“நடிகர் மகன்” என்றால் அவரும் “நடிகர்” ஆகத்தான் வேண்டுமா ….???

….

……

இந்தியாவில், பொதுவாக – வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி…
” டாப் ” ஹீரோக்கள் அனைவருமே தங்கள் வாரிசுகளை
திரைப்படத் துறையிலேயே நுழைப்பதில் குறியாக
இருக்கிறார்கள்….

முக்கிய காரணம் – அந்த துறையில் எளிதில் கிடைக்கும்
பணமும், பெயரும், புகழும், செல்வாக்கும்
( அதிருஷ்டமிருந்தால் அரசியல் தொடர்பும் …)

வாரிசுகளுக்கு –
அதற்கேற்ற தகுதிகளோ,
கவர்ச்சிகரமான தோற்றமோ,
நடிப்புத் திறமையோ,
குரல் வளமோ – இருக்கிறதோ இல்லையோ –
யாரும் கவலைப்படுவதில்லை.

எடுத்த எடுப்பிலேயே ஹீரோ தான்…

இதற்கு முக்கிய காரணம் – அவர்களுக்காக காத்திருக்கும்
ரெடிமேட் ரசிகர்கள் – ஆம் அவர்களின் தந்தையின்
ரசிகர்கள் ஆட்டோமேடிக்காக இவர்களின் ரசிகர்களாகவும்
மாறி விடுகிறார்கள்.

இதில், அபூர்வமான விதிவிலக்கு –

நடிகர், கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் –
சமூக செயல்பாட்டாளர் – மாதவன்.

மாதவனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

முக்கியமான காரணம் –
எப்போதும் துருதுருவென்றிருக்கும் இயல்பும்,
இயல்பாகவே சிரிப்புடன் காணப்படும் அவரது முகமும்……!!!

வட இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்…
எனவே – மிகவும் சகஜமாகவும், இயல்பாகவும்
ஹிந்தியில் பேசுவார்….

ஹிந்தி விளம்பர, தொலைக்காட்சி சீரியல்களில்
தான் அவரது முதல் பிரவேசம்.

பின்னர் தான் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார்.

மாதவன் அண்மைய வருடங்களில் செய்தவை
மிகச்சிறப்பானவை… துணிச்சலானவை…..

அப்படி என்ன செய்தார் …?

உயர்நிலப்பள்ளியில் படித்து வந்த தன்னுடைய ஒரே மகன்
நீச்சல் போட்டிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கு கொள்வதையும்,
சிறப்பாக செயல்பட்டு பல பரிசுகளை பெற்று வந்ததையும்
கவனித்தவர் –

அவன் அந்த துறையில் இன்னமும் சிறப்பாக பயிற்சி பெற்று,

உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவிற்கு
தேர்ச்சி பெற வேண்டும் என்று விரும்பினார்…… முக்கியமாக
அவர் மகனின் ஆசை அது…..

பொறுப்புள்ள ஒரு தந்தையாக மகனின் அந்த ஆசையும்,
விருப்பமும் நிறைவேற தன்னால் ஆன அனைதையும் செய்ய
மாதவன் முன் வந்தார்….

உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள
மாணவர்களை தயார் செய்யும் அளவிற்கு சிறப்பான
நீச்சல் குளங்களும், பயிற்சியாளர்களும்(கோச்) துபாயில்
இருப்பதை அறிந்து,

தன் தொழிலுக்கு மும்பை தான் முக்கிய மையம்
என்றாலும் கூட, தன் இருப்பிடமாக துபாயை மேற்கொண்டு
குடுமபத்தோடு துபாய்க்கு குடியெயேறி விட்டார் ……

அதன் பலன் – அண்மையில் நெதர்லாந்தில் நடைபெற்ற
உலக அளவிலான ஓப்பன் நீச்சல் போட்டிகளில் இந்தியாவின்
சார்பாக கலந்துகொண்ட அவரது மகன்- ஒரு போட்டியில்
தங்க பதக்கமும், இன்னொன்றில் வெள்ளியும் பெற்று
தன்னை பெற்றவர்களுக்கும், பிறந்த நாட்டிற்கும்,
பெருமை தேடித் தந்திருக்கிறார்.

மாதவனுக்கும்,அவரது மகனுக்கும்
நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்…..

மாதவன் கலந்துகொண்ட ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியின் காணொளியுடன்
இந்த இடுகையை முடிக்க விரும்புகிறேன்…

என்ன நிகழ்ச்சி அது ….?
அதையும் தான் பார்ப்போமே…!!!

…………

.
………………………………………………..

பின் குறிப்பு –

தலைப்பின் சுவாரஸ்யம் காரணமாக, சிலர் முழு பட்டிமன்றத்தையும் தொடர்ந்து காண விரும்பக்கூடும்.
(மொத்தம் 2 மணி நேரம் 20 நிமிடம் …) அவர்களுக்கான லிங்க் —-

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள்
பெரிதும் சந்திப்பது …. சவால்களா..? சந்தோஷங்களா…?

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to “நடிகர் மகன்” என்றால் அவரும் “நடிகர்” ஆகத்தான் வேண்டுமா ….???

  1. Tamil சொல்கிறார்:

    மகிழ்ச்சி!! வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s