ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, ஹிந்தியா….?முடியுமா….? தேவையா …?

…..

…..

மீண்டும் அரசியல் களத்தில் மொழிப்பிரச்சினை
பெரிய அளவில் உருவெடுக்கத் துவங்கி இருக்கிறது.

“அரசு நடைமுறைகளுக்கான மொழியாக இந்தியைப்
பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்திக்கான முக்கியத்துவத்தை இது அதிகரிக்கும்.


(எதற்காக இப்படி செயற்கையாக முக்கியத்துவத்தை
அதிகரிக்க வேண்டும்….? )

வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும்போது, இந்தியாவின் மொழியான இந்தியைப்
பயன்படுத்த வேண்டும். ஹிந்தியை, உள்ளூர் மொழிகளுக்கு
மாற்றாக இல்லாமல், ஆனால் – ஆங்கிலத்துக்கு மாற்றான இணைப்பு மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்’’ என்பது
மத்திய அரசின் கருத்து என்று சொல்லப்பட்டிருக்கிறது….

அதாவது, உதாரணமாக – தமிழகத்துக்கும்- கேரளாவுக்கும்,
கேரளாவுக்கும்-கர்நாடகாவிற்கும், கர்நாடகாவுக்கும்
ஆந்திராவுக்கும், தமிழ் நாட்டிற்கும்-மேற்கு வங்கத்திற்கும்
இடையே தற்போது அரசு மொழியாக பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டுமாம்….

இந்த கருத்துக்கு, ஹிந்தி பேசாத பல மாநிலங்களிலிருந்தும்
கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரு மொழி என்பது எந்த அளவுக்கு ஒரு சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறதோ, அதே அளவுக்கு ஒரு சமூகத்தின்
பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குகிறது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போல அதிகம் பேர்
ஆங்கிலம் அறிந்த சமூகமாக நாம் இருந்ததே இந்தியர்களின்
பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது என்பதை யாரும்
மறுக்க முடியாது. இன்று அமெரிக்காவில் மூன்றாவது
தலைமுறையாக பல இந்தியர்கள் கோலோச்சுகிறார்கள்.

மைக்ரோசாஃப்டில் சத்யா நாதெல்லா, கூகுளில் சுந்தர் பிச்சை
எனப் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப்
பொறுப்பு வகிப்பதற்குத் தொழில்நுட்ப அறிவையும் தாண்டி
ஆங்கில மொழிவளமும் முக்கியமான காரணம்.

ஐ.டி சேவைத்துறையில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு
ஆங்கில மொழியறிவே அடிப்படைக் காரணம்…..
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதில் இந்தியாவுடன்
போட்டி போட கொஞ்ச காலமாகவே – ஆங்கிலவழிக்
கல்வியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளன.

ஆங்கில மொழியறிவு தரும் பொருளாதாரப் பலன்களை
உணர்ந்து இப்போது சீனாவிலும் கூட ஆங்கிலம் படிப்பது அதிகரித்துவருகிறது. இங்கேயும் தாய்மொழிக் கல்வியைத்
தாண்டி ஆங்கிலவழிக் கல்வியை நாடுவோர் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சிக்கு
அதுவே முக்கிய காரணமாக உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகமாகியுள்ளது. ஆந்திராவிலும் இப்படி உள்ளது.
தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின்
பள்ளிப் பாடநூல்களில் மாநில மொழி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பாடங்கள் உள்ளன.

வருங்கால வளர்ச்சிக்கு உதவும் ஆங்கிலத்தைத் தங்கள்
பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பெற்றோர்களின்
விருப்பமே இப்படிப் பல மாநில அரசுகளை முடிவெடுக்க
வைத்திருக்கிறது. இந்தியர்களுக்கு ஆங்கிலமே உலகத் தொடர்புமொழியாகப் பழகிவிட்டது.

நடைமுறை எதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு ஒரு மொழியை
மற்ற மொழி பேசும் மக்கள்மீது திணிப்பது வளர்ச்சிக்கு
எதிரானது. இணைப்பு மொழி என்பதைத் தாண்டி வளர்ச்சிக்கான
ஒரு கருவியாக மொழியறிவை இன்று உலகம் பார்க்கிறது.
இந்த நிலையில், ஏற்கெனவே இந்தியர்கள் பலருக்கும் அறிமுகமான,
நெருக்கமான – ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில்
புதிதாக ஹிந்தியை கொண்டு வருவது அறிவுடைமையா…?
நடைமுறை சாத்தியமானதா….? மக்கள் இதை விரும்புவார்களா…?
வரவேற்பார்களா…?

