………

……..
ராஜீவ் காந்தி கொலை வழக்கு –
தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த
ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை,
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும்,
வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள்.
இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர்.
ஆனால், இந்த குற்றச் செயலில் –
சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? – இல்லை.
தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட்டனரா…? – இல்லை
தண்டனை அனுபவித்த அனைவரும் உண்மையில்
குற்றம் இழைத்தவர்கள் தானா …? – இல்லை
விசாரணை முழுமையான அளவில் நிகழ்ந்ததா …?
அனைத்து கோணங்களும் பரிசீலிக்கப்பட்டனவா ..? – இல்லை
கிடைத்த அனைத்து ஆதாரங்களும் உரிய
முறையில் பரிசீலிக்கப்பட்டனவா..? – இல்லை
சந்தேகத்திற்குரிய அனைவரும்
உரிய முறையில் விசாரிக்கப்பட்டனரா..? – இல்லை
இதற்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள்
தங்கள் பொறுப்புக்களை முழுமையாக
நிறைவேற்றினவா …? – இல்லை
உரிய தொடர் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டனவா …? – இல்லை
இந்த குற்றச்செயலின் உண்மைப் பின்னணியை
கண்டுபிடிக்க மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ,
ராஜீவின் குடும்பத்தினரோ – முனைப்பு –
– முழு அக்கரை காட்டினரா ….? – இல்லை
– இந்த இத்தனை கேள்விகளுக்கும்
பதில் ஒன்று தான் – இல்லை, இல்லை, இல்லை…..!!!
பின்னர் இதில் நீதி எங்கே..? நியாயம் எங்கே …?
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று,
பலர் தண்டிக்கப்பட்டு – சட்டத்தின் முன் நிறைய சடங்குகள்
நிறைவேற்றப்பட்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும் –
கொலையில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய முக்கியமான சிலர்-
விசாரணை வட்டத்திற்குள்ளேயே கொண்டு வரப்படவிலை –
ராஜீவின் கொலைக்கு காரணமானவர்கள் சிலர் காங்கிரஸ்
கட்சியின் உள்ளேயும் இருந்தார்கள் / இருக்கிறார்கள் –
அவர்கள் பக்கம் சட்டத்தின் பார்வை போகவே இல்லை என்பது
இன்னமும் பலரால் விவாதிக்கப்படும் ஒரு கருத்து.
இத்தகைய ஒரு கருத்து உருவாக அடிப்படையாக
அமைந்த காரணங்கள் எவை …?
குற்றச் சம்பவம் நடந்தபோது மத்திய அரசின் சட்ட அமைச்சராக
இருந்தவர் திருவாளர் சுப்ரமணியன் சுவாமி. அவரது அப்போதைய
நெருங்கிய கூட்டாளி /நண்பர் திருவாளர் சந்திராசாமி.
– இவர்கள் இருவரும் சம்பவம் நடந்த அன்று சென்னையில் இருந்ததாக
வெளிப்படையாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை இவர்கள்
இருவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
அவர்கள் அன்றிரவு சென்னையில் இல்லை என்றால், அவர்களால்
அதை ஏன் நிரூபிக்க முடியவில்லை …?
இருந்தார்கள் என்றால்,
அதற்கான காரணமென்ன என்பதை அவர்கள் ஏன் சொல்ல
மறுக்கிறார்கள். சிறப்பு புலனாய்வு குழுவோ, ஜெயின்
விசாரணைக்குழுவோ – இதை விரிவாக விசாரிக்காதது ஏன் ..?
திருமதி சோனியா காந்தி அவர்களும் இதை வற்புறுத்தாதது ஏன் ..?
ராஜீவ் காந்தியின் மரணத்தின் காரணமாக,
அடுத்தபடியாக பிரதமர் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய
5 ஆண்டுகள் மத்திய அரசை தலைமை தாங்கி நடத்திச்
செல்லும் வாய்ப்பை பெற்றவர் – திருவாளர் நரசிம்மராவ்.
