………………….

…………….
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த பரபரப்பான தீர்ப்பை
தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக- வைத் தவிர்த்து மற்ற அனைத்து
கட்சிகளும் வரவேற்றிருக்கிறார்கள்….
இந்த தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை
விடுதலை செய்கிறது என்பதை ஒரு பக்கம் தனியே ஒதுக்கி வைத்துவிட்டு
வேறு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை
கொஞ்சம் யோசிக்க வேண்டும் …
அழுத்தந்திருத்தமாக எழுதப்பட்டு தேவைப்படும் சமயங்களில் எல்லாம்
தகுந்த திருத்தங்களையும் உள்ளடக்கிய பிறகும் நமது இந்திய அரசியல் சட்டம்
எந்தெந்த விதங்களில் எல்லாம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது
என்பதை பார்க்கும்போது நமது அரசியல்வாதிகளின் சுயநலம் வெளிச்சம்
போட்டு காட்டப்படுகிறது….
தெளிவான ஒரு அரசியல் சட்டம் இருக்கும்போதே – இந்த கதி என்றால்,
பிரிட்டனைப் போன்று எழுதப்பட்ட அரசியல் சட்டமே இல்லாத
ஒரு நாடாக இந்தியா இருந்திருந்தால் – இந்த அரசியல்வாதிகள் நம்மை
எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கவே
அச்சமாக இருக்கிறது….
பேரறிவாளன் மற்றும் இதர 6 பேர்களின் விடுதலைக்கு உண்மையில்
அஸ்திவாரம் போட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள்
என்பதையும்,
2014-ல் வெளிவந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து அவர் எடுத்த
துணிச்சலான நடவடிக்கைகளையும், அதையொட்டி அந்நாள் பிரதமர்
மன்மோகன் சிங் அவர்களுக்கு கெடு விதித்து – ஜெயலலிதா எழுதிய
கடிதத்தையும் –
இன்றைய ஆளும் கட்சியினர் (அன்றைய ம.மோ.சிங் அரசின் பார்ட்னர் )
எழுப்பும் வெற்றிக் கூச்சல்களில் –
செய்தியாளர்கள் மறந்து விடுவார்களோ என்று நினைத்து,
நான் கொஞ்சம் விவரமாக எழுத நினைத்த நேரத்தில் –
மூத்த செய்தியாளர் மணி அவர்கள் தந்திருக்கும் ஒரு பேட்டியை
பார்த்தேன்…. அதன் பிறகு நான் தனியே ஒரு இடுகை எழுத வேண்டிய
அவசியம் இல்லை என்று நினைத்து அந்த பேட்டியை கீழே பதிந்திருக்கிறேன்..
மணி அவர்கள் கிட்டத்தட்ட இதுகுறித்த அனைத்து பழைய செய்திகளையும்
தவறாமல் தந்திருக்கிறார்.
அவசியம் பார்க்க வேண்டிய ஒரு பேட்டி கீழே –
…………..
.
……………………………………………………………….
தண்டனை முடிந்த பிறகு தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்க வேண்டியதை ஒரு சரித்திர நிகழ்வாக மாற்றியது காங்கிரஸ் மற்றும் பிஜேபி அவற்றின் தோல்வி. அவர்களுக்கு சட்டத்தின் மீது இல்லாத நம்பிக்கையின் வெளிப்பாடு.