக போராடுவதே எங்களுக்கான ஒரே வழி… நமது நாட்டின்
நிறுவன கட்டமைப்பை மீட்க, எங்களுக்கு ஒரே வழி இந்திய மக்களில்
பெரும் திரளிடம் சென்றடைவதுதான். அது காங்கிரஸூக்கு மட்டுமல்ல…
அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும்” என்று அவர் கூறினார்.
(இப்போது தான் ராகுல் தெளிவாக இந்த கருத்தைக் கூறுகிறார்….)
ஒரு பெரிய மக்கள் தொகைக்கு மிகவும் நெருக்கமான அமைப்பு முறை
பற்றி காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். வேலையின்மை, விலைவாசி
உயர்வுகள், பிராந்திய பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளில்
பெரிய அளவிலான வெகுஜன இயக்கங்களையும் நாம் சிந்திக்க
வேண்டும், மேலும் எதிர்க்கட்சியில் உள்ள எங்கள் நண்பர்களை
ஒருங்கிணைக்க வேண்டும். அதனால் நான் காங்கிரஸை
பிக்-டாடி’ யாக பார்க்கவில்லை. இது எதிர்க்கட்சிகளுடன்
ஒரு குழு முயற்சி, ஆனால் இது இந்தியாவை மீட்டெடுப்பதற்கான
போராட்டம், என்று ராகுல் காந்தி கூறினார்.
இது தொடர்பாக அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல மற்ற கட்சிகளுடன்
ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறாரா என்று கேட்டதற்கு,
“ஆம். உதய்பூரில் நான் கூறிய கருத்து என்னவென்றால், இது இப்போது
ஒரு கருத்தியல் போர் மற்றும் இது ஒரு தேசிய கருத்தியல் போர், நிச்சயமாக, நாங்கள் தயாராக இருக்கிறோம்… மாநில கட்சிகள் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து போராடுகின்றன… ஆனால் காங்கிரஸ்
தேசிய அளவில் சித்தாந்தம் கொண்ட கட்சி. எனவே, எதிர்க்கட்சிகளை
ஒருங்கிணைத்து செயல்படுத்தும் ஒரு கட்டமைப்பாக காங்கிரஸ் தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
மற்ற எதிர்க்கட்சிகளை விட எந்த வகையிலும் காங்கிரஸ் மேலானது அல்ல.
நாம் அனைவரும் ஒரே போரில் போராடுகிறோம் … அவரவர்களுக்கு
அவர்களின் இடம் உள்ளது … எங்களுக்கு எங்கள் இடம் உள்ளது. ஆனால், முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசியப் பார்வைக்கும், காங்கிரஸின் தேசியப் பார்வைக்கும் இடையேயான சித்தாந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என்று ராகுல் காந்தி கூறினார்.
“இந்தப் போராட்டத்தை மாநிலக் கட்சிகளால் மட்டும் நடத்த முடியாது.
ஏனெனில் இது கருத்தியல் போர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிராக
காங்கிரஸின் சித்தாந்தம் போராடுகிறது என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.
“மேலும், ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம்
என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் அதிக மக்களிடையே ஊடுருவிய ஒரு
கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளும் காங்கிரஸும்
அத்தகைய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு
வாக்களிக்காத 60-70 சதவீத மக்களிடம் நாம் இன்னும் தீவிரமாகச்
செல்ல வேண்டும், அதை நாம் ஒன்றாகச் செய்ய வேண்டும்,” என்றும்
ராகுல் காந்தி கூறினார்.
( இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை அடிப்படையாக கொண்டது …. )
.
……………………………………………………………….
பின்னூட்டம் –
.
இப்போதைய காங்கிரசை எனக்கும்
பிடிக்கவில்லை தான்…
இருந்தாலும் இந்தியாவில் வலுவான
ஒரு எதிர்க்கட்சியின் தேவை
நாளுக்கு நாள் அதிகமாக உணரப்படுகிறது…
அதற்கு காங்கிரசைத் தவிர்த்து வேறு
எந்த கட்சிக்கும் தற்போதைக்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் கட்சியில் தேவைப்படும் மாற்றங்கள்
உருவாகி – ஒரு நல்ல, வலுவான எதிர்க்கட்சியாக
அது உருப்பெற வேண்டும்… இது இன்றைய தினத்தில்
இந்த நாட்டின் கட்டாய தேவை.