ஜெயின் கமிஷன் கோரிய ஆவணங்கள் கொடுக்கப்படாமல்
இழுத்தடிக்கப்படவும், சில முக்கியமான ஆவணங்கள்
தொலைக்கப்பட அல்லது அழிக்கப்பட காரணமாக இருந்தது –
இவர் தலைமையிலான மத்திய அரசே…
சந்திராசாமியையும் , சுப்ரமணிய சுவாமியையும் பாதுகாக்க
நரசிம்ம ராவ் அரசு மிகத்தீவிரமாக செயல்பட்டது என்று பலரும்
குற்றம் சாட்டுகின்றனர். நரசிம்ம ராவ், அந்த இருவரையும்
பாதுகாக்க முயன்றது ஏன்….?
ராஜீவ் காந்தியின் அகால மரணத்தின் காரணமாக –
நேரு / இந்திரா / ராஜீவ் காந்தியின் அத்தனை குடும்ப
சொத்துக்களுக்கும், இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கும் –
ஏகபோக உரிமையாளர் ஆனவர் திருமதி சோனியா காந்தி.
ராஜீவ் கொலை வழக்கில் – விசாரணை சரியான கோணத்தில்
நடைபெறவில்லை என்பதை அறிந்திருந்தும், அதை சரி செய்யவோ,
விசாரணை வளையத்திற்குள் வராத – சந்தேகத்திற்குரிய பலரை –
உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த உரிய அக்கரையோ
காட்டாமல் இருந்தார் அவர்.
உண்மையில் இவர்கள் எல்லாருடைய நடவடிக்கைகளுமே –
விசாரணை சரியான முறையில், சரியான கோணத்தில் –
செல்லாமல் இருப்பதே நல்லது என்பது போல் தான் அமைந்திருந்தன.
பல சந்தேகங்கள் தெளியாமலே இருப்பதை –
வேண்டுமென்றே குட்டை குழப்பப்படுவதை – இவர்கள் தெரிந்தே
அனுமதித்திருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைத்தும் இருக்கிறார்கள்.
புலன் விசாரணை அமைப்பு ஒரே ஒரு கோணத்தில் மட்டுமே தன்
பார்வையை செலுத்தி இருக்கிறது. கொலைக்கு காரணம் –
விடுதலைப்புலிகள் என்பதைத் தாண்டி,
பின்னணியில் மற்ற சிலரும் இருக்கலாம்
என்கிற கோணத்தை கடைசி வரை ஏற்கவே இல்லை.
ராஜீவ் மரணமடைந்தது 21 மே,1991 அன்று.
சிபிஐ குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது –
20 மே, 1992 அன்று.
கிட்டத்தட்ட ஒரு வருட புலனாய்வுக்குப் பிறகு,
சிபிஐ, மொத்தம் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்திருந்தது. கீழ் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட 26 பேரில் –
19 பேர்கள் சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அவர்கள் குற்றம் செய்யாமலே
சிறையில் தண்டனை அனுபவித்ததாக ஆகிறது.
மீதி 7 பேர் – அநேகமாக அவர்கள் எஸ்.ஐ.டி.யின் வசம்
இருந்தபோது கொடுத்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்களின்
அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கைப் பற்றி இதுவரை பல பேர்,
பல புத்தகங்கள் எழுதி, வெளி வந்து விட்டன. அவற்றிலிருந்து
இன்னும் சில காரணங்கள் –
சம்பவம் நிகழ்ந்த அந்த கூட்டத்தில் டெரில் பீட்டர் என்கிற
பிஸினஸ்மேன் ஒருவரும் வெடிவிபத்தில் சிக்கி இறந்து
போனார். அவர் மே 30தேதி அமெரிக்கா போவதற்காக அவரது
பெயரில் விமான டிக்கெட் எடுக்கப்பட்டிருந்தது.
அந்த ஆள் உண்மையில் எப்படி, ஏன் அங்கு வந்தார் ?