அப்படியே ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, ஹிந்தியை
கற்போமென்றாலும் கூட, ஹிந்தியில் –

எஞ்சினீரிங், மருத்துவம், விஞ்ஞானம், கணிணி போன்றவற்றில்
உயர்கல்வி பெற – தேவையான கல்விமுறை (சிலபஸ்…)
இருக்கிறதா…? அதற்கான அடிப்படை பாட புத்தகங்கள்,
ரெஃபெரென்ஸ் புத்தகங்கள் இருக்கின்றனவா…?
இந்த பாடங்களை, மாணவர்களுக்கு ஹிந்தியில் சொல்லித்தரும்
அளவிற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்களா….?
இவற்றில் எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள
ஹிந்தி மொழியிலேயே தகவல் களஞ்சியங்கள் இருக்கின்றனவா..?

ஏன் இந்த அசட்டுத்தனமான, வறட்டுப் பிடிவாதம்…..?

அதே சமயத்தில் – வேலை வாய்ப்பு, வியாபாரம்
போன்ற பல காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகள்
விருப்ப பாடமாக ஹிந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று
விரும்பும் பெற்றோர்களுக்காக –
அனைத்து பள்ளிகளிலும், மூன்றாவது மொழியாக மாணவர்கள்
ஹிந்தி படிக்கத் தேவையான வசதிகளையும் உருவாக்கித் தர
வேண்டும் என்பதும் மிக மிக அவசியம்.

உண்மையில் – மத்திய அரசு, இந்தியா முழுவதும் அனைத்து
மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், மூன்றாவது மொழியாக –
விருப்ப பாடமாக – ஹிந்தி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு
அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தரும் முயற்சிகளை
மேற்கொண்டால் – தற்போது கூறப்படும் யோசனைகளை விட
பயனுள்ளதாக இருக்கும்..

செய்வார்களா….?

.
…………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஆங்கிலத்தை ஒழித்து விட்டு, ஹிந்தியா….?முடியுமா….? தேவையா …?

  1. புதியவன் சொல்கிறார்:

    மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத்தரப்படலாம் அரசுப் பள்ளிகள் உட்பட. மற்றபடி ஆங்கிலத்துக்கு மாற்று ஹிந்தி என்று சொல்வது அறிவுடைமையாகாது. எல்லா அரசுப் பள்ளிகளிலும்/அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத்தரப்படவேண்டும் என்பது சரியாக இருக்கும். நாம் இந்தியர் என்ற எண்ணமும், ஆங்கிலம் இருப்பதால் வாழ்வு வளர்ச்சிக்கும் உபயோகமாக இருக்கும்.

    //எஞ்சினீரிங், மருத்துவம், விஞ்ஞானம், கணிணி போன்றவற்றில்
    உயர்கல்வி பெற – தேவையான கல்விமுறை (சிலபஸ்…)// – ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் இதனை மொழியாக்கம் செய்து படிப்பது என்பது இந்திய அளவில் நடைமுறை சாத்தியம் இல்லாதது. என்னைக் கேட்டால், தமிழ் வழிக்கல்வி என்பதை நாம் புறம் தள்ளவேண்டும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்றவை மொழிப்பாடங்கள்தாம். மற்றபடி மற்ற சப்ஜெக்டுகள் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருக்கவேண்டும். நாம் ஜெர்மனி போன்ற நாடு அல்ல.

  2. Jksmraja சொல்கிறார்:

    “அதே சமயத்தில் – வேலை வாய்ப்பு, வியாபாரம்
    போன்ற பல காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகள்
    விருப்ப பாடமாக ஹிந்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று
    விரும்பும் பெற்றோர்களுக்காக –
    அனைத்து பள்ளிகளிலும், மூன்றாவது மொழியாக மாணவர்கள்
    ஹிந்தி படிக்கத் தேவையான வசதிகளையும் உருவாக்கித் தர
    வேண்டும் என்பதும் மிக மிக அவசியம்.”

    Great joke of 2022

  3. mekaviraj சொல்கிறார்:

    பேசாமல் எல்லா மாநிலத்தவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிகவும் உபயோகமானது.

    எல்லா மாநிலத்தவரும் எல்லோருடனும் பேசலாம். உலகோடும் பேசலாம்.

