மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழலை தரும் ஆச்சரியம் ….. !!!

……

……………..

மிசோரம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தாலும் கூட நம்மில் பெரும்பாலோருக்கு அதை பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் தெரியாது.…… எனவே,
முதலில் மிசோரம் குறித்த சில வித்தியாசமான தகவல்கள்…..

மிசோரம் -இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று.
இந்தியாவின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்.

மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

  • இதில் சுமார் 91% காடுகள்…

மொத்த மக்கள் தொகை சுமார் 11 லட்சம் மட்டுமே..
மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
52 வீதம் மக்கள் மட்டுமே….

ஆட்சி மொழி – ஆங்கிலம், மற்றும் மிசோ மொழிகள் ….!!!

கல்வியறிவு விகிதம் 91.33%… கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக
கல்வியறிவு உள்ள மாநிலம் இது.

இம்மாநிலத்தில் – கிறித்தவ மக்கள் தொகை 956,331 – (87.16 %)
இந்து மக்கள் தொகை 30,136 – (2.75 %)
பௌத்த மக்கள் தொகை 93,411 – (8.51 %)
இஸ்லாமிய மக்கள் தொகை 14,832 – (1.35 %)

இதை – திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள்
சூழ்ந்துள்ளன. இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய
நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது.

இனி ஒரு மழலை தரும் ஆச்சரியம் –

……………………………

.
………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழலை தரும் ஆச்சரியம் ….. !!!

  1. புதியவன் சொல்கிறார்:

    நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தீர்ப்பு வந்துவிட்டது. பாவம் காங்கிரஸ்… ஆப்படித்த குரங்கு போல, எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாமல், வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு இருக்கவேண்டிய நிலைமை. இந்த விடுதலையை எல்லாக் கட்சிகளும் தங்களின் சாதனையாகப் பார்க்கிறார்கள். நல்லவேளை ராஜீவ் காந்தி வந்து, தன்னால்தான் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டான் என்று சொல்லவில்லை, மத்த எல்லாரும் சொல்லியாகிவிட்டது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் –
      காங்கிரசை குறைத்து மதிப்பிட்டு விட்டீர்கள் –

      ——————–
      தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி –

      காங்கிரஸ் கட்சியினர் நாளை காலை 10 மணி
      முதல் 11 மணி வரை – அவரவர் பகுதியில் முக்கியமான
      இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்
      கொண்டு அறப்போராட்டம் நடத்த வேண்டும்….

      Read more at: https://tamil.oneindia.com/news/chennai/congress-cadres-will-hold-a-white-flag-protest-tomorrow-from-10-am-to-11-am/articlecontent-pf693869-458777.html

      .

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    .திரு.ஸ்டாலினை / திமுக-வை ….. தாக்குகிறார் தமிழக
    காங்கிரஸ் கமிட்டி தலைவர்
    கே.எஸ்.அழகிரி …..!!!

    ” பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக
    சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக
    விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள்.
    அவர்களை விடுதலை செய்யவேண்டுமென்கிற
    குரல் ஏன் எழவில்லை ?

    அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ?ராஜிவை
    கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ?

    தமிழ் உணர்வு உள்ளவர்கள்
    இதற்கு பதிலளிக்க வேண்டும்.

    Read more at: https://tamil.oneindia.com/news/chennai/congress-cadres-will-hold-a-white-flag-protest-tomorrow-from-10-am-to-11-am/articlecontent-pf693876-458777.html

    .

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


    .

    நான் இந்த தீர்ப்பை
    வரவேற்கிறேன்… பல காரணங்களுக்காக …. !!!
    நேரம் வரும்போது விவரமாக எழுதுகிறேன்.

    • புதியவன் சொல்கிறார்:

      நான் இந்தத் தீர்ப்பை வரவேற்கவில்லை. நாட்டுக்கு எதிரான குற்றத்திற்கு டெக்னிகல் காரணங்களைக் காட்டி விடுதலை செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றே நினைக்கிறேன். ராஜீவ் காந்தியுடன் இறந்த மற்றவர்கள், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட காவலர்கள் போன்றவர்களை நினைத்துப்பார்க்கவேண்டாமா? விடுதலையை ஆதரிப்பவர்களின் மனதில் (தமிழர்கள் என்ற லேபிளில்) உள்ளூடாக இருப்பது இந்திய தேச எதிர்ப்பு என்றே நான் அவதானிக்கிறேன். சில தினங்களுக்கு முன் இந்திரா மெமோரியலில் (அவரது வீட்டில்) ராஜீவ் காந்தியின் இறந்தபோது சிதைந்திருந்த பைஜாமா, ஷூ, சாக்ஸ் போன்றவற்றையும் காட்சியகப்படுத்தியிருந்ததைப் பார்த்த நினைவு வருகிறது. நல்ல மனதும், நோக்கத்தில் பழுதில்லாதவருமான ராஜீவ் காந்தியையும், இந்தப் பிரச்சனைகளுக்கு ஆணிவேராக அமைந்த இந்திராகாந்தியின் ‘விடுதலைப் புலிகளுக்கு டிரெயினிங்’ கொடுத்து வளர்த்துவிட்ட போக்கையும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.

      பலர் சொல்வது, அவரை விசாரித்தார்களா, இவரை விசாரித்தார்களா என்று. இதற்கெல்லாம் பதில் சொல்லுவது கடினம். நம் நீதிமன்றங்கள் தீர ஆராய்ந்து கடைசியில் முடிவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தீர்ப்பில் குற்றவாளிகள் என்று சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் கிடையாது என்றே நான் நம்புகிறேன்.

      கரைந்துகொண்டிருக்கும் காங்கிரஸுக்கு தமிழகத்தில் கிடைக்கும் சில சீட்டுகள் முக்கியம் என்பதால், காங்கிரஸ் இதில் மௌனம் சாதிக்க வேண்டிய நிலைமை. காங்கிரஸில் இருந்த ஆண் மகன் வாழப்பாடியை நினைத்துப்பார்க்கிறேன்.

  4. Tamil சொல்கிறார்:

    பேரறிவாளனின் விடுதலையை ஆதரிக்கிறேன் மேலும் மற்ற ஆறு பேரின் உடைய விடுதலையையும் எதிர்பார்க்கிறேன்.

    காரணம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்ட பிறகு அவர்களை சிறையில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

    அதைச் செய்த அரசுகளும் நீதிமன்றங்களும் தங்கள் கடமையிலிருந்து தவறியது கண்டனத்துக்குரியது.

    இவர்களைப் போல் பல்லாயிரம் பேர் சிறைகளில் செய்த குற்றங்களுக்கு அதிகமான தண்டனையையும் செய்யாத குற்றங்களுக்கு அளவில்லாத தண்டனையையும் அனுபவித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு தெரியுமா சிறையில் இல்லாமல் பொதுவெளியில் இருப்பது அதைவிட இந்த நாட்டில் கொடுமையானது என்று எனவே சட்டத்திற்கு புறம்பாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க அரசுகளும் நீதிமன்றங்களும் முன்வர வேண்டும் என்ற கனவு தான் நம்மால் காண முடியும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.