ஸ்ரீபெரும்புதூருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ….?
அவரது மனைவி மத்திய பொதுப்பணித் துறையில்
பணி புரிந்து கொண்டிருந்தார். இந்த சம்பவத்திற்குப்
பிறகு அவர் அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டதாகத்
தெரிகிறது. இந்த சம்பவத்தில் அவர் எந்த அளவிற்கு,
எப்படி சம்பந்தப்பட்டிருந்தார் ?
ஐபி டைரக்டர் எம்.கே.நாராயணன் அந்த நிகழ்ச்சியின்
போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தம்மிடம் இருப்பதாக
கேபினட் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்று ஆவணங்களில்
இருக்கிறது. ஆனால் – இந்த வீடியோ – ஆவணமாக கோர்ட்டில்
சேர்க்கப்படவில்லை. பின்னர், ஜெயின் கமிஷன் கேட்டும் கூட
அது கொடுக்கப்படவில்லை.
எஸ் ஐ டி கஸ்டடியில் இருந்தபோது, தப்பி ஓடியதாக
சொல்லப்பட்ட மிராசுதார் ஷண்முகம் மர்மமான முறையில்
இறந்தார். அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை.
சிவராஜனின் டைரிகளில் ஒன்றில் – சிவராஜன்
போபாலுக்கு (மத்திய பிரதேசம்) சென்றதும்,
TAGக்கு ஒரு கோடியே எழுபத்திஆறு லட்சம் ரூபாய்
கொடுத்ததும் 13 மார்ச் 1991 தேதியிட்டு எழுதப்பட்டு
உள்ளது. இநத TAG யார் என்றும் எதற்காக இந்த
பணப்பரிமாற்றம் நடந்தது என்பதும் கண்டு பிடிக்கப்படவே இல்லை.
மரகதம் சந்திரசேகரின் மகன் லலித் சந்திரசேகருக்கு
ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்காக,
தான் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக சிவராஜன்
தன் டைரியில் எழுதி வைத்துள்ளார். இந்த தகவலை,
திரு ரகோத்தமன் (ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த
முக்கிய சிபிஐ விசாரணை அதிகாரி) அண்மையில்
வெளியிடப்பட்ட தன் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
ஆனால், கொலை வழக்கு விசாரணை நடந்தபோது,
கோர்ட்டில் இந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
சிவராஜனின் டைரியும் ஆவணமாக
ஒப்படைக்கப்படவில்லை !
சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததன்
பின்னணி பற்றி, தொடர்ந்து விசாரிக்கப்படவே இல்லை…!!
இத்தனைக்கும் லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு
இலங்கைத் தமிழர் வேறு !
சிவராஜனின் டைரியில் ராஜீவ் காந்தி –
விசாகப்பட்டினத்திலிருந்து கிளம்பும் நேரமும்,
சென்னை வந்து சேரும் நேரமும் குறித்து
வைக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், விசாகப்பட்டினத்தில் ராஜீவ் விமானம்
யந்திரக் கோளாறு காரணமாக புறப்படத் தாமதம்
ஆன விஷயம் கூட சென்னையில் இருந்த சிவராஜனுக்கு
யாராலோ தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் இயங்கிக் கொண்டிருந்த இந்த நபர் யார்
என்பது கடைசி வரை கண்டறியப்படவே இல்லை…
சிவராஜன் குழுவினர் அத்தனை பேரையும் உயிருடன்
பிடித்திருக்க வாய்ப்புகள் இருந்தும், அதற்கான உரிய
முயற்சிகள் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இவர்களை வளைக்க எஸ்.ஐ.டி. 4 நாட்கள் எடுத்துக் கொண்டது.
விளைவு – யாரும் உயிருடன் சிக்கவில்லை.
