பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் கட்சியும் …. வலுவான 2-வது அணி உருவாக வாய்ப்பு உண்டா …?

……..

…….

திரு.பிரசாந்த் கிஷோர், பிபிசி செய்தி நிறுவனத்திற்கு
அளித்த பேட்டியை அடிப்படையாக கொண்ட ஒரு இடுகை ….

பிரசாந்த் கிஷோர் தாமாகவே காங்கிரஸுக்கு விளக்கம் தரச்
சென்றாரா அல்லது காங்கிரஸ் மேலிடத்தால் அவர்
அழைக்கப்பட்டாரா போன்ற கேள்விகளுக்கு பிரசாந்த் கிஷோர்
விரிவாக பதில் அளித்திருக்கிறார்.

“காங்கிரஸ் தலைமை என்னை நோக்கி வரும் அளவுக்கு
எனது அந்தஸ்தும், தகுதியும் பெரிதாக இல்லை. நான் பேச
சோனியா காந்தி வாய்ப்பளித்தார், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒப்புக்கொண்ட விஷயங்களை
அவர்கள் பின்பற்றினால், அதனால் காங்கிரசுக்கே பலன்
கிடைக்கும், ஜனநாயகம், நாட்டுக்குப் பலன் கிடைக்கும்.”

காங்கிரஸிடம் அளித்த விளக்கக்காட்சி குறித்து பிரசாந்த்
கிஷோர் கூறுகையில், “எனக்கு ஒரே ஒரு நிபந்தனை இருந்தது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன நடந்தது
என பாருங்கள். நான் சொன்ன ஒரே ஒரு நிபந்தனையை செயல்படுத்துங்கள் என்றேன்.

நான் வைத்திருக்கும் புளூ பிரிண்ட் விவாதிக்கப்பட வேண்டும்
என்றேன். கட்சியில் நான் சேரும் முன்பு
என்னால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை செயல்படுத்துங்கள்
என்றேன். அப்படி செய்வதால் காங்கிரஸுக்குத்தான்
பலன் கிடைக்கும் என்று சொன்னேன்,” என்றார்.

காங்கிரஸுக்கு அளிக்கப்பட்ட அறிவுரை குறித்து
அவரிடம் கேட்டோம்.

“மோதியை எப்படி வீழ்த்துவது என்பதல்ல இப்போதைய
பிரச்னை. இந்தியாவை எப்படி வெல்வது? (இது மோதியை
தோற்கடிப்பது பற்றி அல்ல, இந்தியாவை வெல்வது பற்றியது)”
என்றார் பிரசாந்த் கிஷோர்.

இன்னும் பிரதமர் நரேந்திர மோதியுடன் தொடர்பில் இருக்கிறீர்களா அல்லது அமித்ஷாவிடம் பேசுகிறீர்களா என்ற கேள்விக்கு பிரசாந்த்
கிஷோர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

“பிரதமர் உங்களை அழைத்தால், நான் உங்களிடம் பேசமாட்டேன்
என்று சொல்லும் நபர் நாட்டில் யாராவது இருப்பார்களா? பிரதமர் நாற்காலியை மதிக்காமல் இருக்க முடியாது. அவர் அழைத்தால் பேசத்தானே வேண்டும்” என்கிறார் பிரசாந்த் கிஷோர்.

2024ஆம் ஆண்டில், பாஜகவின் எதிர்காலம் மற்றும் மக்களவை
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அது பற்றிய எந்தவொரு வியூகத்தையும் செய்ய அவர் மறுத்துவிட்டார்.

மேலும் அவர், “இந்த நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வலுவான
அரசியல் சக்தியாக இருக்கும், அதை நாங்களும் நீங்களும்
மறுக்க முடியாது, ஆனால் அந்த செல்வாக்கை மட்டும்
வைத்துக் கொண்டு 2024 அல்லது 2029இல் பாஜக வெற்றி பெறும்
என்று அர்த்தமல்ல” என்கிறார்.

