………

……………
ஆச்சரியமான – ஆனால் நல்லதொரு ஒரு திருப்பம்.
கொஞ்சம் வித்தியாசமான செய்தி இங்கே –
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை
தி.நகரில் நடைபெற்றது. வழக்கமாக கலந்துகொள்ளும் பல தமிழகத் தலைவர்கள், பாஜகவை இந்த கூட்டத்திற்கு அழைத்ததை எதிர்த்து, இந்த கூட்டத்தை புறக்கணித்தார்கள்.
ஆனாலும் கூட, கொள்கையில் மாறுபட்ட வித்தியாசமான தலைவர்களை
இங்கே ஒரே மேடையில் பார்க்க முடிம்தது……
பழ.நெடுமாறன்,
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,
பா.ம.க வழக்கறிஞர் பாலு,
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம்,
திருச்சி வேலுச்சாமி,
கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு
மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பழ.நெடுமாறன்
இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார்.
பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக – ஒரு பிம்பம்
கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு காலசக்கரத்தை மாற்றியமைக்கும்
ஒரு சக்தி கிடைத்தால் 2008-ம் ஆண்டு மோடியைப் பிரதமராக
மாற்றியிருப்பேன்.
ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால்
போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது. இலங்கை பிரச்சினைக்குத்
தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது
யாழ்ப்பாணக் கலாசார மையத்தை பிரதமர் மோடிதான் கட்டிக்
கொடுத்துள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மோடி சரியான
வகையில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில்
இந்தியா எடுத்த முடிவு மிகவும் தவறானது. தனி ஈழம் உருவாக்கப்பட்டால்
உலகத்தில் மிகச் சிறிய நாடாக அது தான் இருக்கும். இதுவரை
இலங்கைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா நிதியுதவி
செய்துள்ளது.
கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய மீனவர்கள் படகுகளை விடுவிக்கக்
கூடாது எனப் பேசுபவர்கள் அங்கிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்கள்தான்.
கச்சத்தீவு ஒப்பந்தம் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எனக்
குறிப்பிட்டாலும், கச்சத்தீவைச் சுற்றி இருக்கக்கூடிய இடங்களில்
மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு உரிமை இருந்தது.
அது பிரிவு 6 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவசர நிலை காலகட்டத்தில்
யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அந்த பிரிவு 6-ஐ ரத்து செய்தனர்.
தற்போது இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு தமிழர்.
அதையும் கடந்து இலங்கை அரசியலை அக்குவேறு ஆணிவேராகப்
படித்தவர் நமது வெளியுறவுத் துறை அமைச்சர். ….பாஜக-வின் நிலைப்பாடு
பிரச்னையை உருவாக்குவது அல்ல பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான்.
முள்ளின் மேல் விழுந்த சேலையாக இலங்கைப் பிரச்னையை இந்தியா
கவனமாகக் காய் நகர்த்திச் சரி செய்து கொண்டிருக்கிறது” “
அவரைத் தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன் –
“சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை வெற்றி பெற வைத்து
ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். தற்போது அதே சிங்கள மக்கள்
இன்று வீதியில் இறங்கி அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றிப்
போராடி வருகின்றனர். ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே
ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது.
இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து.
அண்ணாமலை இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், எப்படிச்
சொல்ல வேண்டுமோ அப்படிப் பேசியுள்ளார். இது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அண்ணாமலை
இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக இருக்கிறார்”
எனப் பேசினார்.
.
( பின் குறிப்பு – தற்போதைய காலகட்டத்தில்,
இலங்கைப் பிரச்சினையில், இந்திய அரசு –
சரியான ஒரு நிலைப்பாட்டை எடுத்து,
முன்னெடுத்துச் செல்கிறது என்பதே எனது
கருத்தும்…..
இது குறித்து தங்கள் கருத்துகளைச் சொல்ல விரும்பும்
வாசக நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்…)
.
……………………………………………………………………
இதனை நான் நேற்றே கேட்டேன். அண்ணாமலை நிதானமாகப் பேசியுள்ளார் என்றே கருதுகிறேன். அரசியல் நிலைப்பாடு என்று பேசாமல் நல்ல கருத்துக்களோடு பேசியுள்ளதால்தான் அது எடுபட்டது. பாஜக அரசின் நிலைப்பாடும் பாராட்டுக்குரியதுதான்.
மற்றபடி ஈழப்பிரச்சனையைப் பற்றி அதிகமாகப் பேசும் கட்சிகள் எதற்கும் ஈழத்தமிழர்களைப்பற்றி கொஞ்சமும் அக்கறை கிடையாது. இது திமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் கடந்தகாலத்தில் பேசியவைகள் நடந்துகொண்டவைகள் பற்றி அவதானித்தாலே புரிந்துவிடும்.
இந்திராகாந்தி செய்தது அநியாயம் என்றே நினைக்கிறேன். (தன் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வராது என்ற வெறுப்பில் செய்தாரோ?) சில நாட்களுக்கு முன்பு அவரது மெமோரியலுக்குச் சென்றிருந்தேன்… அவர் சுட்டுக்கொல்லப்பட்ட நடைபாதையையும் பார்த்தேன். ஒரு காலத்தில் அவர்மீது எனக்கிருந்த மரியாதையையும், இந்திரா ஆதரவாளனாக இருந்ததையும் நினைத்துக்கொண்டேன்.
இந்த விஷயத்தில் அண்ணாமலை அவர்கள் மிக தெளிவாக பேசியுள்ளார்.
கச்சத்தீவை தாரை வார்த்ததில் இந்திராவுக்கும் கலைஞருக்கும் ஒரு ரகசிய
உடன்பாடு உள்ளது. அவர்களுக்கிடையே என்ன பரிமாற்றம் நடந்தது என்பது
தெரியவில்லை . ஒப்பந்தத்தில் பிரிவு 6 ரத்து செய்யப்பட்டதால் தமிழக மீனவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனி மனிதரின் அரசியல் லாபம் மீனவ சமுதாயத்தை
பாதித்து உள்ளது.
//ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால் போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது. இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது
இதற்கு காலம் பதில் சொல்லும். ஆட்சிக்கு வந்ததும் மனித மிருகம் ராஜபக்சேயை இங்கே வர வைத்து சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து பதவி ஏற்றுக்கொண்ட மோடி, குஜராத்தில் படுகொலையை நடத்திய மோடி இவையெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கப் போகிறது