இதில் சுப்ரமணியன் சுவாமியே கிளப்பும் ஒரு கேள்வி தான்
விசித்திரமானது…. நீண்ட நாட்கள் கழித்து புலன் விசாரணை குறித்து
சில கேள்விகளை எழுப்பும் அவர்,
ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடிப்பில் இறந்த தனு
போன்றோரின் உடல்களை நீண்ட நாட்கள் பாதுகாத்து வந்த
விசாரணைக்குழு, சிவராசன் உடலை மட்டும் தாமதமின்றி தகனம்
செய்ய அனுமதித்தது ஏன் ? எதை மறைக்க ..?
– என்று திருவாளர் சு.சு.வே கேட்கிறார் ..!!!
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹரிபாபுவின்
காமிராவை போலீஸ் கைப்பற்றி இருந்தது. அதிலிருந்த
பிலிம் சுருளை 5 மணி நேரத்திற்குள்ளாக ப்ராசஸ்
செய்து புகைப்படங்களை எடுத்திருக்கலாம்.
குற்றவாளிகளின் புகைப்படங்கள் கிடைத்து, தேடுதலையும் உடனே
துவக்கி இருக்கலாம். அது நடக்கவில்லை.
ஆனால் – இந்த புகைப்படங்கள் 25ந்தேதி திடீரென்று
“இந்து” பத்திரிகையில் வெளிவந்தன. போலீஸ் வசம்
இருந்த பிலிம் சுருளின் புகைப்படங்கள் இந்து பத்திரிகைக்கு
கிடைத்தது எப்படி ? இதன் விவரங்கள் வெளியாகவில்லை…!
————–
வழக்கு நடந்து, பல பேர் தண்டிக்கப்பட்டு பல வருடங்கள்
கடந்த பின்னர், மெதுவாக – திருவாளர் சுப்ரமணியன் சுவாமி
அவர்கள் ஒரு செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கும்போது –
“ராஜீவ் உயிரோடு இருந்திருந்தால், சோனியா காந்தி
அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? ராஜீவ் குடும்பத்தின்
பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இன்றைக்கு
யாரிடம் இருக்கிறது? கூட்டிக் கழித்துப் பாருங்கள், புரியும்.
நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவரும் விஷயம்,
‘ராஜீவ் கொலை பற்றிய நிஜமான மர்மங்கள் சோனியா காந்தி
குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும்’ என்பதுதான்”
– என்று சாடைமாடையாகக் கூட இல்லை – நேரிடையாகவே
குற்றம் சாட்டுகிறார் சுப்ரமணியன் சுவாமி.
நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது என்று செய்தியாளர்
கேட்கும்போது –
”நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவரும் இந்தக்
குற்றச்சாட்டுக்களை இதுநாள் வரையில் சோனியா
குடும்பத்தினர் மறுக்கவில்லையே?” – என்கிறார் சு.சுவாமி…!
இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது
என்ன தெரிய வருகிறது…??
இந்திய அரசியலில் -பொது வாழ்க்கையில் – ஈடுபட்டிருக்கும்
பிரபலமான மனிதர்கள் சம்பந்தப்பட்ட பல ரகசியங்களைத்
தெரிந்து வைத்துக் கொண்டு –
ஆட்டம் போடுகிறார்,
சவால் விடுகிறார்,
சந்திக்கு இழுக்கிறார் –
அவமானப்படுத்துகிறார் –
இவர் சொல்வதில் எது பொய்….? எது நிஜம்…?
எந்த அளவிற்கு நிஜம் …?
எந்த அளவிற்கு இவர் சொல்வதை நம்பலாம் …?
யார் சொல்ல முடியும் …?
சம்பந்தப்பட்டவர்கள், வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள்.
கண்டும் காணாதவர் போல் இருக்கிறார்கள்.
ஒன்று – இவர் சொல்வது நிஜமாக இருக்க வேண்டும்…!
அல்லது – அவர்கள் சம்பந்தப்பட்ட வேறு ரகசியங்கள்
இவரிடம் சிக்கி இருப்பதால், இவருக்கு பதில் கூற
முடியாத நிலையில் அவர்கள் இருக்க வேண்டும்…..
சரி – இவர் செய்த குற்றங்கள் …?