இப்போதைய காங்கிரசை எனக்கும்
பிடிக்கவில்லை தான்…
இருந்தாலும் இந்தியாவில் வலுவான
ஒரு எதிர்க்கட்சியின் தேவை
நாளுக்கு நாள் அதிகமாக உணரப்படுகிறது…
அதற்கு காங்கிரசைத் தவிர்த்து வேறு
எந்த கட்சிக்கும் தற்போதைக்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் கட்சியில் தேவைப்படும் மாற்றங்கள்
உருவாகி – ஒரு நல்ல, வலுவான எதிர்க்கட்சியாக
அது உருப்பெற வேண்டும்… இது இன்றைய தினத்தில்
இந்த நாட்டின் கட்டாய தேவை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
.
உண்மை ஐயா. உங்கள் கருத்துக்களை முழுவதும் ஒத்துக்கொள்கிறேன்.
காங்கிரஸுக்கு அதுக்கு வாய்ப்பில்லாததன் காரணம், இந்திராவிலிருந்து தொடங்குகிறது. அவர் காங்கிரஸின் கட்டமைப்பையே சிதைத்துவிட்டார். மோடி என்ற வசீகர முகம் தவிர, அவர்தான் முழுமையான பாஜக என்று அந்தக் கட்சி எப்போதும் இருப்பதில்லை. பலபேர் அதன் தலைமைக்கும், முக்கிய இடங்களுக்கும் வருகிறார்கள். புதிய புதிய இளம் அரசியல்வாதிகளும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கோஷ்டி என்பது எல்லாக் கட்சிகளிலும் உண்டு, பாஜக உட்பட. ஆனால் காங்கிரஸில், தகுதி இல்லாத தலைமை, அந்தத் தலைமைக்கு ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே கட்சியில் இருக்கவேண்டும் என்று மற்றவர்களுக்கு இடம் கொடாமல் செயல்படுவதால், அந்தக் கட்சி வீழ்ச்சியை நோக்கி மட்டும் செல்கிறது. ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தூங்கிக்கொண்டிருந்தார். ஆட்சியை இழந்த பிறகு தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள மட்டும் காங்கிரஸில் இருக்கிறார். தகுதி உள்ளவர்களிடம் காங்கிரஸைக் கொடுப்போம் என்ற எண்ணமும் இல்லை. காங்கிரஸிலும் யாரேனும் ‘தலைவர்’ உருவாகிறார் என்றாலே ராகுலுக்கு உதறலெடுத்து அவர்களை அவமானப்படுத்தி கட்சியை விட்டு வெளியேற்றிவிடுகிறார் (பஞ்சாப், அதற்கு முன் விசுவாசியான மூப்பனார் குழு, மாதவராவ் சிந்தியா…. என்று பெரிய லிஸ்ட்). அவராவது கடுமையாக அரசியல் பணிகளைச் செய்கிறாரா என்றால், பேட்டி கொடுப்பது, பாராளுமன்றத்தில் பேசுவது, உடனே காணாமல்போய்விடுவது என்றிருக்கிறார்.
தமிழகத்தில், பேரறிவாளன் விடுதலையை, கொள்கை அளவில் காங்கிரஸ் மிகக் கடுமையாக எதிர்த்திருக்கவேண்டும் (காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடும், வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், அதுவே) ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ராஜ்ஜிய சபா எம்.பி பதவிக்காக, கட்சியைக் காவு கொடுக்கிறார்கள் அழகிரியும் ப.சிதம்பரமும் மற்ற தலைவர்களும். நாளைக்கு திமுக கழற்றிவிட்டால், டெபாசிட் பெறக்கூட அந்தக் கட்சிக்குத் தகுதி இல்லாத, அடிமை நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. இப்படி இருந்தால் கட்சி வளர்ச்சி பற்றி எப்படி நினைத்துப்பார்க்க முடியும்? அதே நேரத்தில், பாஜக தனித்து நின்றது. தங்கள் கொள்கையில் தைரியமாக இருப்பதும், தேர்தல் சமயத்தில் மட்டும் கூட்டணி என்று செயல்படாமல் ஒட்டுண்ணியாக இருப்பதே கட்சிக்கு நல்லது என்று இருப்பதால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது.
மற்றபடி தேசிய அளவில், பாஜக, காங்கிரஸ் பார்வைகள் வேறு வேறு. நிச்சயம் பாஜகவிற்கான மாற்று தேசியக் கட்சி ஒன்று இருக்கவேண்டும். அதற்கான தகுதி மற்ற கட்சிகளைவிட காங்கிரஸுக்கு அதிகம் உண்டு. காங்கிரஸுக்கான இயற்கையான தலைவர் ஒருவர் உருவாக வேண்டும். காங்கிரஸ் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்தால், இன்னும் ஒரு பத்து ஆண்டுகளுக்குள் ஆம் ஆத்மி அந்த இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம் (அதற்கான மதக் கணக்குகள் உண்டு)