பாஜகவை எந்த மூன்றாம் அணியாலும் எதிர்க்க முடியாது
என்றும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

“இந்த நாட்டில் எந்த ஒரு மூன்றாவது அல்லது நான்காவது
அணியும் தேர்தலில் வெற்றிபெறும் என்று நான் ஒருபோதும்
நம்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற விரும்புகிறாரோ,
அவர் இரண்டாவது முன்னணியாக மாற வேண்டும்.

பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் நம்பர் ஒன் இடத்தில்
இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மூன்றாம் அணி முதலாவது அணியை தோற்கடிக்கும் என்று
யார் சொன்னாலும் அதை நம்ப நான் ஒன்றும் முட்டாள் அல்ல.
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில்
எந்த அணி இருந்தாலும், அது இரண்டாவது அணியாகத்தான்
இருக்க வேண்டும்.”

“நாட்டிலேயே இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
ஆனால் பாஜகவுக்கு சவால் விடும் வகையில் இரண்டாவது
முன்னணி இன்னமும் அமையவில்லை,” என்கிறார் பிரசாந்த்
கிஷோர்….

மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி,
தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ்,
உ.பி.யின் அகிலேஷ் யாதவ்,
டெல்லியின் அர்விந்த் கெஜ்ரிவால்,
இத்தனை பேரையும் அணைத்துக் கொண்டு 2-வது அணியாக
உருவெடுக்க காங்கிரஸ் கட்சியால் இயலுமா….?

இதற்கு எந்த அளவிற்கு பிரசாந்த் கிஷோர் உதவியாக இருப்பார்…?

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் கட்சியும் …. வலுவான 2-வது அணி உருவாக வாய்ப்பு உண்டா …?

  1. புதியவன் சொல்கிறார்:

    //மோதியை எப்படி வீழ்த்துவது என்பதல்ல இப்போதைய பிரச்னை. இந்தியாவை எப்படி வெல்வது?// – இது சரியான பாயிண்ட்.

    பிரஷாந்த் கிஷோர் போன்ற தேர்தல் ஸ்ட்ராடஜிஸ்ட் களால், காங்கிரஸ் கட்சிக்கு உபயோகம் கிடையாது. காரணம், அவர்கள் காங்கிரஸை குடும்பக் கட்சியாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். ராகுல், பிரியங்கா வதேரா, பிறகு அவர்கள் குழந்தைகள் என்று முழுமையான குடும்பக் கட்சியாக நடத்த விரும்புகிறார்கள். எந்தத் தேர்தலில் தோற்றாலும், மாநிலத் தலைமை அல்லது மற்றவர்கள் மட்டுமே காவு வாங்கப்படுவார்கள். மாநிலத் தலைமையைச் செயலற்றவர்களாக ஆக்கி, ராகுல், பிரியங்கா மட்டுமே முடிவுகளை எடுத்துவிட்டு, தேர்தல் தோல்வி அடைந்த உடனேயே மாநிலத் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். எந்த மாநிலமாவது நன்றாக நடந்தாலோ இல்லை முதலமைச்சர் அல்லது அரசியல்வாதி நல்ல செல்வாக்கை அடையும் நிலைமை வந்தால் உடனேயே அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள் (சிந்தியா, பஞ்சாப் காங்கிரஸ் என்று பல உதாரணங்கள்). கட்சி என்கீழ் இருக்கவேண்டும், நாங்கள் எதற்கும் ரெஸ்பான்சிபிள் கிடையாது, மற்றவர்கள் எல்லோரும் எங்களுக்கு அடிமை என்ற மனோபாவம்தான் காங்கிரஸிடம் ஊறியிருக்கிறது.

    அதேசமயம் பாஜகவைப் பார்த்தால், அங்கு புதுப் புது தலைவர்கள் வருகிறார்கள், இன்னொரு புது அலையும் வருகிறது.

    பிரசாந்த் கிஷோர், நம்பகத் தன்மை உள்ளவர்போலத் தெரியவில்லை. ஜெயிக்கும் குதிரை, சந்தேகத்தில் இருக்கும்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களின் வெற்றியில் பிரசாந்த் கிஷோர் பங்குபெற்றுக்கொள்கிறார். தமிழகத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து இந்த ஜென்மத்தில் அவரால் வெற்றிபெற இயலாது. அதுபோல, உபியில் மாயாவதியுடன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.