புத்திசாலி – மகா புத்திசாலி…!!
மாட்டிக்கொள்ளும் வகையில் எதையும் செய்வதில்லை.
தப்பித்தவறி சிக்கினாலும்,
கைவசம் இருக்கும் பலரது ரகசியங்கள் கை கொடுக்கின்றன…!!
இந்த தொடர் இடுகையில் வரும் சில பாத்திரங்கள்
பாவங்கள் பலவற்றையும் செய்தவர்கள் –
ஆனால் எதிலும் சிக்க மாட்டார்கள் –
அவர்களைத் திருத்தவோ, தண்டிக்கவோ –
சாதாரண மனிதர்களால் முடியாது –
சட்டங்களாலும் முடியாது –
எல்லாவற்றிற்கும் அப்பால் இருப்பவர்கள் அவர்கள்….
இறைவனோ – இயற்கையோ …..
மட்டுமே செய்யக்கூடிய காரியம் அது….
இத்தகைய மனிதர்களின் ஆட்டங்களுக்கு இடையில் சிக்கி –
பரிதாபத்திற்குரிய நிலையில் பரிதவித்துக்
கொண்டிருக்கின்றனவே பாவப்பட்ட சில ஜென்மங்கள் …
அவர்களை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது…
யார் அவர்கள் ….?
முதலில் – கொலை வழக்கில் சிக்கிய சில அப்பாவிகள்,
பின்னர் – ஈழத்தமிழர்கள்…
இப்போது – தமிழக மீனவர்கள்….
……………………………………………..
பின் குறிப்பு –
முடிந்த வரை எதையும் ஆதாரபூர்வமாக
எழுத வேண்டும் என்கிற எண்ணத்தில்-
நிறைய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு,
இந்த இடுகைத் தொடரை எழுதி இருக்கிறேன்.
நல்லவர் போல், வல்லவர் போல் சமுதாயத்தில்
தோற்றமளிக்கும் பலர் உண்மையில் அப்படியல்ல –
எல்லா பாவங்களையும் செய்தவர்கள்,
செய்யத் துணிந்தவர்கள் –
என்பதை இந்த இடுகைத் தொடரை படிக்கும்
ஒரு சிலராவது உணர்ந்தால் –
அது கூட எனக்கு திருப்தி அளிக்கும்.
.
…………………………………………………………….
( இந்த இடுகைத் தொடரின்
முந்தைய பகுதிகளைக் காண
விரும்புபவர்களுக்கான லிங்க் –
சாமிகளின் சாகசங்கள் – Part 1
சாமிகளின் சாகசங்கள் – Part 2
சாமிகளின் சாகசங்கள் – Part 3
சாமிகளின் சாகசங்கள் – Part 4
சாமிகளின் சாகசங்கள் – Part 5
சாமிகளின் சாகசங்கள் – Part 5-Annexure
சாமிகளின் சாகசங்கள் – Part 6
சாமிகளின் சாகசங்கள் – Part 7
சாமிகளின் சாகசங்கள் – Part 8
சாமிகளின் சாகசங்கள் – Part 9
சாமிகளின் சாகசங்கள் – Part 10
சாமிகளின் சாகசங்கள் – Part 11
……………………………………….
இந்த இடுகை தான் இந்த தொடரின் 12-வதும்,
கடைசியுமான இடுகையாகும்.
.
