அஜய் தேவ்கன், ஹிந்தியில் பெரிய ஹீரோவாக இருக்கலாம்….ஆனால் …….ல் “ஜீரோ” தான்…!!!

….

கன்னட நடிகர் கிச்சா சுதீப், சமீபத்தில் அவருடைய
புதிய படத்திற்கான ப்ரோமோஷன் ஒன்றில் பேசிய போது,
தென்னிந்திய மொழி படங்களும் அகில இந்திய அளவில்
வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டி – படங்களை ஹிந்தியில் தான் எடுக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை;
“ஹிந்தி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது”
எனப் பேசியிருந்தார்.

அதற்கு எதிர்வினையாக ஹிந்தி பட நடிகர் அஜய் தேவ்கன்
ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார்,

அதுவும் ஹிந்தியில்….

“எனது சகோதரரே… ஹிந்தி நமது தேசிய மொழி
இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி
படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?

ஹிந்தி – முன்பும்
இப்போதும்
இனிமேலும்

 • நமது தாய்மொழியாகவும்,
  தேசிய மொழியாகவும் இருக்கும்” …
  …………

…………

தமிழ், தெலுங்கு, கன்னட – படங்களை ஹிந்தியில்
“டப்” செய்து வெளியிடுவது, ஹிந்தி இந்தியாவின்
தேசிய மொழி என்பதால் அல்ல –

அந்தப் படங்களுக்கு ஹிந்தி மாநிலங்களிலும்
மார்க்கெட் இருக்கிறது என்பதால் மட்டுமே –

வெறும் வியாபார காரணத்திற்காக ….

அஜய் தேவ்கன், ஹிந்தியில் பெரிய ஹீரோவாக இருக்கலாம்….
ஆனால் …….ல் “ஜீரோ” தான்…!!!

வடக்கே, பலர் இதே மாதிரி மனப்போக்கில் தான் இருக்கிறார்கள… இவர்களுக்கெல்லாம், உடனுக்குடன் சூடாக எதாவது கொடுக்க வேண்டியிருக்கிறது….இல்லையேல் – இந்த பித்து அவர்கள் தலையில் ஏறிவிடும்…!!!

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to அஜய் தேவ்கன், ஹிந்தியில் பெரிய ஹீரோவாக இருக்கலாம்….ஆனால் …….ல் “ஜீரோ” தான்…!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  நாட்டில் நேச்சுரலான எந்த மொழி அதிகமாகப் பேசப்படுகிறதோ அது தேசிய மொழிதான்.

  அதற்காக நாட்டின் மற்ற தொன்பையான மொழிகளை அவர் குறைத்துப் பேசவில்லை. என் மொழி தபிழ். அதைவிட எந்த மொழியும் உயர்ந்தது அல்ல.

  ஹிந்தியை அவமதித்துப் பேசிவிட்டு ஹிந்தி மொழியில் டப் பண்ணி படம் வெளியிட்டுக் காசு பார்க்கும் சூர்யா மனநிலைதான் நாட்டில் பலருக்கு இருக்கிறது. தைரியத்தோடு வடமாநிலம் செல்லும்போதும் ஹிந்தி மொழி வெறுப்பைக் காண்பித்துப் பார்க்க வேண்டியதுதானே

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில்,

  Raaj basha Rashtra basha Nahi hi sir..

  why is this “Hindi is our National language ”
  being repeated so much ?

  Every one will learn a language –
  if needed…or if they like…

  “ராஜ் பாஷா – ராஷ்ட்ர பாஷை இல்லை சார்..

  ஏன் இந்த இந்தி தேசிய மொழி என்கிற பஞ்சாயத்து
  அடிக்கடி எழுகிறது. யாருக்கு தேவைப்படுகிறதோ
  அவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்..

  .

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ..

  இதற்கு மேலும் நான் சொல்ல நினைத்ததை –

  திருமதி கஸ்தூரி மிக அழகாக சொல்லி விட்டார் –

  தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில்
  கூறியுள்ளதாவது : மரியாதைக்குரிய
  அஜய் தேவ்கன் அவர்களே,

  பல ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியில் டப்
  செய்யப்பட்டுகின்றன.இதனால் இந்தி அமெரிக்காவின்
  தாய்மொழி மற்றும் தேசியமொழி என்று நீங்கள்
  நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

  சீனா, ஜப்பான், வளைகுடா நாடுகளிலும் இந்தி
  திரைப்படங்கள் உள்ளூர் மொழிகளில் டப் செய்து
  வெளியிடுகிறார்கள்.பல இந்தி திரைப்படங்கள் மற்றும்
  தொலைக்காட்சி தொடர்கள் எப்போதும் பிராந்திய
  மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள்.
  ஏன் அப்படி நடக்கிறது?. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?.

