அதிரடி மன்னன் எலான் மஸ்க் ……!!!!

……

…….

இன்று “எலான் மஸ்க்” என்கிற பெயரை உச்சரிக்காத செய்தி தளங்கள்
உலகில் இல்லை….

டாக்டர் கலாம் அவர்களின் புகழ்பெற்ற வாக்கியமான
” கனவு காணுங்கள் ” என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் –
“எலான் மஸ்க்”

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்பது மட்டும் அதற்கு காரணம்
இல்லை. அன்றாடம் அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும்
உலகம் முழுவதும் அவை ஏற்படுத்தும் விளைவுகளுமே அவருக்கு
எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கி வருகின்றன.

2017-ல், எலான் மஸ்க் ட்விட்டரில் “எனக்கு ட்விட்டர் பிடித்திருக்கிறது”
என ஒரு ட்வீட் பகிர்ந்தார். அதற்கு டேவ் ஸ்மித் “அப்போ நீங்க இத
வாங்கணும்” என்று பதில் அனுப்புகிறார்.

எலான் மஸ்க் கவுண்டமணி ஸ்டைலில் “அது என்ன விலைக்கு வரும்..?”
என ட்வீட் செய்திருந்தார். அப்போது, 5 வருடங்களுக்குப் பிறகு அவர் உண்மையாகவே ட்விட்டரை வாங்குவார் என யாருமே
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கட்டாய இராணுவ சேவையைத் தவிர்ப்பதற்காக
தென்னாப்பிரிக்காவை விட்டு கனடா சென்றார்…..

“சின்ன வயதில் என்னை வளர்த்தது புத்தகங்கள்.
அதன் பிறகுதான் பெற்றோர்கள்” என்கிறார் எலான் மஸ்க்.
கல்லூரியில் இயற்பியல் படித்தவர் ….இணையம்தான் இனி எல்லாமே
என நம்பி சகோதரனுடன் சேர்ந்து Zip2 என்று எல்லோ பேஜஸ் போல இணையதளம் ஒன்றைத் தொடங்குகிறார்.

அலுவலக அறையிலே தங்கிக்கொள்கிறார்.
அருகில் இருந்த ஹாஸ்டலில்தான், குளிப்பது எல்லாமே.
அந்த இணையதளம் நல்ல விலைக்குப் போகவே,
கிடைத்த காசை அடுத்து என்ன செய்யலாம் என அவர் திட்டம்
தீட்டத் தொடங்கியபோது எலானின் வயது 27.
ஆன்லைன் இணைய சேவை X.com பெரியளவில் கைகொடுக்கிறது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என –
அவர் பயணம் தொடங்குகிறது……., தொடர்கிறது……!!!

2000-ல் SpaceX நிறுவனத்தை ராக்கெட் பொறியாளர் டாம் முல்லர்
உதவியுடன் தொடங்குகிறார் எலான் மஸ்க். அப்போது இரண்டு
நோக்கங்கள் இருந்தது SpaceX நிறுவனத்துக்கு.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை வடிவமைப்பதும்
மனிதர்கள் பல்வேறு கிரகங்களில் வசிக்கும் நிலையை உருவாக்குவதும்…

ஆரம்பத்தில் விமர்சனத்துக்கு உள்ளானவர் பல்வேறு தோல்விகளுக்குப்
பிறகு மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்களை உருவாக்கி சாதித்துக்காட்டினார்.

அடுத்த இலக்கு இன்னும் கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது….!!!
சிறுவயதிலே ஐசக் அஸிமோவின் புத்தகங்கள் எலான் மஸ்க்கின்
பேவரைட். இன்றைக்கும் அவர் கனவுலகில் தான் வாழ்கிறாரா
என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது……!!!

டெஸ்லாவின் ஆரம்ப கால கார்கள் தோல்வியைத் தழுவின.
டெஸ்லா விற்ற கார்களை திரும்பப் பெறவேண்டிய நிலைகூட வந்தது.
டெஸ்லாவின் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்றது.
இன்னும் சில வாரங்களில் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை
வரை சென்று திரும்பியது.

ஆனால், அதன் பிறகான வளர்ச்சி அவரது நிகர மதிப்பையே
உச்சிக்குக் கொண்டு சென்றது.எலான் மஸ்கின் Starlink
இணைய வசதி வழங்கும் நிறுவனம் முதன்முறையாக
பறக்கும் விமானத்தில் இணைய வசதியை அறிமுகப்படுத்த
இருக்கிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக எலான் Starlink உபகரணங்களை
அனுப்பி வைத்து, அதன் மூலம் உலகம் முழுவதும் பேசப்பட்டார்….

அமெரிக்கா முழுவதற்கும் இணைய வசதி தரும்
நிறுவனத்தின் கனவு – உலகம் முழுவதும் இணையத்தை நீட்டிப்பது.

`ட்விட்டரை நான் வாங்கப் போகிறேன்!’ என எலான் அறிவித்தபோது
அதனை ஜோக்காக கருதி ஸ்க்ரோல் செய்தவர்கள் தான் அதிகம்.

“44 பில்லியன் அமெரிக்க டாலர்களை கேஷாக தருகிறேன்.
கண்டய்னர்கள் எடுத்துட்டு வாங்க” – என
அவர் சொல்லாதது தான் குறை.
ஏப்ரல் 25-ல், ட்விட்டரின் 100 சதவீத பங்குகளை எலான் வாங்கிவிட்டார்.
இனி அவரது பதிவுகளை நீக்க யாரும் இருக்க போவதில்லை என
நெட்டிசன்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

இதையெல்லாம் மாற்ற போகிறேன் என நீண்ட பட்டியலோடு ட்விட்டர்
பறவையை கைகளில் ஏந்தி கொண்டுள்ளார் எலான் மாஸ்க்.
இப்படி துணிச்சலாகப் பேசுவதோ – பேசியதை செய்து காட்டுவதோ
எலானுக்கு புதிது கிடையாது. எலான் ஒருமுறை சொன்னது போல,
“நான் ஏலியன் கிடையாது. ஆனால் ஏலியனாக இருந்திருக்கிறேன்”
என்பது போல –

அவரது செயல்பாடுகள், கனவுகள் எல்லாமும்
ஒட்டுமொத்த உலகத்திற்கானது……

.
…………………………………………………………..

நான் எலான் மஸ்கின் தீவிர ரசிகன்….!!!
தொடக்கதிலிருந்தே அவரது ஒவ்வொரு சவாலையும் –
வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்….

இந்தியாவில் அவர் தனது முதலீடுகளை துவங்கும்
நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் …!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to அதிரடி மன்னன் எலான் மஸ்க் ……!!!!

  1. கார்த்திகேயன் சொல்கிறார்:

    அப்படியே இந்த திராவிட கட்சிகளையும் தமிழக ஊடகங்களையும் வாங்கினா ரொம்ப நல்லாயிருக்கும்

  2. Tamil சொல்கிறார்:

    ஆம், வியப்புக்குரிய வியக்கத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார்.

  3. Peace சொல்கிறார்:

    Two of the top Twitter officials Vijaya and Parag will be asked to leave . If freedom of speech is the reason Musk wants Twitter how is he going to deal with China and India. India already said no to china made cars. Where is Tesla market for all the cars produced in China. Musk is a businessman. Freedom of speech issue is best left to legislators who can be thrown out of Office if the public disagrees with them.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.