………………………………………………………………
//எஸ் ஐ டி கஸ்டடியில் இருந்தபோது, தப்பி ஓடியதாக சொல்லப்பட்ட மிராசுதார் ஷண்முகம் மர்மமான முறையில் இறந்தார். அதற்கான காரணங்கள் இன்னும் வெளி வரவில்லை// – இது மட்டும் தலைப்புக்கு அல்லது ராஜீவ் கொலைக்குச் சம்பந்தமில்லாதது. பொதுவாக மாஃபியா படங்கள் பார்க்கும் வழக்கமுள்ளவர்களுக்கு இது (சண்முகம் மாதிரியான தற்கொலைகள்) எப்படி நடக்கிறது என்பது புரியும் (ஆ.ராசா வழக்கு சம்பந்தமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்)
அந்த நிகழ்ச்சிக்குச் சில வாரங்களுக்குப் பிறகு வேதாரண்யம் பகுதியில் சில நாட்கள் ஆபீஸ் விஷயமாகத் தங்கியிருந்தேன் (பல இடங்களையும் பார்த்தேன்). அங்க இருந்த டாக்டர்கள் மற்றவர்கள் சொன்னது, வி.புலிகள் காயம் பட்டவங்க இங்க வருவாங்க, மருந்து போட்டுக்குவாங்க, நிறைய பணம் தருவாங்க… அவங்க ஆயுதங்களைக் கொண்டுவந்து இங்க கடற்கரைல புதைப்பாங்க, தேவையானபோது எடுத்துக்கொண்டு போவாங்க..அவங்க வரதால நிறைய பிஸினஸ் இந்தப் பகுதியில். எதுக்கு அவங்களுக்குத் தடை போடணும்? என்றெல்லாம் பேசுவாங்க. இந்த பண வரவை justify பண்ண, அவங்களும் தமிழர்கள்தானே என்று காரணம் கற்பித்துக்கொள்வார்கள்.
//முதலில் – கொலை வழக்கில் சிக்கிய சில அப்பாவிகள்,
பின்னர் – ஈழத்தமிழர்கள்…
இப்போது – தமிழக மீனவர்கள்….//
அப்பாவிகள் என்ற லேபிளை நாம் போகிற போக்கில் கொடுத்துவிடமுடியாது. மாடியிலிருந்து நீங்கள் சும்மா உயரே ஒருவர் எறியும் கல் இன்னொருவர் தலையில் விழுந்து அவர் இறந்தால், கல் எறிபவர் அப்பாவியாகிவிட முடியாது. இல்லை, இன்னொருவனுக்கு விஷம் மருந்துக்கடையில் ஒருவர் வாங்கிக்கொடுத்துவிட்டு, அவன், இன்னொருவனை அதை உபயோகித்துக் கொன்றால், அதற்கும் எனக்கு சம்பந்தமில்லை என்றும் தப்பித்துவிட முடியாது. நாம் நீதிமன்றத்தை மட்டுமே நம்பவேண்டும். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு இவர்கள் அனைவரும் குற்றவாளிகள், இவர்கள் தெரிந்தே இந்தச் செயல்களைச் செய்திருக்கிறார்கள் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
ஒரு action will create chain of reactions. இதைத் தவிர்க்கமுடியாது.
1. இந்திரா, இந்தியாவிற்காக, இலங்கையில் பிரச்சனை இருக்கும் வகையில் வி.புலிகளை வளர்த்துவிட்டார். இந்தியாவின் நலனுக்கு எதிராக கச்சத்தீவையும் நம் உரிமையையும் தாரைவார்த்தார். (இதற்கு பின்னணிக் காரணங்கள் வேறு இருக்கலாம் நமக்குத் தெரியாது)
2. வி. புலிகள் தமிழக அரசியலில் கலந்தனர் அதனால் பிரச்சனைகள் நமக்கு வ்ந்தன. ‘தமிழர்கள்’ என்ற லேபிளில், அவர்களது பயங்கரவாதச் செயலை தமிழகத்தில் செய்ய அனுமதித்தோம்.