  கலை எல்லைகளை கடந்தது ஜாம்பவான்களான துளசிதாஸ்,
  கபீர், முல்க்ராஜ் ஆனந்த், குஷ்வந்த் சிங் ஆகியோரின்
  இந்தி இலக்கிய படைப்புகள் இந்தியாவின் பிற மொழிகள்
  உள்பட சர்வதேச மொழிகளில் மொழிமாற்றம்
  செய்யப்பட்டுள்ளது. இது ஏன் நடந்தது?. இதுபற்றி
  என்ன நினைக்கிறீர்கள்?.

  ஒரு நடிகர் என்ற அடிப்படையில் கலை என்பது எல்லைகளை
  கடந்தது என்பது உங்களுக்கு தெரியும். கலைக்கும்,
  கலைஞர்களுக்கு ஒருபோதும் மொழி தடையாக இருக்காது.
  பெருமைமிகு இந்தியர்களுக்கு… பான் இந்தியன் தெலுங்கு
  மொழியில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் தெலங்கு
  தியாகியாக நீங்கள் நடித்துள்ளீர்கள். இந்தி உள்பட 7 இந்திய
  மொழிகளில் உங்கள் வெப்சீரிஸ் ருத்ரா உள்ளது.
  இது ஆங்கில சப்டைட்டிலாகவும் இருக்கிறது. இது ஏன் என்று
  சொல்ல முடியுமா.

  இந்த விஷயத்தில் நான் கிச்சா சுதீப் மற்றும் 700 மில்லியன்
  இந்தியர்களுடன் நிற்கிறேன்.

  ” பெரும்பான்மையான ” –

  பெருமைமிகு இந்தியர்களுக்கு இந்தி ஒருபோதும்
  தாய்மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்காது.

  • புதியவன் சொல்கிறார்:

   //கலைக்கும், கலைஞர்களுக்கு ஒருபோதும் மொழி தடையாக இருக்காது.// இந்தப் புடலங்காய் கலைஞர்கள்தானே தாங்கள் உலகுக்கே பாடம் எடுக்க வந்தவர்கள் போலும், இவர்களுக்கு அரசியல் அத்துப்படி என்பதுபோலும் அவ்வப்போது பிதற்றுகிறார்கள். சொல்வது ஒன்று, ஆனால் வியாபாரம் என்று வரும்போது பல்லை இளித்து பிற மொழிகளில் வெளியிட்டு காசு பார்ப்பது, தமிழ் மொழியில் ‘ஹிந்தி வேண்டாம்’ என்ற வசனம், உண்மைக் கதை என்று சொல்லி, தங்களுக்குத் தேவையான மதத்தைச் சார்ந்தவர் என்று ஒரு பாத்திரத்தை உருவாக்குவது, பின்னணியில் தனக்கு வேண்டாத கட்சி என்று அதன் சிம்பலை வைப்பது, இந்தி மொழியில் ‘நல்லது செய்யுங்கள்’ என்று வசனம் என, வியாபாரம் செய்வதற்காக எந்த லெவலுக்கும் இறங்குவது. என்று இருக்கும்போது, ‘கலைக்கும் கலைஞர்களுக்கும் மொழி ஒரு தடையல்ல’ என்று ஜல்லியடிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? இதற்கும், ‘கடவுள் கிடையாது, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி’ என்று சொல்லிக்கொண்டு, நோன்புக்கஞ்சி குடித்து இன்னொரு மதத்தைப் பாராட்டும், ‘இயேசு’வைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோல உயர்வாகப் பேசும் போலிக்கொள்கையர்களுக்கும் என்ன வித்தியாசம்?

  • புதியவன் சொல்கிறார்:

   இதை எழுதும்போதே, ஒரு மொழி, நாட்டுக்கே தாய்மொழியாக இருக்காது, நாட்டில் பிற தொன்மையான மொழிகளும் இருக்கும்போது (சமஸ்கிருதம், தமிழ் போன்று). ஆனால் இணைப்பு மொழியாக வெளிநாட்டு மொழிதான் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை, அதில் நமக்கு/தமிழர்களுக்கு அட்வாண்டேஜ் இருந்தபோதிலும், அதனால் தமிழ்மொழி பேசுபவர்கள் குறைந்தபோதிலும்.

 4. புதியவன் சொல்கிறார்:

  //ஹிந்தி தெரியலையா?: இந்தியாவை விட்டு போங்க: உசுப்பேற்றும் உ.பி., அமைச்சர்// – இன்று இந்தச் செய்தி தினமலரில் படித்தேன். //லக்னோ: ஹிந்தி மொழியை விரும்பாதவர்கள் வெளிநாட்டினராக கருதப்படுவார்கள். ஹிந்தி பேச விரும்பாதவர்கள் வெளிநாட்டிற்கு செல்லலாம் என உ.பி., அமைச்சர் சஞ்சய் நிஷாத்// – இவரு(னு)க்கெல்லாம் திமிர்தான். இந்த மாதிரி ஆட்களுக்காகவே, வெளிநாட்டில் படித்து அங்கு பலருடன் பழகியிருந்தால்தான் அமைச்சராகவே ஆகமுடியும் என்று சட்டம் கொண்டுவந்துவிடவேண்டியதுதான். நாகரீகமில்லாப் பேச்சு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.