யோகிஜி, கட்கரிஜி – பிரதமர் ஆகும் கனவுகள்சிதைந்து விட்டனவா ….???

…………..

……

வரவிருக்கின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில்
பாஜக வெற்றி பெற்றால் தற்போதைய உ.பி.முதல்வர்
யோகிஜி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று
யோகிஜி-யின் தீவிர ஆதரவாளர் கூட்டம் கனவு
கண்டுகொண்டும், சில தளங்களில் பேசியும் வருகிறது ….

அதேபோல் நாக்பூர் ஆர். எஸ். எஸ். தலைமைப்பீடத்தின்
ஆசியையும், அபிமானத்தையும் பெற்ற நிதின் கட்கரிஜி தான்
அடுத்த பிரதமர் என்று அவரது ஆதரவாளர் கூட்டமும் பேசி
வருகிறது…..

2 நாட்களுக்கு முன் குஜராத்தில் வீடியோ உரை மூலம்
மோடிஜி – நான் ஓய்வதாக இல்லை…மூன்றாவது முறையாகவும்
நானே பிரதமராக வருவேன் என்று கூறியது –

இவர்கள் அனைவரின் கனவுகளையும் சிதைக்கும்
விதத்தில் அமைந்து விட்டது….

…………………………..

மோடிஜி கூறியது –

எதிர்க்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர் ஒருவர்
சில பிரச்னைகள் தொடர்பாக என்னை சந்தித்தார்.
அவர் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்தாலும்,
நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். (அவர்
சரத் பவார் என்று யூகிக்கப்படுகிறது…)

அவர் என்னைப் பார்த்து,
“இந்தியா உங்களை இரு முறை பிரதமராக
அமர்த்தியுள்ளது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்’
என கேட்டார்.

அதாவது, ஒருவர் இருமுறை பிரதமர் பதவி வகித்தால்,
அவர் அனைத்தையும் சாதித்து விட்டதாக அவரது எண்ணம்.

மோடி வித்தியாசமானவர் என்பது அவருக்குத் தெரியாது.
நான் ஓய்வெடுக்க மாட்டேன்….”

……………………..

தன்னிடம் இருக்கிற உத்தரபிரதேச முதல்வர் பதவியே
போதும் என்று ஒரு வேளை யோகிஜி ஒதுங்கிக்கொள்ள கூடும்…

ஆனால் கட்கரிஜி அப்படி இருந்து விடுவார் என்று சொல்ல
முடியுமா..? அவரை பொருத்தவரையில் இதுவே அவருக்கு உள்ள
கடைசி வாய்ப்பு… இதை நழுவ விட அவர் தயாராக இருப்பாரா..?
அவரது அண்மைக்கால பேச்சுகளும், பேட்டிகளும்
அப்படி நினைக்கத் தோன்றவில்லை….

தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் இருக்கையிலேயே
மோடிஜி, மிகவும் முன்னதாகவே ஆட்டத்தை துவங்கி விட்டார்…
காரணம் இல்லாமலா இருக்கும்…?

தனக்கு போட்டியாக வரக்கூடும் என்று எதிர்பார்ப்பவர்களின்
மீது வீசப்பட்ட ஒரு ” pre-emptive strike” ஆகக்கூட
இது இருக்கக்கூடும்….

வெளிப்படையாக இது குறித்த விளைவுகள் எதுவும்
தெரியா விட்டாலும் – பாஜக கட்சியின் உள்மட்டத்தில் இது
விவாதங்களையும், குழு சேர்தலையும் உருவாக்கவே செய்யும்.
கட்கரிஜி ஆத்ரவாளர்கள் தங்கள் தரப்பை வலுப்படுத்தும்
முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடக்கூடும்.

.
…………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to யோகிஜி, கட்கரிஜி – பிரதமர் ஆகும் கனவுகள்சிதைந்து விட்டனவா ….???

 1. புதியவன் சொல்கிறார்:

  கட்கரியினால் பிரதமர் பதவிக்கு வர இயலாது‌ அதற்கான கரிஷ்மா இல்லை. மோடி அவர்கள் 2025ல் பதவி விலகுவார் (இறுதியில்) என்பது என் கணிப்பு

  • Tamil சொல்கிறார்:

   //மோடி அவர்கள் 2025ல் பதவி விலகுவார் (இறுதியில்) என்பது என் கணிப்பு
   என்ன காரணம்?

 2. Thirumalachari Thiruvengadam சொல்கிறார்:

  I remember when Venkaia Naidu said about Advani to be the next PM Vajpai said that he was not tired and would not retire.History repeats

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Thirumalachari Thiruvengadam,

  But the difference is that Vajpai was liked
  by everyone and it was Advani himself
  who proposed Vajpai for the post of PM.

  .
  with best wishes,
  Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.