யார் சொன்னது – இதை “மிருகம்” என்று….?

……………….

ஆறறிவு இல்லாத மிருகமென்று இதை யாராவது சொல்ல முடியுமா….?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to யார் சொன்னது – இதை “மிருகம்” என்று….?

  1. புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… யானையைப் பற்றிய பல டாகுமெண்டரிகளையும் படங்களையும் பார்த்திருக்கிறேன். அது உறவினர்களின் கூட்டம். வயதான பெண் யானை தலைமை ஏற்கும். குழுவினர் எல்லோரும் கட்டுப்படணும். ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பிரயாணம் செய்யும் (அதாவது, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடந்து இரவுகளில் தங்கிச் செல்லும். திரும்ப அவ்வளவு கிலோமீட்டர்கள் நடந்து புறப்பட்ட இடத்திற்கே வரும். இடையில் சில இடங்களில் ஒரு மாதங்கள் வரை தங்கும். சிங்கங்கள் இருக்கும் காடுகளில், இரவு நேரங்களில் பாதுகாப்பாகக் கடக்க முற்படும்). புறப்பட்ட இடத்திற்கே வருவதற்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆகலாம். இடையில் அந்த வயதான பெண் தலைவி இறந்தால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள பெண் யானை தலைமை தாங்கும். பயணத்தின் இடையில் குழந்தை பிறப்பு, இறப்பு என்று பல நேரிடலாம். இந்த யானைகள் (தலைவி) எங்கு நீர் நிலை இருக்கும், எது alternative path, எது ஆபத்தான இடம் என்றெல்லாம் முழுவதையும் தன் மூளையில் வைத்திருக்கும். கூட்டத்தில் உள்ள ஆண், பெரியவனாகிவிட்டால், கட்டுப்படாத நிலையை எய்தும், கூட்டத்திலிருந்து விரட்டிவிடப்படும். வழியில் யானை இறந்துவிட்டால், அல்லது சிங்கங்களிடம் மாட்டிக்கொண்டு காப்பாற்ற நிலை இல்லாமல் போய்விட்டால், யானைகள் தங்கள் பயணத்தைத் தொடரும். ஆனால் திரும்ப வரும்போது அந்த இறந்த யானையின் எலும்பை (பெரும்பாலும் மண்டையோடு, தந்தம் போன்று) தன் துதிக்கையால் ஒவ்வொரு யானையும் வருடிக்கொடுத்து பாவமாக துக்கத்துடன் தன் முகத்தை வைத்திருக்கும். சிறிய யானை புதைகுழி அல்லது மற்றவற்றில் மாட்டிக்கொள்ளும்போது, பெரிய யானைகள் எல்லாமே அதன் உதவிக்கு வரும். அவை மிக நெகிழ்ச்சியாக இருக்கும்.

    தங்களுக்கு உதவின மனிதர்களையும் அது நினைவில் வைத்திருக்கும். யானை ஒரு பாசமான விலங்கு. விலங்குகளையெல்லாம் (சிங்கம், சிறுத்தை, எருது…) study பண்ணும் அனிமல் ப்ளேனட் போன்றவற்றைப் பார்க்கும்பொழுது, அவைகள் எவ்வளவு பாசமானவை (ஏன் காட்டு நாய்கள் கூட), எப்படி ஒரு குழுவாக இயங்கி அதன் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொள்கிறது, எப்படி ஒரு தலைமையிலேயே இயங்குகிறது என்பதெல்லாம் மிக மிக ஆச்சர்யத்தைத் தரும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.