3. நல்ல பெயர் எடுக்க, அரைகுறையாக, அடுத்தவன் பெண்டாட்டிக்குச் சேலை கட்டிவிடுகிறேன் என்று IPKFஐ அனுப்பி தேவையில்லாத பிரச்சனையில் ராஜீவ் சிக்கினார். (கணவன் மனைவி பிரச்சனையில் மூன்றாமர் சமரசம் செய்ய முனைந்தால், இருவருமே இந்த மூன்றாமவரை வெறுப்பர் என்பது பால பாடம்) எப்போதும் இராணுவம், போலீஸ், சரியான control இல்லையென்றால், தங்கள் திறமைக்குறைவினால் அப்பாவிகளைத் துன்புறுத்துவது நடக்கத்தான் செய்யும். நமக்கே அந்த அனுபவம் உண்டு (வீரப்பனைப் பிடிக்க ஏற்பட்ட காவல் ஃபோர்ஸ், அப்பாவிகள் பலரைத் துன்புறுத்தியது என்பதைப் படித்திருக்கிறோம். IPKF மேல் இருந்த குற்றச்சாட்டுகள், வீரப்பன் விஷயத்தில் போலீஸ் மேல் இருந்தது என்பதையும் நாம் படித்திருக்கிறோம். ராஜீவ் அரசு, பிரபாகரனை கிட்டத்தட்ட சிறை வைத்து-தில்லியில், ஒரு ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளவைக்க முயற்சித்தது. இதனால், ராஜீவ் எப்போதுமே தங்களுக்கானவர்கள் இல்லை என்பதை வி.புலிகள் புரிந்துகொண்டனர். வி.புலிகள் நடுநிலையான எந்தத் தீர்வுக்கும் தயாராக இல்லை. அவர்கள், தங்களுக்கான நிலத்தை, பிரபாகரன் தனக்குத் தந்துவிடவேண்டும் என்று விரும்பினார். அதனால் அடுத்து ராஜீவ் பிரதமராகக்கூடும், அது தங்களுடைய நிலைக்கு நல்லதல்ல என்று புரிந்து அவரை eliminate செய்தனர் வி.புலிகள்.
4. தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று வி.புலிகள் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவர்கள் தங்கள் செயல் எப்படி backfire ஆகும் என்று முன்னமே analyse செய்யவில்லை. கார்த்திகேயன் team did a fantastic job to nab the network.
5. நரசிம்மராவ் அரசு பெரிதாக எதையும் செய்யவில்லை (இந்த விஷயத்தில்). அதனால் தனக்கு வாய்ப்பு வந்தபோது, சோனியா, இந்தியாவின் மூலம் முழுமையாக வி.புலிகளை அழிக்கத் துணைபோனார். மத்திய அரசில் பதவி சுகம் வகித்த திமுகவும் அந்தச் செயலுக்குத் துணைபோனது (as they didn’t have a choice, as they wanted to enjoy powers and money in the centre). இலங்கை, இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு இனத்தையே அழித்துவிட்டது (மீண்டும் இன்னொரு பிரபாகரன் வந்துவிடக்கூடாது என்று). அதற்காக அவர்களும் நன்கு முயன்று எட்டப்பன்களை உருவாக்கி இதனைச் சாதித்தார்கள்.
இந்த broad sketch தவிர, மற்றவை எல்லாமே pawns. ஏன் என்ற கேள்வி, நிறைய விஷயங்களில் கேட்கமுடியும், கருணாநிதி தன் அரசியல் கூட்டத்தை ரத்து செய்தது உட்பட. (ஏன் சோனியா செல்லவில்லை, ஏன் ஒரு காங்கிரஸ் தலைவரும் ராஜீவ்கூட அப்போது இல்லை, ஏன் நரசிம்மராவ் யாரையும் விசாரிக்கவில்லை……. என்று பலப் பல கேள்விகள்) எதற்குமே விடை கிடைக்காது.
இந்திரா ஈழப் போராளிகளைக் கண்டுகொள்ளாமல், இது அடுத்த நாட்டின் பிரச்சனை என்று விட்டிருந்தால்? தமிழகத்தில் ஈழப்போராளிகள் வந்தபோதே உடனே அரசு அவர்களைச் சிறையில் வைத்து நாடு கடத்தியிருந்தால்? வி.புலிகள் தமிழகத்தில் குற்றச் செயலில் ஈடுபட்டபோதே அவர்களைக் கைது செய்திருந்தால்?. வி.புலிகள் இலங்கை அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதால், தங்கள் ஆதரவு கிடையாது என்று ராஜீவ் சொல்லி, இலங்கைப் பிரச்சனையை அவர்கள்தாம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லி வாளா இருந்திருந்தால்……………… என்று கேள்விகள் பலவற்றை எழுப்பமுடியும். இவை எது நடந்திருந்தாலும், ஈழத் தமிழர்கள் பிழைத்திருப்பர்.