    ஹிந்தி முற்றிலும் தேவையற்றது. தமிழர்கள் தலைகீழாக நின்றாலும் வடமாநிலத்தவர் போல ஹிந்தியில் புலமை பெற முடியாது.
    அப்படி இருக்கும்போது இது தேவையற்ற ஆதிக்கத்தை பல வழிகளில் ஏற்படுத்தும்..வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் இடத்தில், அரசியலில் மற்றும் பல.

    KM sir, நீங்களும் இவ்வாறு பேசுவது ஆச்சர்யமாக உள்ளது.

    • mekaviraj சொல்கிறார்:

      <<ஹிந்தி கற்றுத்தரப்படவேண்டும் என்பது சரியாக இருக்கும். நாம் இந்தியர் என்ற எண்ணமும்,

      புதியவன் இப்படி பேசுவது ஆச்சர்யம் இல்லை 😀 😀

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      mekaviraj,

      ஹிந்தி ஆட்சிமொழியாக இருக்கக்கூடாது என்று நீங்களோ,
      நானோ தீர்மானிக்க முடியாது;
      ஏனென்றால், நமது அரசியல் சாசனம், ஹிந்தியை மத்திய ஆட்சிமொழியாக ஏற்றிருக்கிறது.

      “பேசாமல் எல்லா மாநிலத்தவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிகவும் உபயோகமானது.”
      -இதைச் சொன்னால், ஹிந்தி பேசும் மாநிலத்தவர் யாரும்
      ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்… ஏனென்றால் –

      1) அவர்களுக்கு ஆங்கிலம் சுலபமாக வராது.

      2) இப்போதைய நிலைப்படி –
      அவர்களது தாய்மொழியும், அவர்களது மாநில மற்றும் மத்திய
      ஆட்சிமொழியும் – ஹிந்தி தான்.
      எனவே அவர்கள் ஹிந்தியை மட்டும் கற்றுக்கொண்டால் –
      அவர்களைப் பொறுத்தவரை அதுவே போதுமானது.
      எதற்காக சிரமப்பட்டு இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளப்
      போகிறார்கள்…?
      ………….

      இப்போது நாம் போராடுவது எல்லாம் –
      ஆங்கிலத்தை அகற்றி விட்டு,
      ஹிந்தியை மட்டுமே ஒரே ஆட்சி மொழியாக ஆக்க மத்திய அரசு
      முயல்வதை எதிர்த்து தான்.

      “ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை –
      ஆங்கிலமும் மத்திய அரசின் ஆட்சி மொழியாக நீடிக்கும் ”

      -என்று மத்திய அரசு நேருஜியின் ஆட்சியின்போது,
      பாராளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறது….

      மத்திய ஆட்சிமொழியைப் பொருத்தவரையில் –
      இந்த உறுதிமொழி தொடர வேண்டும் என்பது தான் நம் நிலை.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

    • புதியவன் சொல்கிறார்:

      //தமிழர்கள் தலைகீழாக நின்றாலும் வடமாநிலத்தவர் போல ஹிந்தியில் புலமை பெற முடியாது.// – தமிழர்கள் எப்படி நின்றாலும், ஆங்கிலத்தில் புலமை பெற முடியாது. இதுக்கு காரணம் ராக்கெட் சயன்ஸ் இல்லை. நமக்கு அது இன்னொரு மொழி, தாய் மொழி அல்ல. அந்த மொழி பேசும் சூழலிலும் நாம் இல்லை.

      தமிழகத்தில் எத்தனை ஆங்கிலப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களால், ஆங்கிலத்தில், ஆங்கிலேயனுக்குப் புரியும்படி பேச முடியும்?

      எதற்காக அரசு, இந்த மூன்று மொழிகளைத் தவிர மற்றவற்றிர்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறது? (உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம்) அதைப்பற்றி ஏன் யாருமே பேசுவதில்லையே?

  4. Ramaswamy thamilan சொல்கிறார்:

    hindi is a illiterate people language. If you would have visited / lived in north India and worked in middle east you can understand this. Hindi is a diluted form of persian and Arabic that’s all. A karachi and a baluchi can speak a better hindi. The reason why lazy north indians wants Hindi as official language is none of the biharis or UP can speak, read, write English. I met and travelled a lot in north and west. Also worked for years in middle east an Arabi will speak good hindi. And still i remember an Imam in Bahrain asked me to speak in Hindi the reason he told is Hindi and arabic are gateway to islam and the future belongs to islam only.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.