.
புதியவன்,
யாருக்காக நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு,
வக்காலத்து வாங்குகிறீர்கள்….
திருவாளர் சுப்ரமணியன் சுவாமிக்காகவா…?
மேலும், பேரறிவாளன் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு
ஆத்திரம்….?
அவரென்ன … கோபால் கோட்சே’யைப் போல் –
(In an interview with Rediff.com
in 1998, Gopal reiterated that
he never regretted Gandhi’s killing…)
” என் செயலுக்கு நான் வருந்தவில்லை ” என்றா
சொன்னார்…?
காந்தியை கொன்றவரை மன்னித்து விடுவீர்கள்…
ஆனால், ராஜீவ் காந்தியின் வழக்கில் அறிந்தோ, அறியாமலோ
சம்பந்தப்பட்டவரை 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும்
மன்னிக்கக் கூடாதா….?
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//காந்தியை கொன்றவரை மன்னித்து விடுவீர்கள்…
ஆனால், ராஜீவ் காந்தியின் வழக்கில் அறிந்தோ, அறியாமலோ
சம்பந்தப்பட்டவரை 31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகும்
மன்னிக்கக் கூடாதா….?//
Who am I to pardon somebody. ராஜீவ் காந்தியை ரத்தமும் சதையுமாகப் பார்த்திருப்பதாலும், காங்கிரஸ் அனுதாபியாக அப்போதுவரை இருந்தேன் என்பதாலும், அந்தச் சம்பவம் மறக்க இயலவில்லை. மற்றபடி மஹாத்மா பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கில்லை. கோபால் கோட்சேவின் இண்டர்வியூவையும் சில வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். பொதுவா, நமக்கு, நம் பையன் நம் செவிட்டில் அடித்தால் அப்போது கோபம் வந்தாலும், பிறகு மறந்துவிடுவோம் மன்னித்துவிடுவோம், ஆனால் வெளிவீட்டுப் பையன் அதே தவறைச் செய்தால் கடைசி வரை மறக்க மாட்டோம் இல்லையா? அப்படித்தான் இரண்டு நிகழ்வுகளையும் பார்க்கணும். மற்றபடி தனிப்பட்ட முறையில், எந்தக் குற்றவாளியின் கதையையும் ரொம்பவே கேட்டால், நாம் அனுதாபப்பட ஆரம்பித்துவிடுவோம். ஒவ்வொருவர் பக்கமும் ஒவ்வொரு நியாயம் இருக்கும்.
புதியவன்,
” மஹாத்மா பற்றி பெரிய அபிப்ராயம் எனக்கில்லை …”
எனக்குத் தெரிந்து – இந்தியாவில் காந்தியை
மதிக்காதவர்கள் – பிடிக்காதவர்கள் –
ஆர்.எஸ்,எஸ். காரர்கள் மட்டுமே….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
/சிவராஜன் லலித்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததன்
பின்னணி பற்றி, தொடர்ந்து விசாரிக்கப்படவே இல்லை…!!
இத்தனைக்கும் லலித் சந்திரசேகரின் மனைவி ஒரு
இலங்கைத் தமிழர் வேறு !/
மனித வெடிகுண்டை ராஜீவ் அருகில் கொண்டு செல்ல அளிக்க பட்ட லஞ்சம்தான்
அந்த ஐந்து லக்ஷ ரூபாய்கள். காங்கிரஸ்க்காரர்கள் அன்று செய்த குளறுபடிக்கள்
புலிகளுக்கு உதவின. திட்டம் தீட்டியது ஒரு கும்பல் . EXECUTE செய்தது
விடுதலைபுலிகள்.